ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது
ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது
சென்னை, அக்டோபர் 15, 2025 – இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனது ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக ஐபிஎம் (IBM) (NYSE:IBM) நிறுவனத்துடன் ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இந்தக் கூட்டாண்மை, தொலைத்தொடர்பு தரநிலைக்கேற்ற நம்பகத்தன்மை, உயர் பாதுகாப்பு மற்றும் தரவு இருப்பிட வசதிகள் கொண்ட ஏர்டெல் கிளவுட் தளத்தையும், கிளவுட் தீர்வுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் முன்னணித் தலைமையையும், செயற்கை நுண்ணறிவு (AI) இன்ஃபரன்சிங் நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைக்கிறது.
ஏர்டெல்லும் ஐபிஎம்மும் இணைந்து, ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் ஏஐ ஒர்க்லோடுகளை மேலும் திறம்பட விரிவுபடுத்தவும் அவை பிரிமைஸ், கிளவுட், பல கிளவுடுகள், எட்ஜ் போன்றவைகளை உள்ளடக்கிய கட்டமைப்புக்கு இடையில் தடையின்றி இயங்கவும் உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
இந்தக் கூட்டாண்மையின் மூலம் ஏர்டெல் கிளவுட் வாடிக்கையாளர்கள் வங்கி, சுகாதாரம், அரசு மற்றும் பிற ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்களில் மிஷன்-கிரிட்டிக்கல் அப்ளிகேஷன்களுக்கான சமீபத்திய தலைமுறை ஐபிஎம் பவர்11 ஆட்டோனோமஸ், AI-ரெடி செர்வர்கள் உட்பட, ஐபிஎம் பவர் அமைப்புகள் துறையை ஒரு சேவையாகப் பயன்படுத்த முடியும். பவர்11 ஹைப்ரிட் தளம், ஐபிஎம் பவர் AIX, ஐபிஎம் i, லினக்ஸ் மற்றும் SAP கிளவுட் ERP உள்ளிட்ட முக்கியமான நிறுவன பணிச்சுமைகளையும் ஆதரிக்கும். கூடுதலாக, இந்த கூட்டாண்மை, ஐபிஎம் பவரில் உள்ள SAP வாடிக்கையாளர்களை ஐபிஎம் பவர் விர்ச்சுவல் செர்வரில் SAP கிளவுட் ERP ஆகத் தங்கள் என்டர்பிரைஸ் ரிசோர்ஸ் பிளேனிங் டிரான்ஸ்ஃபர்மேஷனுடன் செயல்படுத்த உதவும்.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் பின்வருமாறு கூறினார்: “ஏர்டெல் கிளவுட் மிகுந்த பாதுகாப்புடனும் ஒழுங்குமுறை இணக்கத்தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது; இது தொழில்துறையைப் பொறுத்தவரையில் புதிய அளவுகோல்களை நிர்ணயிக்கும், வினைத்திறன் மிகுந்த மற்றும் தாங்கு திறன் கொண்ட கிளவுட் தளமாகும். இன்று, ஐபிஎம் (IBM) நிறுவனத்துடன் இணைந்துள்ள இந்தக் கூட்டாண்மையின் மூலம், எங்கள் கிளவுட் தளத்தில், ஐபிஎம் பவர் சிஸ்டம்ஸிலிருந்து மைக்ரேஷன் தேவைப்படும் மற்றும் ஏஐ பயன்பாட்டுக்குத் தயாராகும் பல துறைகளின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்ய முக்கியமான திறன்களை இணைத்திருக்கிறோம். இந்தக் கூட்டாண்மையின் மூலம், இந்தியாவில் எங்களது சேவை கிடைக்கும் மண்டலங்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து பத்தாக விரிவுபடுத்தி, அவற்றை எங்கள் சொந்த அடுத்த தலைமுறை நிலைத்திருக்கும் டேட்டா சென்டர்களில் நடத்த உள்ளோம். மேலும், நாங்கள் இணைந்து விரைவில் மும்பை மற்றும் சென்னையில் இரண்டு புதிய மல்டி-சோன் ரீஜியன்களை (MZRs) அமைக்கவிருக்கிறோம்.”
ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் தலைமை வணிக அதிகாரி ராப் தாமஸ் கூறும்போது “இன்றைய நிறுவனங்கள், வளர்ந்து வரும் ஒழுங்குமுறை சார்ந்த தொழில்நுட்ப மற்றும் ஏஐ தேவைகளுடன் தங்களின் நவீனமயமாக்கும் முயற்சிகளை சமநிலைப்படுத்த வேண்டும். பாரதி ஏர்டெல்லுடனான எங்களது கூட்டாண்மையின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுடைய உத்திசார்ந்த வணிக முன்னுரிமைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஐபிஎம் நிறுவனத்தின் புதுமையான கிளவுட் தீர்வுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாங்கள் இணைந்து, ஏஐ காலத்தில் வாடிக்கையாளர்களை உண்மையான உருமாற்றத்தை உருவாக்க வல்லவர்களாக மாற உதவுவோம்.” என்றார்
ஐபிஎம் வாட்சன்எக்ஸ் மற்றும் ரெட் ஹாட் ஓபன்ஷிஃப்ட் ஏஐ ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஐபிஎம் நிறுவனத்தின் ஏஐ இன்ஃபரன்சிங் மென்பொருள் தொகுப்பின் மூலம், இந்திய வாடிக்கையாளர்கள் தங்கள் ஹைப்ரிட் கிளவுட் சூழல்களில் ஏஐ இன்ஃபரன்சிங் இயங்குதிறனைப் பெறுவார்கள். இந்த திறன்கள், ஐபிஎம் நிறுவனத்தின் எண்டர்பிரைஸ்-தர கிளவுட் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன; இதில் புதுமையான IaaS மற்றும் PaaS தீர்வுகளும் அடங்கும். இதனுடன், ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தை முக்கியமான நிறுவன ஒர்க்ஃப்ளோக்களில் துரிதப்படுத்தி உற்பத்தித்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட ஐபிஎம் ஆட்டோமேஷன் போர்ட்ஃபோலியோவையும் இது உள்ளடக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள், ரெட் ஹேட் நிறுவனத்தின் ஹைப்ரிட் கிளவுட் தீர்வுகளை— அதாவது ரெட் ஹேட் ஓபன்ஷிஃப்ட் வெர்ச்சுவலைசேஷன் ரெட் ஹேட் ஓபன்ஷிஃப்ட் மற்றும் ரெட் ஹேட் ஏஐ — அணுக முடியும். இந்தத் திறன்களைத் தாண்டி, ஐபிஎம் ஹைப்ரிட் கிளவுட் ஆர்கிடெக்சர் வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் ஏஐ மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் புதுமைகளை உருவாக்க உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் மல்டி சோன் ரீஜியன்ஸ் இந்திய நிறுவனங்களுக்கு தங்களின் தாங்குதன்மையை வலுப்படுத்தவும், டேட்டா ரெசிடென்சி தேவைகளைப் பூர்த்தி செய்யவும், முக்கிய பணிச்சுமைகள் மற்றும் அப்ளிகேஷன்களை எப்போதும் தொடர்ந்து இயங்க வைக்கும் திறனை வழங்கும். ஏர்டெல் மற்றும் ஐபிஎம் (IBM) இணைந்த கூட்டாண்மை, இந்திய நிறுவனங்கள் தங்களின் டிஜிட்டல் புத்தாக்கத்தைப் பெரும் அளவில் வேகப்படுத்துவதற்கு வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.
ஐபிஎம் நிறுவனத்தின் எதிர்கால திசை மற்றும் நோக்கம் குறித்த அறிக்கைகள், முன்னறிவிப்பின்றி மாற்றப்படவோ அல்லது திரும்பப்பெறப்படவோ வாய்ப்புள்ளது; அவை வெறும் இலக்குகள் மற்றும் நோக்கங்களையே குறிக்கின்றன..
Comments
Post a Comment