மொபைல் மற்றும் தொலைக்காட்சிக்காக Sun NXT Shorts மூலம் மைக்ரோ-டிராமா துறையில் களமிறங்கும் Sun TV நெட்வொர்க்

 மொபைல் மற்றும் தொலைக்காட்சிக்காக Sun NXT Shorts மூலம் மைக்ரோ-டிராமா துறையில் களமிறங்கும் Sun TV நெட்வொர்க்



மைக்ரோ-டிராமாக்களை 4:3 வடிவில் தொலைக்காட்சித் திரைகளில் காணும் அனுபவத்தை அறிமுகப்படுத்தும் தென்னிந்தியாவின் முதல் தளம்

150-க்கும் மேற்பட்ட தலைப்புகள் மற்றும் ஒரிஜினல் உள்ளடக்கங்கள்; வெற்றிப்படங்கள் மற்றும் ரசிகர்கள் விரும்பும் Sun TV தொடர்கள் வேகமான குறுவடிவ எபிசோட்களாக முழுமையாக மறுவடிவமைப்பு


சென்னை, ஆகஸ்ட் 21, 2026: தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான Sun TV நெட்வொர்க், தனது பிரத்யேக மைக்ரோ-டிராமா தளமான Sun NXT Shorts-ஐ இன்று அறிமுகப்படுத்தியது. பிராந்திய டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த முயற்சி, தற்போதுள்ள Sun NXT தளத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக செயல்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தனியாக வேறு செயலிக்குச் செல்லாமல், Sun NXT செயலிக்குள்ளேயே ஒருங்கிணைந்த பார்வை அனுபவத்தை பெற முடியும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள பார்வையாளர்களின் மாறிவரும் உள்ளடக்க நுகர்வு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, சுருக்கமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதையம்சங்களை வழங்கும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த அறிமுகத்தின் மூலம், வேகமாக வளர்ந்து வரும் மைக்ரோ-என்டர்டெயின்மென்ட் (Micro-Entertainment) பிரிவில் Sun NXT தனது முக்கியமான மூலோபாய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் டிஜிட்டல் தலைமுறை பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த வடிவம், சில நிமிடங்களிலேயே ரசிக்கக்கூடிய ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதைகளைக் கொண்டது. Sun TV நெட்வொர்க்கின் பல தசாப்த கால பிராந்திய கதை சொல்லும் அனுபவத்தையும், புதிய தலைமுறை குறுவடிவ உள்ளடக்க அணுகுமுறையையும் இணைக்கும் Sun NXT Shorts, தென்னிந்திய பார்வையாளர்களின் தனித்துவமான கலாச்சார அடையாளங்களை பிரதிபலிக்கும் கதைகளையே கதைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த தளத்தில் பிரத்யேக ஒரிஜினல் தொடர்கள், சர்வதேச டப்பிங் செய்யப்பட்ட குறுந்தொடர்கள், வெற்றிப்படங்கள் மற்றும் Sun NXT நூலகத்தில் உள்ள ரசிகர்கள் விரும்பும் Sun TV தொடர்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வேகமான குறுவடிவ எபிசோட்களாக மறுசீரமைக்கப்பட்டு, புதிய வடிவமைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களையும் தொடர்களையும் முற்றிலும் புதிய டிஜிட்டல் அனுபவத்தில் ரசிக்க முடியும்.


குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’, சூர்யாவின் ‘அயன்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற பிரபல திரைப்படங்களும், ‘எதிர்நீச்சல்’, ‘கயல்’, ‘சுந்தரி’ போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களும், இன்றைய டிஜிட்டல் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப சுருக்கமான, தொடர்ச்சியான மற்றும் விறுவிறுப்பான எபிசோட்களாக புதிய வடிவில் வழங்கப்படுகின்றன.


வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ப, தொடர்ச்சியாக புதிய கதைகளை வழங்கும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்றவாறு காட்சியமைப்பை மாற்றியமைக்கும் தொழில்நுட்ப வசதியையும் கொண்டுள்ளது. மொபைல் சாதனங்களில் நெருக்கமான காட்சிகளையும், தொலைக்காட்சித் திரைகளில் 4:3 வடிவில் முழுமையான காட்சியமைப்பையும் வழங்குவதன் மூலம், ஒவ்வொரு திரைக்கும் ஏற்ற சிறந்த பார்வை அனுபவத்தை உறுதி செய்கிறது.


இந்த அறிமுகம் குறித்து Sun TV நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் செல்வி. காவ்யா மாறன் கூறுகையில்,"தென்னிந்தியாவில் உள்ளடக்கங்களை ரசிக்கும் விதம் வேகமாக மாறிவருகிறது. பார்வையாளர்கள் இன்று அதிகமான திரைகளில், குறுகிய நேரங்களில், தங்களுக்குப் பிடித்த உள்ளடக்கங்களை எளிதாக அணுக விரும்புகின்றனர். இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் Sun NXT Shorts. 65,000 மணிநேரத்திற்கும் அதிகமான உள்ளடக்கங்கள், பல ஆண்டுகளாக உருவாக்கிய கதை சொல்லும் அனுபவம் மற்றும் வலுவான விநியோக வலையமைப்பு ஆகியவை எங்களின் மிகப்பெரிய பலமாக உள்ளன. இந்த வலிமைகளை புதிய தலைமுறை பார்வையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமையான வடிவில் வழங்குவதே எங்களின் நோக்கம். ஒரு புதிய போக்கை பின்தொடர்வதற்காக அல்லாமல், தென்னிந்தியாவில் மைக்ரோ-டிராமா பொழுதுபோக்கிற்கான புதிய அளவுகோலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறோம்," என்றார்.” 


Sun NXT Shorts, ஏற்கனவே Sun NXT செயலியைப் பயன்படுத்தி வரும் குடும்ப பார்வையாளர்களை மேலும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேகமான கதை சொல்லல் வடிவத்தை விரும்பும் இளம் டிஜிட்டல் பார்வையாளர்கள் மற்றும் Gen Z தலைமுறையினருக்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஒரிஜினல் உள்ளடக்கங்களும் இதில் இடம்பெறுகின்றன. இதன் மூலம், பல தலைமுறைகளை பல்வேறு திரைகள் வழியாக இணைக்கும் பொழுதுபோக்கு தளமாக இது உருவாகிறது.


மைக்ரோ-என்டர்டெயின்மென்ட் துறையில் உருவாகி வரும் வாய்ப்புகள் குறித்து Sun NXT தலைவர் திரு. ராகேஷ் சி.கே. கூறுகையில்,"இன்றைய பார்வையாளர்கள் ஆழமான கதைகளை விரும்புகிறார்கள். ஆனால் அவற்றை அனுபவிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்க விரும்புவதில்லை. அந்த இடைவெளியை நிரப்புவதே Sun NXT Shorts. குறுகிய நேரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விறுவிறுப்பான எபிசோட்கள் மூலம், அன்றாட வாழ்க்கையின் சிறிய நேரங்களிலும் சிறந்த பொழுதுபோக்கை வழங்குகிறோம். இது எங்களுடைய உள்ளடக்க நூலகத்தை புதிய வடிவத்தில் வழங்குவது மட்டுமல்ல; பார்வையாளர்களுடன் ஆழமான உணர்வுப்பூர்வமான தொடர்பு கொண்ட எங்களின் பழைய உள்ளடக்கங்களையும், இந்த வடிவத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஒரிஜினல் படைப்புகளையும் இணைக்கும் இரட்டை அணுகுமுறையாகும். ஒரே கதையை மொபைலில் நெருக்கமான அனுபவமாகவும், தொலைக்காட்சியில் விரிவான காட்சியமைப்புடன் கூடிய அனுபவமாகவும் வழங்குகிறோம். உலகளாவிய அளவில் உருவாகி வரும் இந்த வடிவ மாற்றத்தில் தென்னிந்திய கதை சொல்லல் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், அதனை வழிநடத்தும் நிலையை அடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்," என்றார்.


பிராந்திய கதை சொல்லலில் Sun TV நெட்வொர்க்கின் இணையற்ற பாரம்பரியத்தையும், படைப்பாளிகளை மையமாகக் கொண்ட வலுவான உள்ளடக்க சூழலையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள Sun NXT Shorts, தென்னிந்தியாவின் பல்மொழி குறுவடிவ பொழுதுபோக்கு புரட்சியை வரையறுத்து வழிநடத்தும் தளமாக உருவெடுக்கத் தயாராக உள்ளது.


பார்வையாளர்கள் இன்று Sun NXT செயலியைப் பதிவிறக்கம் செய்து, Sun NXT Shorts வழங்கும் வேகமான மற்றும் சுவாரஸ்யமான கதைகளின் உலகத்தை அனுபவிக்கலாம்.


Watch Sun NXT Short - You Tube Promo: https://www.youtube.com/watch?v=iXXBSrF5fTU  


சன் நெக்ஸ்ட் (Sun NXT) பற்றிய குறிப்பு:


சன் நெக்ஸ்ட் (SUN NXT) என்பது சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் (SUN TV Network Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் அதன் கீழ் இயங்கும் ஒரு முன்னணி ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் (OTT) தளமாகும். இத்தளம் 65,000 மணிநேரத்திற்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், 4,300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 44-க்கும் அதிகமான நேரலை தொலைக்காட்சி சேனல்கள் (Live TV Channels), சூப்பர்ஹிட் சீரியல்கள், நகைச்சுவைக் காட்சிகள், இசை வீடியோக்கள், ஷார்ட்ஸ், திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் டிரெய்லர்கள் போன்ற பலதரப்பட்ட உள்ளடக்கங்களைத் தன் வசம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய 8 மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.


இதன் பிரம்மாண்டமான உள்ளடக்கக் களஞ்சியம் (Library) பல்வேறு மொழிகள், பிரிவுகள் (Genres) மற்றும் வடிவங்களில் ரசிகர்களுக்குப் பலதரப்பட்ட பொழுதுபோக்குத் தேர்வுகளை வழங்குகிறது. சன் நெக்ஸ்ட் தளம், பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான திரைகளிலும் சாதனங்களிலும் (Devices) தடையின்றிப் பொழுதுபோக்கை ரசிக்கும் வசதியை வழங்குகிறது. மேலும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட உள்ளடக்கங்கள், மிகச்சிறந்த காட்சித் தரத்திற்காக டால்பி விஷன் (Dolby Vision), ஹெச்டிஆர் 10+ (HDR 10+) மற்றும் 4கே (4K) தொழில்நுட்பங்களிலும்; அதிவேக மற்றும் துல்லியமான ஆடியோவிற்காக டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital+) தொழில்நுட்பங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


பல்வேறு சாதனங்களில் தடையற்ற மற்றும் நேர்த்தியான காட்சி அனுபவத்தை (Seamless viewing experience) வழங்குவதன் மூலம், சன் நெக்ஸ்ட் பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது. இது அனைத்து மொழிகள் மற்றும் அனைத்து ரசனை கொண்ட மக்களுக்கான ஒரு முழுமையான ஓடிடி (OTT) தளமாகத் திகழ்கிறது.


சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ் (Sun NXT Shorts) பற்றிய குறிப்பு:


சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ் (Sun NXT SHORTS) என்பது சன் நெக்ஸ்ட் (SUN NXT) செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு பிரத்தியேக குறுகிய வடிவ டிராமா (Short-form drama) பிரிவாகும். குறுகிய வடிவ வீடியோ பொழுதுபோக்கிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தில், 150-க்கும் மேற்பட்ட சீரிஸ்கள் மற்றும் ஒரிஜினல் படைப்புகள், சர்வதேச மொழிகளில் இருந்து டப் செய்யப்பட்ட குறுந்தொடர்கள், ரசிகர்களின் பேராதரவை பெற்ற சன் டிவி சீரியல்களின் ஷார்ட்ஸ் வடிவங்கள் மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் குறுகிய வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


விறுவிறுப்பான, சுவாரசியமான மற்றும் அடுத்தடுத்த அத்தியாயங்களை உடனே பார்க்கத் தூண்டும் (Binge-worthy) பொழுதுபோக்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ், மக்கள் ஏற்கனவே விரும்பிப் பார்த்த கதைகளையும், மண்ணின் மணமும் பிராந்திய அடையாளமும் மாறாத புதிய குறுங்கதைகளையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. சில நிமிடங்களிலேயே பார்த்து ரசிக்கக்கூடிய குறுகிய அத்தியாயங்களை விரும்பும் நவீன பார்வையாளர்களுக்காகவே இந்த வடிவம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.


சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ், மைக்ரோ-டிராமா (Micro-drama) பொழுதுபோக்கை மொபைல் திரைகளுக்குக் கொண்டு வருவதுடன், இந்தியாவிலேயே முதன்முறையாக, அதன் இயல்பான காட்சித் தரம் மாறாமல் தொலைக்காட்சித் திரைகளிலும் 4:3 வடிவத்தில் (Native 4:3 format) வழங்குகிறது.

 

கூடுதல் விபரங்களுக்கு, எம்எஸ்எல் இந்தியா (MSL India) 


Comments

Popular posts from this blog

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது

Apollo OMR Marks a Milestone in Robotic Joint Replacement: