ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு 'ஹேங்கர்' வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை

ஏற்கனவே வால்வு மாற்றப்பட்ட முதியவருக்கு சிறப்பு 'ஹேங்கர்' வால்வு சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை


ஏற்கனவே மிட்ரல் வால்வு மாற்றப்பட்ட நோயாளிக்கு, ஏஆர்டிக் வால்வு என்னும் மற்றொரு வால்வில் துளை ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது.

மிட்ரல் வால்வு மாற்றப்பட்ட ஒரு நோயாளிக்கு ‘ஹேங்கர்’ வால்வு பயன்படுத்தப்பட்டுள்ளது அரிதான ஒன்று.


சென்னை, அக்டோபர் 29, 2026: கடுமையான இதய வால்வு கசிவு நோயால் பாதிக்கப்பட்ட அறுபத்தி மூன்று வயது முதியவருக்கு, டாவர் எனப்படும் குறைந்த அளவு ஊடுருவல் சிகிச்சை முறையில் அதிநவீன ‘ஹேங்கர்’ (HANCHOR) செயற்கை வால்வை பொருத்தி வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது அல்வார்பேட்டை காவேரி மருத்துவமனை. 


நோயாளியின் ஏஆர்டிக் வால்வு இதழில் ஏற்பட்ட துளையே அவரது வால்வு கசிவிற்கு காரணம். அவருக்கு ஏற்கனவே மிட்ரல் வால்வு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பின்னணி கொண்ட ஒரு நோயாளிக்கு டாவர் சிகிச்சையில் ‘ஹேங்கர்’ வால்வு பொருத்தப்பட்டுள்ளது அரிதான ஒன்றாகும்.


இதயத்திலிருந்து உடலுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய தமனியான ஏஆர்ட்டாவிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது ஏஆர்டிக் வால்வின் பணியாகும். இந்த வால்வு சரியாக மூடாதபோது, இரத்தம் மீண்டும் இதயத்திற்குள் பின்னோக்கிப் பாயும். இதுவே ஏஆர்டிக் வால்வு கசிவு எனப்படும். இந்த முதியவருக்கு கசிவு மிகக் கடுமையாக இருந்தது. 


இந்த நோயாளிகளுக்கு பொருத்தப்படும் வால்வைத் தாங்குவதற்குப் போதிய கால்சியம் படிவுகள் இல்லாமல் இருந்தது. இதனால் புதிய வால்வைச் சரியான இடத்தில் நிலைநிறுத்தி உறுதியாகப் பொருத்தும் வாய்ப்பு குறைவாக இருந்தது. 

இதனால் மருத்துவக்குழு ‘ஹேங்கர்’ என்னும் வால்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தது. இது போதிய கால்சியம் படிவுகள் இல்லாத ஏஆர்டிக் வால்வில் உறுதியாகப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இது பலூன் மூலம் விரிவடையும் கட்டமைப்புடன், ‘நைட்டினாய்ல்’ எனும் நெகிழ்வுத்தன்மை கொண்ட உலோகக் கலவையால் ஆன சிறப்பு நங்கூரம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நங்கூர அமைப்பு, வால்வு இதழ்களுடன் பிணைந்து, புதிய வால்வை நிலைநிறுத்த உதவுகிறது.


டாவர் சிகிச்சையின் போது, இந்த மாற்று வால்வு கதீட்டர் குழாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு நோயாளியின் ஏஆர்டிக் வால்வுக்குள் பொருத்தப்பட்டது. இந்த ஊடுருவல் குறைந்த சிகிச்சை முறையின் மூலம், மருத்துவர்கள் வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் குறைபாடுள்ள வால்வை மாற்றினர்.


சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. சிகிச்சைக்கு பிறகு, ஏஆர்டிக் வால்வு கசிவோ, வால்வு குறுகுதல் அல்லது பொருத்தப்பட்ட வால்வைச் சுற்றி இரத்தக் கசிவோ எதுவும் ஏற்படவில்லை. இதயத்தின் மின் கடத்தல் அமைப்பிலும் எந்தவொரு குறிப்பிடத்தக்க பாதிப்பும் காணப்படவில்லை. நோயாளி மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 


சிகிச்சைக் குறித்துப் பேசிய ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையின் மூத்த இதய நிபுணர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் கூறுகையில்: “நோயாளிக்கு ஏற்கனவே செயற்கை மிட்ரல் வால்வு பொருத்தப்பட்டிருந்ததால் அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்வது சவாலான காரியமாக இருந்தது. மேலும் அவரது பாதிக்கப்பட்ட வால்வில் கால்சியம் படிவுகள் குறைவாக இருந்தது. ஆனாலும், ‘ஹேங்கர்’ வால்வு தொழில்நுட்பம் கை கொடுத்தது. அதன் சிறப்பு நங்கூர அமைப்பு வால்வை சரியான இடத்தில் நிலைநிறுத்த உதவியது. சிகிச்சைக்குப் பிறகு வால்வில் எந்தவொரு கசிவும் காணப்படவில்லை. சிக்கலான இதய அமைப்புக் குறைபாடுகளைக் கையாள தனிப்பட்ட சிகிச்சைத் திட்டமிடலும், நவீன வால்வு தொழில்நுட்பமும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சிகிச்சை நிரூபித்துள்ளது,” என்றார்.


காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்: “மருத்துவ நிபுணத்துவம், புதுமை மற்றும் சரியான மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மேம்பட்ட தீர்வுகளை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். சிறப்பு சிகிச்சை முறைகளையும், அனுபவமிக்க மருத்துவர்களின் நிபுணத்துவமும் இணைந்தால் சிக்கலான இதய நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதை இந்த சிகிச்சை.



Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Airtel Reinforces its Culture of Customer Obsession

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது