மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

 மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

ஹில்ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட், குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஒரு சிறு பங்கைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த முதலீடு, நிறுவனத்தின் தனித்துவமான பொறியியல் மாதிரி, உலகளாவிய வளர்ச்சி மற்றும் நீண்டகால வளர்ச்சி உத்தி ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது

சென்னை, பிப்ரவரி 25, 2026: மிகப்பெரிய தனியார் துறை சுயாதீன, குறிப்பிட்ட சேவையில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் மற்றும் உலகின் முன்னணி உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஹில்ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட் ("ஹில்ஹவுஸ்") நிறுவனம் ஆகியவை, ஹில்ஹவுஸ், குவெஸ்ட் குளோபலில் ஒரு சிறுபான்மை முதலீடு செய்வதற்கான உறுதியான ஒப்பந்தங்களில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதை இன்று அறிவித்தன.

இந்த பரிவர்த்தனைகள், குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தினுள் ஒரு முதன்மை மூலதன முதலீடு மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஏற்கனவே உள்ள பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை வாங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கும். குவெஸ்ட் குளோபல், அதன் மூலோபாய முன்னுரிமைகளை அடைய, இந்த கூடுதல் மூலதனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும். ஹில்ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்ட நிதிகள் மூலம் இந்த முதலீடு செய்யப்படும்.

இந்த முன்னேற்றம் குறித்து பேசிய குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் பிரபு, "உலகின் மிகவும் கடினமான பொறியியல் சவால்களுக்கு மிகவும் நம்பகமான கூட்டாளராக இருப்பதற்கான 



எங்கள் பயணத்தில், உலகளாவிய பிராண்ட் பெயர் கொண்ட முதலீட்டு மேலாளர் ஹில்ஹவுஸ் நிறுவனத்தால் செய்யப்பட்ட இந்த முதலீடு ஒருமுக்கியமான முன்னேற்றமாக இருக்கிறது. அவர்களின் முதலீடு, எங்களின் தனித்துவமான மதிப்பு முன்மொழிவு, நிதி மற்றும் செயல்பாட்டு நெறிமுறை, மற்றும் நீண்டகால வளர்ச்சி உத்தி ஆகியவற்றின் வலிமையை உறுதிப்படுத்துகிறது. நாளைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிற இன்றைய பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிற நவீன பொறியியல் திறன்களில் மேலும் முதலீடு செய்யும் நாங்கள், ஹில்ஹவுஸ் உடன் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளோம்." என்றார்.

உலகளாவிய முதலீட்டு நிறுவனமான தி கார்லைல் குரூப்பின் ஆதரவுடன், முன்னணி உலகளாவிய OEM களுக்கான நம்பகமான நீண்டகால பொறியியல் கூட்டாளியாக தனது நிலையை வலுப்படுத்துகின்ற வகையில் குவெஸ்ட் குளோபல் பல ஆண்டுகளாக தனது நிர்வாக கட்டமைப்பு, மூலதன அடித்தளம் மற்றும் உலகளாவிய விரிவாக்க உத்தியை வலுப்படுத்தியுள்ளது.

ஹில்ஹவுஸ் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் கூட்டாளர் மற்றும் குளோபல் பைஅவுட் இணைத் தலைவரான சீன் கார்னி கூறுகையில், ", ஆழமான டொமைன் நிபுணத்துவம் மற்றும் ஒரு உயர் திறன் கொண்ட உலகளாவிய பணியாளர்களின் ஆதரவுடன், உலகின் மிகவும் மதிப்புமிக்க சில OEMகளுக்கு நம்பகமான பொறியியல் கூட்டாளராக குவெஸ்ட் குளோபல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. முக்கியமான பணிகளை மையமாகக் கொண்ட திட்டங்கள், நீண்டகால வாடிக்கையாளர் உறவுகள் மற்றும் நெறிமுறைப்படுத்தப்பட்ட செயலாக்கம் ஆகியவற்றில் இந்த நிறுவனத்தின் கவனம், விண்வெளி, வாகனம், எரிசக்தி மற்றும் குறைக்கடத்திகள் போன்ற உயர் வளர்ச்சித் துறைகளில் நிலையான அளவில் வளர உதவியுள்ளது. அதிநவீன பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்திற்கான அதிகரித்து வரும் உலகளாவிய தேவையிலிருந்து பயனடைய குவெஸ்ட் குளோபல் நல்ல நிலையில்நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். அதன் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் நீண்டகால மதிப்பு 


உருவாக்கத்தை ஆதரிக்க நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம். ”என்றார்.

இந்தப் பரிவர்த்தனை வழக்கமான நிறைவு நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இந்தப் பரிவர்த்தனையில் ஜெஃப்ரிஸ், குவெஸ்ட் குளோபல் இன் பிரத்யேக நிதி ஆலோசகராகப் பணியாற்றினார்.

 

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Airtel Reinforces its Culture of Customer Obsession

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது