அதிநவீன ‘எக்மோ’ பல்லுறுப்பு உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு; காவேரி மருத்துவமனை அறிமுகம்

அதிநவீன ‘எக்மோ’ பல்லுறுப்பு உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு; காவேரி மருத்துவமனை அறிமுகம்

செயற்கை இதயம் மற்றும் நுரையீரலாக பயன்படும் பல்வேறு நவீன எக்மோ கருவிகளை கொண்ட இந்த அவசர சிகிச்சைப் பிரிவு வடபழனி காவேரி மருத்துவமனையில் இயங்கும். 
இப்பிரிவில் பல்லுறுப்பு அவசரப் சிகிச்சைகளும் எக்மோ சிகிச்சைகளோடு இணைந்து வழங்கப்படும்.

சென்னை, அக்டோபர் 13, 2026: சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை செயற்கையாகப் பூர்த்தி செய்யும் அதிநவீன 'எக்மோ' கருவிகளைக் கொண்ட பிரத்யேகப் பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பிரிவு, சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பிற உறுப்பு செயலிழப்புகளுக்கும் விரிவான அவசர சிகிச்சைகளை வழங்கும்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள எக்மோ மற்றும் பல்லுறுப்பு உயிர் காக்கும் பிரிவில் கடுமையான சுவாச செயலிழப்புக்கான விவி-எக்மோ, இதய செயலிழப்புக்கான விஏ-எக்மோ, இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் நிலையில் பயன்படுத்தப்படும் வி-ஏவி எக்மோ, நோயாளியை விழித்திருக்கும் நிலையில் வைத்திருக்கும் அவேக் எக்மோ, மற்றும் சாலை மற்றும் வான்வழியில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது பொருத்துவதற்கான எக்மோ போன்ற பல்வேறு சிறப்பு எக்மோ கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

விவி-எக்மோ, முக்கியமாக இரத்தத்தில் ஆக்சிஜனைச் சேர்த்து, கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதன் மூலம் நுரையீரலுக்கு சிகிச்சையளிக்கிறது; அதே வேளையில், இதயம் இரத்தத்தை திறம்பட உடலுக்கு அனுப்ப முடியாத போது விஏ-எக்மோ சுவாசம் மற்றும் ரத்த ஓட்டம் ஆகிய இரண்டிற்கும் ஆதரவை வழங்குகிறது. வி-ஏவி எக்மோ இதயம் மற்றும் நுரையீரல் இரண்டிலும் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிக்கிறது. தகுதியான நோயாளிகளுக்கு, ‘விழித்திருக்கும் நிலையிலான எக்மோ’ மூலம் அவர்கள் சுயநினைவோடு இருக்கும்போதே தேவையான உயிர் காக்கும் சிகிச்சையை வழங்க முடியும்.

எக்மோ வசதி இல்லாத மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை வான் மற்றும் தரை வழியில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது பொருத்தப்படும் சிறப்பு எக்மோ சேவைகளும் உள்ளன. 

காவேரி மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் குழு, நோயாளி இருக்கும் மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, நோயாளியின் நிலையை ஆய்வு செய்து தேவைப்படும் பட்சத்தில் எக்மோ சிகிச்சையைத் தொடங்கும். அதன் பிறகு, நோயாளி தொடர்ச்சியான எக்மோ கண்காணிப்புடன் வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பல்நோக்கு மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

எக்மோ சிகிச்சையைத் தொடங்குவது மட்டுமின்றி, நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் பிற உறுப்புகளின் செயலிழப்பைக் கையாளுதல், கவனமான திரவ மேலாண்மை, சிறப்பு டயாலிசிஸ் மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த பராமரிப்பு போன்ற சிக்கலான தேவைகளும் ஏற்படலாம். இவற்றை எதிர்கொள்ள, இம்மையம் அனுபவம் வாய்ந்த பல்நோக்கு நிபுணர் குழுவைக் கொண்டு, நோயாளியின் மாறிவரும் உடல்நிலைக்கு ஏற்ப உடனுக்குடன் முடிவெடுத்துச் தொடர் கண்காணிப்பையும் சிகிச்சையையும் வழங்குகிறது.

இம்மையத்தில் எக்மோ நிபுணர்கள், கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கார்டியோதொராசிக் மயக்கவியல் நிபுணர்கள், பெர்ஃப்யூஷனிஸ்ட்டுகள், இதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரகவியல் நிபுணர்கள், ரத்தவியல் நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், எக்மோ பயிற்சி பெற்ற செவிலியர்கள், பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவக் குழுவினர் இணைந்து ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்குகின்றனர்.

இந்த பிரிவை, காவேரி மருத்துவமனையின் எக்மோ பிரிவின் இயக்குநரும், மூத்த கார்டியோதொராசிக் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், இந்திய எக்மோ சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே. மதன் குமார் வழிநடத்துகிறார்.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எக்மோ கருவிகள் மற்றும் மருத்துவ சேவைகளை குறித்து டாக்டர் மதன் குமார் கூறுகையில், “கடுமையான இதயம் அல்லது நுரையீரல் செயலிழப்பு வழக்கமான சிகிச்சைகளுக்குப் பலனளிக்காத போது, எக்மோ தற்காலிக உயிர் ஆதரவை வழங்குகிறது. பல நேரங்களில் எக்மோ சிகிச்சை தொடரும் போதே பிற உறுப்புகளுக்கும் அவசர சிகிச்சைகள் தேவைப்படலாம். இந்நிலைகளில் அதற்கேற்ற மேம்பட்ட சிகிச்சைகளை வழங்கும் பல்நோக்கு மருத்துவக் குழுவும் தேவை. இவற்றை கருத்தில் கொண்டு இப்புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்: “மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை என்பது அதன் பின்னணியில் உள்ள மருத்துவக் குழுவின் பலத்தை பொறுத்தது. குறிப்பாக நோயாளியின் தேவைகள் வேகமாக மாறும்போது, சரியான நிபுணர்கள், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அனுபவத்தின் மூலமே சிக்கலான மருத்துவச் சூழல்களைக் கையாள முடியும். காவேரி மருத்துவமனையில், தீவிரமான மற்றும் சிக்கலான உடல்நலப் பாதிப்புகள் கொண்ட நோயாளிகளுக்குத் தேவையான அனைத்துப் பராமரிப்புகளையும் ஒரே இடத்தில் அளிக்கும் வகையில், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்குவதிலேயே நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.

காவேரி மருத்துவமனை பற்றி

காவேரி மருத்துவமனை இந்தியாவின் முன்னணி பல்துறை சிறப்பு மருத்துவ சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். மருத்துவத் துறையில் சிறப்பான சேவை, நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றில் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்காக இது அறியப்படுகிறது.

திருச்சி, சென்னை, சேலம், ஓசூர், திருநெல்வேலி மற்றும் பெங்களூரு ஆகிய ஆறு முக்கிய நகரங்களில் 12 மருத்துவமனைகள் கொண்ட வலையமைப்புடன் காவேரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மேலும், 11,000-க்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இக்குழுமத்தில் பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை வழங்கி வரும் காவேரி மருத்துவமனை, உயர்தர இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சேவைகளை வழங்குவதுடன், மருத்துவப் புதுமைகள், சிறந்த சிகிச்சை முடிவுகள் மற்றும் சுகாதார சேவையின் தொடர்ச்சியான மேம்பாட்டிலும் முக்கிய கவனம் 

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Airtel Reinforces its Culture of Customer Obsession

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது