ஆலோசகர்கள் மற்றும் விநியோக பார்ட்னர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த 'ICICI Life Partner Stack 2.0' தளத்தை அறிமுகப்படுத்துகிறது ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்!
ஆலோசகர்கள் மற்றும் விநியோக பார்ட்னர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்த 'ICICI Life Partner Stack 2.0' தளத்தை அறிமுகப்படுத்துகிறது ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கருவிகள், ஆலோசகர்களுக்குப் பொருத்தமான தயாரிப்புப் பரிந்துரைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மேற்கோள்களை (quotations) வழங்கி உதவுகின்றன. விரிவான கூட்டாளர் இணைப்பு, டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்குவதோடு உற்பத்தித்திறனையும் உயர்த்துகிறது. தரவுத்தள இணைப்பு (Database integration) விண்ணப்பப் படிவத்தில் 70% வரையிலான விவரங்களை முன்பே நிரப்ப உதவுவதால், வாடிக்கையாளர்களைத் தடையின்றி எளிதாக இணைக்க முடிகிறது. சென்னை 31 ஆகஸ்ட் 2026 : ஐசிஐசிஐ பிரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், தனது 'பார்ட்னர் ஸ்டாக்' தளத்தை புதிய அம்சங்களுடன் 2026-இல் மேம்படுத்தி, 'ICICI Life Partner Stack 2.0' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தளம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கருவிகள், வலுவான அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் டிஜிட்டல் திறன்களை ஒன்றுதிரட்டி, விற்ப...