சென்னையின் ஒருங்கிணைந்த நகரமைப்புச் சூழலில் தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம் மஹிந்திரா லேக்வுட்ஸ் இல் பிரீமியம் குடியிருப்புகளின் Phase IV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

 சென்னையின் ஒருங்கிணைந்த நகரமைப்புச் சூழலில் தனது இருப்பை வலுப்படுத்தும் வகையில், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம் மஹிந்திரா லேக்வுட்ஸ் இல் பிரீமியம் குடியிருப்புகளின் Phase IV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

சென்னை, செப்டம்பர் 03, 2026 – மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பிரிவான மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட், சென்னையில் ஜிஎஸ்டி சாலை வழித்தடத்தில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி (MWCC) என்ற ஒருங்கிணைந்த நகர்ப்புற வளாகத்திற்குள், கவனமாக வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா லேக்வுட்ஸ் இன் ஒரு பிரீமியம் குடியிருப்புத் திட்டமான மஹிந்திரா லேக்வுட்ஸ் Phase IV இன் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது.

சுமார் 9.33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மஹிந்திரா லேக்வுட்ஸ், இடவசதி, நிலைத்தன்மை மற்றும் அன்றாட வாழ்வியல் வசதி ஆகியவற்றின் ஒரு கலவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நன்கு திட்டமிடப்பட்ட 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட குடியிருப்புகளுடன் 9 டவர்களைக் கொண்டுள்ளது. Phase IV இல் ஒவ்வொன்றிலும் 83 குடியிருப்புகளைக் கொண்ட மற்றும் இந்த சமூகத்திற்குள் மேம்பட்ட வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிற F மற்றும் G டவர்கள் அடங்கும். மேலும் . முந்தைய கட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இப்பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வாழ்விற்கான ஒரு தரநிலையாகத் திகழும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி யில், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸின் வலுவான சாதனைப்பதிவை மேலும் வலுப்படுத்துகிறது.

மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்ட நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி (குடியிருப்பு பிரிவு) விமலேந்திர சிங், கூறும்பொழுது, "இன்றைய வீடு வாங்குவோர் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல், அவற்றைச் சுற்றியுள்ள சூழலையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக முடிவுகளை எடுக்கின்றனர். சென்னை மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு நீடித்த மதிப்பு, வலுவான தேவை, 


மற்றும் ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும் என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளது. Phase IV (F மற்றும் G டவர்கள்) அறிமுகத்துடன், ஏரி, மலைகள் அல்லது பீடம் ஆகியவற்றின் சிறந்த காட்சிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இல்லங்கள் மூலம் இந்த முன்மொழிவை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம். அதேநேரம், ஒரு நன்கு திட்டமிடப்பட்ட, எதிர்காலத்திற்குத் தயாரான சமூகத்தில் இடவசதி, தனியுரிமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை இணைத்துள்ளோம். வலுவான உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார இயக்கிகளின் ஆதரவுடன், நீண்டகால மதிப்பை நாடும் இறுதிப் பயனாளிகள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவருக்கும் மஹிந்திரா லேக்வுட்ஸ் ஒரு ஈர்க்கின்ற வாய்ப்பை வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்."என்றார்.

ஜிஎஸ்டி சாலை வழித்தடத்தில் உயர்தர ரியல் எஸ்டேட் சந்தைக்குத் தொடர்ந்து ஒரு முக்கிய மையமாக மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, திகழ்கிறது. இது 1,550 ஏக்கர் பரப்பளவில் அமைந்த குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை வளர்ச்சிகள் அடங்கிய ஒருங்கிணைந்த நகரமாகும். 65 க்கும் மேற்பட்ட உலகளாவிய பெருநிறுவனங்கள் மற்றும் பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் (SEZs) கொண்ட இந்த நகரம், "நடந்தே வேலைக்குச் செல்லும்" மக்களிடமிருந்து நிலையான தேவையைப் பெற்று வருகிறது. இதன் விளைவாக, விலை உயர்வு கணிசமாக உள்ளது மற்றும் கையிருப்பு குறைவாக உள்ளது.

மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் இன் நிலைத்தன்மை உறுதிப்பாட்டிற்கு இசைவாக, மஹிந்திரா லேக்வுட்ஸ் IGBC பிளாட்டினம் முன்சான்றழிப்பைப் பெற்றுள்ளது. இந்தத் மேம்பாடு, பொது இட ஒளியூட்டுதலுக்காக சோலார் PV பேனல்கள், விரிவான மழைநீர் சேகரிப்பு, குறைந்த VOC பொருட்கள், மற்றும் இயற்கை குளிர்ச்சியையும் மேம்பட்ட உட்புறக் காற்றின் தரத்தையும் சாத்தியமாக்கும் வடிவமைப்பு உத்திகள் போன்ற பல்வேறு சூழல் நட்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த முயற்சிகள், பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற பசுமை நகரமான மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியின் பரந்த நிலைத்தன்மை கட்டமைப்பால் மேலும் வலுப்பெறுகின்றன. குப்பைக் கிடங்கிற்கு கழிவுகளைச் செல்லாததாக்கும் நடைமுறைகள், நகர்ப்புற காடுகளின் அடர்த்தி மற்றும் பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய திட்டமிடல் போன்ற நடைமுறைகளுக்காக அறியப்படும், பிளாட்டினம் சான்றளிப்பு பெற்ற பசுமை நகரமான 


மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியின் விரிவான நிலைத்தன்மைக் கட்டமைப்பு மூலம் இந்த முன்னெடுப்புகள் மேலும் வலுப்பெறுகின்றன.

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Airtel Reinforces its Culture of Customer Obsession

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது