இந்தியாவினுள் தனது சேவையை விரிவுபடுத்தும் உபெர் நிறுவனம் மேலும் 100 நகரங்களில் களமிறங்குகிறது

 இந்தியாவினுள் தனது சேவையை விரிவுபடுத்தும் உபெர் நிறுவனம் மேலும் 100 நகரங்களில் களமிறங்குகிறது

Uber Bike உடனான விரிவாக்கம் மூலம் சேவை வழங்கப்படும் மொத்த நகரங்களின் எண்ணிக்கை 225-ஐ எட்டியுள்ளது

சென்னை, ஆகஸ்ட்17, 2026: உபெர் நிறுவனம் இந்தியாவில் தனது சேவைகளை மேலும் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தி, நாடு முழுவதும் தனது இருப்பை 225 நகரங்களுக்கு கொண்டு செல்கின்ற வகையில், அதன் மிகப்பெரிய விரிவாக்கங்களில் ஒன்றை இன்று அறிவித்துள்ளது. Uber Bike மூலம் இயக்கப்படும் இந்த விரிவாக்கம், பல்லாயிரக்கணக்கான உள்ளூர் ஓட்டுனர்களுக்கு புதிய நெகிழ்வான வருமான வாய்ப்புகளை உருவாக்குகின்ற அதே வேளையில் மலிவான விலையில் நம்பகமான போக்குவரத்து வசதியை இந்தியாவின் சிறிய நகரங்களுக்கும் கொண்டு செல்கிறது.

வடக்கே ஜம்மு முதல் தெற்கே திருநெல்வேலி வரையிலும், கிழக்கே சில்சார் முதல் மேற்கே ஜாம்நகர் வரையிலும் உள்ள பல்வேறு புதிய நகரங்களில் அன்றாடப் பயணங்களுக்கும், முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பிற்கும் மலிவு விலை விருப்பத்தை வழங்குகின்ற Uber Bike சேவையை உபெர் நிறுவனம் தொடங்கவுள்ளது. இந்தியாவின் பெரிய நகரங்களுக்கு அப்பால் உபெர் இன் இருப்பை கணிசமாக ஆழப்படுத்துகின்ற இந்த விரிவாக்கம் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கியது. 

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, உபெர் ஐ இந்தியாவின் மிகவும் விருப்பமான போக்குவரத்து செயலிகளில் ஒன்றாக மாற்ற உதவியுள்ள செயலி-சார்ந்த போக்குவரத்து சேவையின் வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களை அனுபவிக்குமாறு பெருமளவு இந்தியர்களுக்கு அழைப்பு விடுவிக்கின்ற வகையில், உபெர் நிறுவனம், நாடு முழுவதும் முதல்முறையாக உபெர் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் முதல் பயணத்தையும் இலவசமாக வழங்குகின்றது. 

இந்திய அரசின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. நிதின் கட்கரி கூறுகையில்,"இந்தியாவின் வளர்ந்து வரும் சாலை வலையமைப்பு சிறிய நகரங்களை இணைக்கிறது மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குகின்ற அதே வேளையில் மேலும் பல இந்தியர்களுக்கு மலிவு போக்குவரத்தையும் வழங்குகின்ற உபெர் நிறுவனம் மேலும் 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்வதை நான் பாராட்டுகிறேன். மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டு நெறிமுறைகள் 2025, மாநிலங்களுக்கு பைக் டாக்ஸிகள் மற்றும் பிற புதிய இயக்கத் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள ஒரு தெளிவான பாதையை வழங்குகின்றன. மேலும், மாநிலங்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் குடிமக்களுக்கு மலிவான விலையில் முதல்- மற்றும் கடைசி மைல் இணைப்பை வழங்கவும், அதே நேரத்தில் பெருமளவில் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கவும் நான் வலியுறுத்துகிறேன். 'சடக் சுரக்ஷா அபியான்' (Sadak Suraksha Abhiyaan) உடனான உபெர் நிறுவனத்தின் கூட்டாண்மையானது, போக்குவரத்து வளர்ச்சியும் பாதுகாப்பான சாலைகளும் ஒன்றிணைந்து செல்வதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது."என்றார்.

உபெர் இந்தியா & தெற்காசியா நுகர்வோர் & வளர்ச்சி இயக்குநர் ரிஷாந்த் கோஷ் கூறும்பொழுது," நாங்கள் இந்தியாவிற்குள் உபெர் சேவையை மேலும் விரிவுபடுத்தி, லட்சக்கணக்கானோருக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையிலான போக்குவரத்து வசதிகளுக்கான அணுகலை வலுப்படுத்துகின்ற வகையில், 100 புதிய நகரங்களுக்கு விரிவாக்கம் என்பது ஒரு முக்கியமான மைல் கல்லைக் குறிக்கிறது. வசதியான போக்குவரத்துக்கான விருப்பம் ஒரு சிறிய நகரத்திலும் சரி, ஒரு பெருநகரத்திலும் சரி எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல, அந்தத் தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் முதலீடு செய்கிறோம். உள்ளூர் ஓட்டுநர்களுக்கு நெகிழ்வான வருமான வாய்ப்புகளை உருவாக்குகின்ற அதே வேளையில் அன்றாடப் பயணங்களுக்கு மலிவு விலையில் மற்றும் வசதியான விருப்பத்தை வழங்குகின்ற Uber Bike குறிப்பாக இந்த சந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்தியாவில் 220 நகரங்களை நாங்கள் கடந்த நிலையில், நாடு முழுவதும் மேலும் மில்லியன் 


கணக்கான மக்களுக்கு சேவை சேவை செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி நாங்கள் தொடர்ந்து உற்சாகமாக உள்ளோம்."என்று கூறினார்.

இந்த விரிவாக்கம், இந்தியாவின் அன்றாடப் போக்குவரத்தில் இருசக்கர வாகனங்களின் வளர்ந்து வரும் பங்கின் அடிப்படையில் அமைந்துள்ளது. சவாரி செய்பவர்களுக்கு, Uber Bike குறுகிய தூரப் பயணங்களுக்கு பயணம் செய்யவும், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும், பொதுப் போக்குவரத்துடன் இணைக்கவும் மலிவு விலை வழியை வழங்குகிறது. ஓட்டுநர்களுக்கு, ஏற்கனவே தங்களுக்குச் சொந்தமான ஒரு சொத்தைப் பயன்படுத்தி, நெகிழ்வுத்தன்மையுடன் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளைப் பெறுவதற்கான எளிய வழியை இது வழங்குகிறது.

இந்த பைக் சேவையானது, பொதுப் போக்குவரத்துடனான இணைப்புகளுடன் சேர்த்து, அன்றாடப் பயணங்களுக்கு பைக் மற்றும் ஆட்டோ முதல், கார்கள், விமான நிலையப் பயணங்கள் மற்றும் இன்டர்சிட்டி வரை பயணிகள் எவ்வாறு, எப்போது, எங்கு பயணிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கு அதிகத் தேர்வுகளை வழங்குகின்ற இந்தியாவிற்கான பல்வேறு போக்குவரத்து வழிமுறைகளைக் கொண்ட ஒரு மேடையை உருவாக்கும் உபெர் நிறுவனத்தின் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக இருக்கிறது. 

ஒவ்வொரு Uber Bike பயணமும், உபெரின் செயலியிலேயே உள்ள பாதுகாப்பு அம்சங்களின் தொகுப்பால் ஆதரிக்கப்படுகிறது. அவற்றில் பயணிகள் அதிக நம்பிக்கையுடன் பயணிக்க உதவுகின்ற நிகழ்நேர ஓட்டுனர் அடையாள சரிபார்ப்பு, செயலியிலேயே இயங்கும் SOS பொத்தான், பயண நிலையைப் பகிர்தல் மற்றும் உபர் இன் 24x7 பாதுகாப்பு உதவி எண் ஆகியவை அடங்கும்.

உங்கள் முதல் பயணம் எங்கள் சார்பில் இலவசம்

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள புதிய பயணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களின் முதல் Uber பயணத்தை இலவசமாக அனுபவிக்கலாம்.*


Uber Bike ஐ எவ்வாறு முன்பதிவு செய்வது

Uber ஆப்-ஐ பதிவிறக்கவும் அல்லது திறக்கவும்


நீங்கள் புறப்படும் இடம் மற்றும் இறங்கும் இடத்தை உள்ளிடவும்


கிடைக்கும் பயண விருப்பங்களிலிருந்து Uber Bike ஐ தேர்வு செய்யவும்


உங்கள் பயணத்தை உறுதிப்படுத்தவும், அருகிலுள்ள ஒரு ஓட்டுநருடன் இணைக்கப்படவும்


Uber செயலி மூலம் உங்கள் பயணத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும்

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.



Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Apollo OMR Marks a Milestone in Robotic Joint Replacement:

Airtel Reinforces its Culture of Customer Obsession