Airtel Business மற்றும் ITI Limited இடையே கூட்டணி: இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய முயற்சி
Airtel Business மற்றும் ITI Limited இடையே கூட்டணி: இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்த புதிய முயற்சி
• நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நவீனமயமாக்கி, பாதுகாப்பை வலுப்படுத்தி, வளர்ச்சியை விரைவுபடுத்த இந்தக் கூட்டணி உதவும்
• நிறுவனங்களின் ஒருங்கிணைந்த திறன்கள் மூலம் Enterprise Connectivity, Data Center & Sovereign Cloud Services, IoT, AI அடிப்படையிலான தீர்வுகள் மற்றும் Cybersecurity உள்ளிட்ட எதிர்காலத் தேவைகளுக்கேற்ற டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படும்
சென்னை, ஆகஸ்ட் 10, 2026: இந்தியாவின் முன்னணி பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல் தொடர்பு, தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு தீர்வுகள் வழங்குநரான Airtel Business, சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனமும், தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி உற்பத்தியாளருமான ITI Limited நிறுவனத்துடன் மூலோபாய கூட்டணியை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வரும் நிலையில், இந்தக் கூட்டணி மூலம் ITI Limited நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களையும், Airtel Business நிறுவனத்தின் வலுவான டிஜிட்டல் திறன்களையும் ஒருங்கிணைத்து, நிறுவனங்கள் தங்களது பழைய தொழில்நுட்ப அமைப்புகளை நவீனமயமாக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும், மாறிவரும் வணிகத் தேவைகளுக்கு விரைவாகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் உதவும்.
Enterprise Connectivity, Data Center & Sovereign Cloud Services, IoT, AI அடிப்படையிலான தீர்வுகள், LEO Satellite Services, Cybersecurity உள்ளிட்ட பல்வேறு எதிர்காலத் தேவைகளுக்கேற்ற, விரிவாக்கத்துக்கு ஏற்ற டிஜிட்டல் தீர்வுகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதன் மூலம், நிறுவனங்கள் தங்களது பழைய தொழில்நுட்ப அமைப்புகளால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும், டிஜிட்டல் கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தவும், எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் இந்தக் கூட்டணி உதவும்.
Rajesh Rai, Chairman and Managing Director, ITI Limited, கூறுகையில், “இந்த முக்கியமான தருணத்தில் ITI Ltd. மற்றும் Bharti Airtel Ltd. இணைந்து, எங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்கான இந்த MoU-வில் கையெழுத்திட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இரு நிறுவனங்களின் இந்தக் கூட்டணி, வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மாற்றத் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதிவேக மற்றும் பரந்த அளவிலான இணைப்பு வசதிகள், Hyper-scale Data Centers, Cybersecurity Solutions, IoT உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தக் கூட்டணி புதிய தீர்வுகளை வழங்கும். மேலும், இரு நிறுவனங்களின் வணிக நோக்கு, வாடிக்கையாளர் அணுகல் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றில் உள்ள ஒருவருக்கொருவர் துணைபுரியும் திறன்களை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கும் இது வழிவகுக்கும்,” என்றார்.
Sharat Sinha, CEO - Airtel Business, கூறுகையில், “இந்தியா தனது அடுத்த கட்ட டிஜிட்டல் வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறி வரும் நிலையில், நம்பகத்தன்மை, இறையாண்மை மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கும் வகையிலான வலுவான டிஜிட்டல் அடித்தளத்தை உருவாக்குவது மிகவும் அவசியம். நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களின் நம்பகமான தொழில்நுட்பக் கூட்டாளராக, Airtel Business தொடர்ந்து சிக்கலான தொழில்நுட்ப அமைப்புகளை எளிமைப்படுத்தவும், பழைய தொழில்நுட்ப கட்டமைப்புகளை நவீனமயமாக்கவும், பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கலை மேற்கொள்ளவும் நிறுவனங்களுக்கு உதவி வருகிறது. தற்போது ITI Limited உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். வணிகத் தொடர்ச்சியை வலுப்படுத்தவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், இந்தியாவின் பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்திற்கு ஆதரவளிக்கவும் கூடிய எதிர்காலத் தேவைகளுக்கேற்ற தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதே இந்தக் கூட்டணியின் பொதுவான நோக்கமாகும்,” என்றார்.
இரு நிறுவனங்களின் டிஜிட்டல் திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம், பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பழைய மற்றும் தனித்தனி தொழில்நுட்ப அமைப்புகள், அதிகரித்து வரும் Cybersecurity அச்சுறுத்தல்கள், பெருகி வரும் தரவுத் தேவைகள் மற்றும் செயல்பாடுகளில் அதிக நெகிழ்வுத்தன்மை தேவை போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்ள இந்தக் கூட்டணி உதவும்.
இந்த மூலோபாய கூட்டணியின் கீழ், நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு உருவாக்கப்படும். இதில் OFC, GPON, SD-WAN மற்றும் Private 4G/5G உள்ளிட்ட அதிவேக Enterprise Connectivity சேவைகளுடன், பாதுகாப்பான Data Center மற்றும் Sovereign Cloud Services ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.
வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) போன்ற அதிக அளவிலான ஒழுங்குமுறை தேவைகள் கொண்ட துறைகளுக்கு ஏற்ற வகையில் இந்தத் தீர்வுகள் வடிவமைக்கப்படும். மேலும், தொழில்துறை IoT அடிப்படையிலான Asset Tracking, AI அடிப்படையிலான Analytics மற்றும் Full-stack Cybersecurity Solutions ஆகியவையும் இதில் இடம்பெறும்.
இதனுடன், புதுமை, Make in India மற்றும் Atmanirbhar Bharat ஆகிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் Defence தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான தீர்வுகளை உருவாக்கவும் இந்தக் கூட்டணி முயற்சிக்கும்.
Airtel Business என்பது இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான Bharti Airtel நிறுவனத்தின் வணிகப் பிரிவாகும். Secure Connectivity, Sovereign Cloud மற்றும் Data Center Services, Cybersecurity, IoT மற்றும் Cloud-based Communication உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் தீர்வுகளை Airtel Business வழங்கி வருகிறது.

Comments
Post a Comment