சென்னையில் ‘வி’ நிறுவனத்தின் 5G சேவை அறிமுகம்; மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5G சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ திட்டமிட்டுள்ளது!

சென்னையில் ‘வி’ நிறுவனத்தின் 5G சேவை அறிமுகம்; மே மாதத்திற்குள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் கூடுதல் நகரங்களுக்கு 5G சேவையை விரிவாக்கம் செய்ய ‘வி’ திட்டமிட்டுள்ளது!



மே மாதம் 2026-க்குள் கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ‘வி’ 5G சேவைகள் தொடங்கப்படும்.


சென்னை, 08 ஏப்ரல் 2026: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘வி’, இன்று சென்னையில் தனது 5G சேவைகளைத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ‘வி’ வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமான மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைய இணைப்பை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவின் டாப் டேட்டா சந்தைகளில் தனது செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், ஏற்கனவே உள்ள 50 நகரங்களுடன் சேர்த்து, மும்பை, டெல்லி-NCR, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய ஐந்து மெட்ரோ நகரங்களிலும் இப்போது ‘வி’ 5G சேவை கிடைக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில், இந்தியா முழுவதும் மேலும் 90 நகரங்களை இணைக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மே மாதம் 2026-க்குள் கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் ‘வி’ தனது 5G சேவைகளை விரிவாக்கம் செய்யவுள்ளது.

‘வி’ 5G சேவையின் இந்த விரிவாக்கமானது, 17 முன்னுரிமை வட்டாரங்களில் (Priority circles) உள்ள 133 நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்தும் ‘வி’-ன் ஒட்டுமொத்த 5G திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள தொழில் மையங்கள், அதிக டேட்டா பயன்பாடு கொண்ட இடங்கள் மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறங்களுக்கு ‘வி’ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முக்கிய தொழில் நகரங்களான கோவை, சேலம், திருப்பூர்; மருத்துவம் மற்றும் கல்வியில் முக்கியத்துவம் பெற்ற மையமான வேலூர்; கல்வி மற்றும் வணிக மையமான திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் 'கிழக்கின் பிரெஞ்சு ரிவியரா' என்று அழைக்கப்படும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் விரிவுப்படுத்தப்பட்டிருக்கும் ‘வி’ 5G சேவையானது, ‘வி’ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களூக்கும், மருத்துவம், கல்வி, தொழில்துறை ஆகியவற்றின் முன்னேற்றங்களுக்கு காட்டிவரும் அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது.

சிறந்த 5G அனுபவத்தை வழங்குவதற்காக, ‘வி’ நிறுவனம் நோக்கியாவுடன் (Nokia) இணைந்து நவீன மற்றும் மின்-ஆற்றல் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை நிறுவியுள்ளது. மேலும், நெட்வொர்க் செயல்பாட்டைத் தானாகவே மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் 'Self-Optimising Networks (AI-powered Self-Optimising Networks (SON))' தொழில்நுட்பத்தையும் செயல்படுத்தியுள்ளது.

‘வி’ 5G சேவையின் இந்த விரிவாக்கம் குறித்து ‘வி’ நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல வணிகத் தலைவர் திரு. சாய் வெங்கட்ராமன் [Sai Venkataraman, Circle Business Head – Tamil Nadu, Vi] கூறுகையில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் ‘வி’ நிறுவனத்தின் 5G நெட்வொர்க் விரிவாக்கத்தை நாங்கள் விரைவுபடுத்தி வருகிறோம். இதன் மூலம் மாநிலத்தின் முக்கிய சந்தைகளில் எங்களது செயல்பாடுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். சென்னையில் இந்த ‘வி’ 5G சேவையின் தொடக்கம், மதுரையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள எங்களது ‘வி’ 5G சேவை மற்றும் கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் போன்ற நகரங்களில் அறிமுகமாக இருக்கும் 5G சேவைகள் ஆகியவை இப்பயணத்தில் முக்கியமான முன்னேற்றப் படிகளாகும். நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கான எங்களது முதலீடுகளும், '‘வி’ Non-Stop Hero' போன்ற அன்லிமிடெட் டேட்டா பிளான்களின் அதிகரித்துவரும் வரவேற்பும், டேட்டா பயன்பாட்டில் அபாரமான வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன. எங்களுடைய மண்டலம் முழுவதும் உள்ள ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்பை வழங்குவதன் மூலம், மிகச் சிறந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான முதலீடுகளின் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த மூன்று சீசன்களுக்கான 'அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு பங்குதாரராக' (Official Communications Partner) இருப்பது குறித்தும் ‘வி’ அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தமானது, சூப்பர் கிங்ஸ் அகாடமி மூலம் அடிமட்ட அளவிலிருந்தும் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஆதரிப்பதிலும், தமிழ் நாட்டிலுள்ள கிரிக்கெட் ரசிகர்களுடன் கைக்கோர்த்து செயல்படுவதிலும் ‘வி’ கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, '‘வி’ Fan Fest' என்ற பெயரில் சமூக ஊடகங்கள், ‘வி’ ஆப் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘வி’ ஸ்டோர்களில் பல வழிகளில் கிரிக்கெட் போட்டிகளை [‘வி’ Fan Fest - a multi-channel cricket engagement contest] நடத்தும். இதில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள் கிரிக்கெட் போட்டியை நேரடியாக கண்டுகளிக்க டிக்கெட்டுகள், பிரத்தியேகப் பரிசுகள் மற்றும் வீரர்களைச் சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவதோடு, மைதானத்தில் ரசிகர்களுக்கான சிறப்பு அனுபவங்களையும் பெற முடியும்.

வோடஃபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited) பற்றி:

ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் வோடஃபோன் குழுமத்தின் கூட்டு செயல்பாட்டில் உருவான வோடஃபோன் ஐடியா லிமிடெட், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் 17 வட்டாரங்களில் 5G மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் மற்றும் 16 வட்டாரங்களில் mmWave ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பெரிய ஸ்பெக்ட்ரம் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் 2G, 4G மற்றும் 5G தளங்களில் வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளை வழங்கி வருகிறது. பெருகி வரும் டேட்டா தேவையைப் பூர்த்தி செய்யவும், கோடிக்கணக்கான இந்திய மக்கள் தகவல் தொடர்பின் மூலம் இணைந்திருக்கவும், அதன் மூலம் ஒரு எதிர்கால 'டிஜிட்டல் இந்தியா'வை உருவாக்கவும் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. சில்லறை மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் வகையில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. '‘வி’’ நிறுவனத்தின் பங்குகள் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டுள்ளன.

கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து www.My’வி’.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.


Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Airtel Reinforces its Culture of Customer Obsession

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது