ஏர்டெல் இந்தியாவின் பாதுகாப்பான பணிப் படையின் ̶ கலப்புப் பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முதல், முழுமையாக நிர்வகிக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட யாரையும் நம்பாத கட்டமைப்பு - ஜீரோ டிரஸ்ட் ஆர்கிடெக்சர் (ZTA) பாதுகாப்புத் தீர்வு

 ஏர்டெல் இந்தியாவின் பாதுகாப்பான பணிப் படையின் ̶ கலப்புப் பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முதல், முழுமையாக நிர்வகிக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட யாரையும் நம்பாத கட்டமைப்பு - ஜீரோ டிரஸ்ட் ஆர்கிடெக்சர் (ZTA) பாதுகாப்புத் தீர்வு

பயனர்கள், தரவு மற்றும் சாதனங்களுக்கு எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் விதிமுறைகள் இணக்கத்திற்குத் தயாரான தீர்வுகள் வலுவான பாதுகாப்பை உறுதி செய்யும்.

நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புச் செலவினங்களில் 30% வரை செலவுக் குறைப்பைப் பெறுவதன் மூலம் பயனடைவார்கள்.

நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்புத் தேவைகளை வலுப்படுத்த ஏர்டெல்லின் 24X7 நிர்வகிக்கப்பட்ட சேவைகள் நிபுணத்துவம் உதவும்.

Chennai (இந்தியா), மே 8, 2026: இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த காலகட்டத்தில், இணையவழித் தாக்குதல்கள் அளவு, வேகம் மற்றும் நுட்பத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வேகம் பெரும்பாலான பாதுகாப்பு அரண்களை முறியடித்து, ஒவ்வொரு நிறுவனத்தையும் அதற்கான ஒரு சாத்தியமான இலக்காக மாற்றுகிறது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இணையப் பாதுகாப்புச் சம்பவங்கள் பதிவாகியிருப்பது இதற்குச் சான்றாகும். இந்தத் தொடர் தாக்குதலை எதிர்கொள்ளும் பொருட்டு, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல்லின் ("ஏர்டெல்") பி2பி (B2B) பிரிவான ஏர்டெல் பிசினஸ், 'ஏர்டெல் பாதுகாப்பான பணிப் படை - செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்'-ஐ உருவாக்கியுள்ளது. இது, நிறுவனங்களுக்காக முழுமையான, விதிமுறைகளுக்கு இணங்கத் தயாரான பாதுகாப்பு அடுக்கைக் கொண்ட, நாட்டின் முதல் முழுமையாக நிர்வகிக்கப்படும் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜீரோ டிரஸ்ட் ஆர்கிடெக்சர் (ZTA) பாதுகாப்புத் தளமாகும்.

ஏர்டெல்லின் அகில இந்திய நெட்வொர்க் மற்றும் 24X7 நிபுணர் கண்காணிப்பு ஆகியவற்றின் ஆற்றலுடனும், தேசிய அளவிலான பாதுகாப்பில் நிரூபிக்கப்பட்ட அனுபவத்துடனும், ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ் ஆனது, நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பை உகந்த செலவில் வழங்குவதோடு, நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாங்களே உருவாக்கி இயக்கும் செயல்பாட்டுச் சுமையையும் நீக்குகிறது. இந்தியாவின் DPDP சட்டத்திற்கு இணங்குவதை ஆதரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட இது, பயனர்கள், சாதனங்கள், நெட்வொர்க்குகள், பயன்பாடுகள் மற்றும் தரவு ஆகியவற்றில் உள்ள இறுதி முனையங்களைப் பாதுகாக்கும்.

ஏர்டெல் பிசினஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷரத் சின்ஹா ​​கூறுகையில், “தொடர்ந்து உருவாகி வரும், இலக்கு வைக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான தாக்குதல்களில் இருந்து இறுதிப் பயனர்களையும் சாதனங்களையும் பாதுகாக்க, நிறுவனங்கள் இன்று பெருகிவரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. பாதுகாப்பான இணைப்பு மற்றும் இணையப் பாதுகாப்பில் எங்களின் தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, பயனர்கள், தரவு மற்றும் சாதனங்களை எந்நேரமும், எவ்விடத்திலும் பாதுகாக்க ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்தத் தீர்வு, இணைப்பு மற்றும் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பை ஒருங்கிணைத்து, 24x7 நிபுணர் கண்காணிப்புடன் முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. இதன் ஒருங்கிணைந்த அணுகுமுறை, எங்கள் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்க உதவும். இதன்மூலம் அவர்கள் தங்கள் பாதுகாப்புச் செலவுகளில் 30% வரை தணிப்பு செய்யவும், தாங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளோம் என்ற நம்பிக்கையுடன் தங்கள் வணிக வளர்ச்சியில் கவனம் செலுத்தவும் முடியும்” என்றார்.

கலப்புப் பணியாளர் குழுவிற்காக வடிவமைக்கப்பட்டு, மீள்திறன் கொண்ட ZTA கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தத் தீர்வு, கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு, சோர்வு எச்சரிக்கை மற்றும் திறமையாளர் பற்றாக்குறை போன்ற இன்றைய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளும். துண்டு துண்டான, பல விற்பனையாளர் வரிசைப்படுத்தல்களை, 24x7 ஒருங்கிணைந்த பாதுகாப்புடன் கூடிய ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தளத்துடன் மாற்றுவதன் மூலம், ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ், இறுதி முனை-எண்ட்பாயிண்ட் கண்டறிதல் மற்றும் பதிலளிப்பை வலுப்படுத்தி, ஒவ்வொரு தொடர்புப் புள்ளியிலும் தொலைநிலை அணுகலைப் பாதுகாக்கும். இதன்மூலம், வலுவான பாதுகாப்பையும் சிறந்த செலவுத் திறனையும் வழங்கும்.

இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) சட்டத்திற்கு இணங்க, ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ், வலுவான கண்காணிப்பு, பதிலளிப்பு மற்றும் நிர்வாகத்திற்காக தணிக்கைத் தரப் பதிவுகள், தரவு நகர்வுக் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட சம்பவப் பணிப்பாய்வுகளை வழங்கும். இந்த ஒருங்கிணைந்த டாஷ்போர்டு, நிறுவனங்களுக்கு நெட்வொர்க்குகள், எண்ட்பாயிண்ட்கள், பயனர்கள் மற்றும் தரவு ஆகியவற்றின் மீது ஒற்றைப் பார்வையை அளித்து, மின்னஞ்சல், இணையம், செயலிகள் மற்றும் சாதனங்கள் முழுவதும் ஊழியர்களைப் பாதுகாக்க உதவும். மேலும் இது, அங்கீகரிக்கப்படாத கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் குறித்த தெளிவான பார்வையையும் வழங்குகிறது.

இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் பிசினஸ், ஏர்டெல் கிளவுடில் இயங்கும் ஒரு நேரலைச் சூழலான ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸையும் (சிறப்பு மையம் - CoE) அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு நிறுவனங்கள் தங்கள் தளத்தை விரிவுபடுத்துவதற்கு முன்பு அனுபவித்துப் பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு, www.airtel.in/b2b/secure-workforce என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

பார்தி ஏர்டெல் பற்றி

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஏர்டெல், இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 15 நாடுகளில் 650 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு உலகளாவிய தகவல் தொடர்புத் தீர்வுகள் வழங்குநராகும். இந்நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் வங்கதேசம் மற்றும் இலங்கையிலும் தனது இருப்பைக் கொண்டுள்ளது. உலகளவில் மொபைல் ஆபரேட்டர்களில் இந்நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது, மேலும் அதன் நெட்வொர்க்குகள் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களைச் சென்றடைகின்றன. ஏர்டெல் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தகவல் தொடர்புத் தீர்வுகள் வழங்குநராகவும், ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய மொபைல் ஆபரேட்டராகவும் உள்ளது. ஏர்டெல்லின் சில்லறை விற்பனைப் பிரிவில் அதிவேக 4G/5G மொபைல், 1 Gbps வரை வேகத்தை உறுதியளிக்கும் Wi-Fi (FTTH+ FWA) ஆகியவை அடங்கும். இது நேரியல் மற்றும் தேவைக்கேற்ப பொழுதுபோக்கு, வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகள், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் ஒருங்கிணைப்பை வழங்குகிறது. பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு, ஏர்டெல் பாதுகாப்பான இணைப்பு, கிளவுட் மற்றும் தரவு மைய சேவைகள், சைபர் பாதுகாப்பு, IoT மற்றும் கிளவுட் அடிப்படையிலான தகவல் தொடர்பு உள்ளிட்ட பலதரப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது. ஏர்டெல்லின் டிஜிட்டல் பிரிவான எக்ஸ்டெலிஃபை-Xtelify, உலகளவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும் வளர்ச்சியை இயக்கவும் செயற்கை நுண்ணறிவு, தரவு மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்த உதவுகிறது. எக்ஸ்டெலிஃபை, இந்தியாவில் ஏர்டெல் கிளவுட் சேவையையும் வழங்குகிறது. இது நிறுவனங்களுக்கு ஒரு இறையாண்மை கொண்ட, தொலைத்தொடர்புத் தரத்திலான கிளவுட் தளத்தை அளிக்கிறது. இத்தளம் பாதுகாப்பான இடப்பெயர்வு, சிரமமற்ற விரிவாக்கம், குறைந்த செலவுகள் மற்றும் விற்பனையாளர் சார்புநிலைகள் இன்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது. தனது பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளின் ஒரு பகுதியாக, ஏர்டெல் தனது துணை நிறுவனமான இண்டஸ்- Indus டவர் லிமிடெட் மூலம் பெளதீக-Passive உள்கட்டமைப்பு சேவைகளையும் வழங்குகிறது. மேலும் விவரங்களுக்கு பார்வையிடவும் - www.airtel.com.


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது

Apollo OMR Marks a Milestone in Robotic Joint Replacement: