சென்னை ஆழ்வார்பேட்டை ஷோரூமில் கீர்த்திலால்ஸ் - ன் 'சிந்தூரம்' கோலாகல அறிமுகம்!
சென்னை ஆழ்வார்பேட்டை ஷோரூமில் கீர்த்திலால்ஸ் - ன் 'சிந்தூரம்' கோலாகல அறிமுகம்!
கீர்த்திலால்ஸ் - ன் 'சிந்தூரம்' மணப்பெண்ணுக்கான ஆபரணங்களின் கலெக்ஷனை இடமிருந்து: குமாரா, செயல்பாடுகள் பிரிவு கடை மேலாளர்; ரகுநாத், விற்பனைப் பிரிவு துணைத் தலைவர்; கனகராஜ், விற்பனைப் பிரிவு தலைவர்; மற்றும் ராஜேந்திரன், விற்பனைப் பிரிவு கடை மேலாளர் ஆகியோர் இன்று சென்னை ஆழ்வார்பேட்டை ஷோரூமில் அறிமுகம் செய்தனர்.
மணப்பெண்ணுக்கான ஆபரணங்களின் கலெக்ஷன்
சென்னை, 10th அக்டோபர் 2026: புகழ்பெற்ற இயற்கை வைர ஆபரண பிராண்டான கீர்த்திலால்ஸ், அதன் சென்னை ஆழ்வார்பேட்டை ஷோரூமில் 'சிந்தூரம்' என்ற பெயரில் திருமணத்தின் போது மணப்பெண் அணிவதற்கான அற்புதமான வைர ஆபரண கலெக்ஷனை அறிமுகம் செய்துள்ளது.
இயற்கையின் வசீகரிக்கும் அழகால் ஈர்க்கப்பட்ட இந்த ஆபரணங்களின் தொகுப்பு, மலர்கள், செம்பருத்திப் பூக்கள், கம்பீரமான மயில்கள் மற்றும் பிற இயற்கை அம்சங்களின் வடிவங்களிலிருந்து பெற்ற உத்வேகத்தைக் கொண்டு, அனுபவம் மிக்க ஆபரண வடிவமைப்பாளர்களின் அனுபவம் மற்றும் கலைத்திறன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை வைரங்களின் ஜொலிப்பு, விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கண்கவர் வண்ணக் கற்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள 'சிந்தூரம்' கலெக்ஷனின் ஒவ்வொரு படைப்பும் இயற்கையின் அழகை தனித்துவ நேர்த்தியோடு பிரதிபலிக்கிறது. மலர்களின் நேர்த்தியான வடிவங்கள் முதல் மயிலின் கம்பீரமான அழகு வரை, ஒவ்வொரு வடிவமைப்பும் நுணுக்கமான வேலைப்பாடுகள், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் ஈடு இணையற்ற கலைத்திறன் மூலம் மணப்பெண்ணுக்கான திருமண வைபவ நகைகளாக மிகவும் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன.
நேர்த்தியான வடிவமைப்புடன் கலாரசனையையும் கொண்ட மணப்பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கலெக்ஷன், பாரம்பரிய திருமண நகைகளின் பிரம்மாண்டத்தை அழகாக பிரதிபலிக்கிறது; அதே வேளையில், இந்த கலெக்ஷனில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ஆபரணமும், தற்கால யுகத்திற்கு ஏற்ற தனித்துவமான நவீனத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வான திருமண நாளின் சிறப்பை மேலும் உயர்த்தும் வகையிலும், வருங்கால தலைமுறையினரும் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான ஒரு பாரம்பரியப் பொக்கிஷமாகவும் மிக நுட்பமாக இந்த கலெக்ஷனில் இடம்பெறும் ஒவ்வொரு நகையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'ரீடெய்ல் ஜூவல்லர் இந்தியா விருதுகள் 2026' நிகழ்வில், “மணப்பெண்ணுக்கான ‘ஆண்டின் மிகச்சிறந்த ஆபரணம்’ (Best Bridal Jewellery of the Year) என்ற விருதினை இந்த ஆபரண கலெக்ஷன் பெற்று கீர்த்திலால்ஸ் பிராண்டுக்கு மகத்தான அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. இவ்விருதை வென்ற இந்த நகை, ‘சிந்தூரம்’ கலெக்ஷனில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது; இந்த ஆபரணம் தற்போது வாடிக்கையாளர்களின் பார்வைக்காக ஆழ்வார்பேட்டை ஷோரூமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறனை நேரில் கண்டு ரசிக்கவும், வாங்கி மகிழவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
கீர்த்திலால்ஸின் வணிக உத்திப் பிரிவு இயக்குநர் திரு. சூரஜ் சாந்தகுமார் இது குறித்துக் கூறுகையில், “திருமணத்தின் போது மணப்பெண் அணிவதற்கான நகைகள் கற்பனாத்திறன், கைவினைத்திறன் மற்றும் இயற்கையில் காணப்படும் அசாதாரண அழகு ஆகியவற்றை ஒன்றிணைத்ததாக இருக்க வேண்டும் என்ற எங்களின் நம்பிக்கையை 'சிந்தூரம்' கலெக்ஷன் பிரதிபலிக்கிறது. பூக்கள், செம்பருத்தி பூ மற்றும் மயில் போன்ற இயற்கையின் அழகான அம்சங்களிலிருந்து உத்வேகம் பெற்று, அவற்றின் தனித்துவமான வடிவங்களை மிக உயர்ந்த தரத்திலான இயற்கை வைரங்கள், வண்ணக் கற்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களின் சங்கமத்தின் வழியாக இந்த ஆபரண கலெக்ஷனை நாங்கள் உருவாக்கியுள்ளோம். 'ரீடெய்ல் ஜூவல்லர் இந்தியா விருதுகள் 2026'-ல் கிடைத்த அங்கீகாரம் எங்களுக்கு ஒரு பெருமையான தருணமாகும். மேலும் கீர்த்திலால்ஸ் – ன் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படும் படைப்பாற்றல் மற்றும் கைவினைத்திறனுக்கு ஒரு சிறந்த சான்றாக இவ்விருது திகழ்கிறது. இந்த கலெக்ஷனை சென்னை மாநகர மக்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மணப்பெண்கள் மற்றும் நகை ஆர்வலர்கள் எங்களின் ஆழ்வார்பேட்டை ஷோரூமிற்கு வருகை தந்து இந்த கலெக்ஷனின் பிரமாண்டத்தையும், கலைநயத்தையும் நேரில் கண்டு அனுபவித்து மகிழ அன்புடன் அழைக்கிறோம்.” என்றார்.
திருமணத்திற்குத் தயாராகும் மணப்பெண்கள் மற்றும் நகை ஆர்வலர்கள், இப்போது 'சிந்தூரம்' வைர ஆபரண கலெக்ஷனையும், விருது வென்ற ஆபரணத்தையும் பிரத்யேகப் படைப்பையும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கீர்த்திலால்ஸ் ஷோரூமில் நேரில் கண்டு, வாங்கி மகிழலாம்.
கீர்த்திலால்ஸ் பற்றி
1939-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கீர்த்திலால்ஸ், எட்டு தசாப்தங்களுக்கும் மேலான பெருமைமிக்க பாரம்பரியத்தைக் கொண்ட, இந்தியாவின் முன்னணி இயற்கை வைர நகை பிராண்டுகளில் ஒன்றாகும். சிறந்த வடிவமைப்பு, நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் இயற்கை வைரங்களில் உள்ள நிபுணத்துவம் ஆகியவற்றிற்குப் பெயர்பெற்ற கீர்த்திலால்ஸ், வாடிக்கையாளர்களின் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களைக் கொண்டாடும் வகையிலான ஆபரணங்களை உருவாக்கி வருகிறது. ஒருங்கிணைந்த உற்பத்தி முறை மற்றும் வளர்ந்து வரும் ரீடெய்ல் விரிவாக்கத்துடன், பல தலைமுறைகளைக் கடந்தும் போற்றப்படக்கூடிய சிறப்பான நகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

Comments
Post a Comment