அப்போலோ மருத்துவமனை (சென்னை), இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி (தொலைதூர அறுவை சிகிச்சை) திட்டத்தைத் தொடங்கியது!

அப்போலோ மருத்துவமனை (சென்னை), இந்தியாவின் முதல் ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி (தொலைதூர அறுவை சிகிச்சை) திட்டத்தைத் தொடங்கியது!


ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை முறைகளை [advancing robotic surgery, digital surgery & remote surgical collaboration] மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவகையிலான முன்முயற்சியை அப்போலோ மருத்துவமனை மேற்கொள்கிறது.


சென்னை, 13 மார்ச் 2026: சென்னை அப்போலோ மருத்துவமனை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை மற்றும் தொலைதூர கூட்டு அறுவை சிகிச்சை முறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், 'அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக்ஸ் & டெலிசர்ஜரி' (Apollo Institute of Robotics & Telesurgery (ART)) எனும் புதிய சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது. 

6-வது அப்போலோ சர்வதேச கொலோரெக்டல் சிம்போசியம் (6th Apollo International Colorectal Symposium (AICRS) 2026) நிகழ்வின் போது இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் உலகெங்கிலும் உள்ள முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப முன்னோடிகள் கலந்து கொண்டு, குடல்சார் புற்றுநோய் (Colorectal cancer) அறுவை சிகிச்சையின் எதிர்காலம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவப் பராமரிப்பு குறித்து விவாதித்தனர்.

இந்தக் கருத்தரங்கில், தொழில்நுட்பம் சார்ந்த குடல்சார் மருத்துவப் பராமரிப்பின் வேகமான வளர்ச்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை தளங்கள் மற்றும் வளர்ந்து வரும் டெலிசர்ஜரி கண்டுபிடிப்புகள் எவ்வாறு உலகளவில் அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகளையும் அதன் முடிவுகளையும் நேர்மறையாக மாற்றியமைக்கின்றன என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

இந்தக் கருத்தரங்கின் முக்கிய அம்சமாக, சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் உள்ள 'அப்போலோ ரெக்டல் கேன்சர்' (Apollo Rectal Cancer (ARC) Programme) திட்டம் முன்வைக்கப்பட்டது. இது சிக்கலான மலக்குடல் புற்றுநோய்களைக் கையாளுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான பன்னோக்கு சிறப்புச் சிகிச்சை திட்டமாகும். இந்தத் திட்டம் குடல்சார் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோய் நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள், நோயியல் நிபுணர்கள், சிறப்பு செவிலியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மறுவாழ்வு நிபுணர்களை ஒருங்கிணைத்து, நோயாளிகளை மையமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சையை வழங்குகிறது.

மற்றொரு முக்கிய மைல்கல்லாக, அப்போலோ மருத்துவமனைகளில் ரோபோட்டிக் குடல்சார் அறுவை சிகிச்சைகள் [robotic colorectal surgery] அதிகரித்து வருவது சுட்டிக்காட்டப்பட்டது. டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் 1,000-க்கும் மேற்பட்ட ரோபோட்டிக் குடல்சார் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இதில் இப்பிராந்தியத்திலேயே அதிக எண்ணிக்கையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட தனிநபர் ரோபோட்டிக் மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளும் [robotic rectal cancer resections] அடங்கும். இந்த ஆழ்ந்த அனுபவம் சென்னை அப்போலோ மருத்துவமனையை மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு மையமாகவும், மேம்பட்ட ரோபோட்டிக் குடல்சார் அறுவை சிகிச்சைக்கான முக்கியமான பயிற்சி மையமாகவும் மாற்றியுள்ளது. இதனால் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அப்போலோ மருத்துவமனையினால் அதிகம் கவரப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் குறித்து பேசிய கொலோரெக்டல் அறுவை சிகிச்சை நிபுணரும், AICRS 2026-ன் தலைவருமான பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் [Prof Dr Venkatesh Munikrishnan, Consultant Colorectal Surgeon & Clinical Lead Institute of Colorectal Surgery and Chairperson AICRS 2026], "இன்றைய மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்கு, ஒரு முழுமையான ஒருங்கிணைந்த பல்துறை அணுகுமுறை தேவைப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் பிற மருத்துவ வல்லுநர்களின் கூட்டு நிபுணத்துவத்தால் நோயாளிகள் தங்களது பிரச்சினைகளுக்கு அவசியமான, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்யவே 'அப்போலோ ரெக்டல் கேன்சர்' திட்டம் உருவாக்கப்பட்டது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை போன்ற தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு, குறிப்பாக சிக்கலான இடுப்புப் பகுதி அறுவை சிகிச்சைகளில் துல்லியத்தை அதிகரிப்பதோடு, நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்து சிறந்த பலன்களையும் அளிக்கிறது," என்றார்.

எஸ்.எஸ். இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான டாக்டர் சுதிர் ஸ்ரீவாஸ்தவா [Dr. Sudhir Srivastava, Founder Chairman and CEO, SS Innovations] கூறுகையில், "அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு மேம்பட்ட துல்லியம், அறுவை சிகிச்சையின் மீதான கட்டுப்பாடு மற்றும் தெளிவான பார்வையை வழங்குவதன் மூலம் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை ஏற்கனவே சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளை வெகுவாக மாற்றியமைத்துள்ளது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சி 'டெலிசர்ஜரி' (Telesurgery) ஆகும். இது புவியியல் எல்லைகளைக் கடந்து அறுவை சிகிச்சை நிபுணத்துவம் சென்றடைவதை மறுவரையறை செய்யும். 'மந்த்ராசனா' (Mantrasana) போன்ற டெலிசர்ஜரி தளங்கள், பெரிய மருத்துவ மையங்களுக்கும் சிறப்பு வசதிகள் இல்லாத மருத்துவமனைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நோயாளிகள் எங்கு இருந்தாலும் உயர்ந்த தரத்திலான அறுவை சிகிச்சை பலன்களைப் பெற முடியும்," என்றார்.

அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விதமாக, ரோபோட்டிக் மற்றும் டெலிசர்ஜரி முறைகளை மேம்படுத்த 'அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக்ஸ் அண்ட் டெலிசர்ஜரி' (Apollo Institute of Robotics and Telesurgery (ART)) மையத்தை அப்போலோ மருத்துவமனை தொடங்கியது. இந்தத் தொடக்க விழாவில் அப்போலோ மருத்துவமனையின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, Chief Executive Officer - Chennai Region, Apollo Hospitals] மற்றும் தேனாம்பேட்டை அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் ஆகியவற்றின் தலைமைச் செயல் அதிகாரி திரு. கரண் பூரி [Mr. Karan Puri, Chief Executive Officer, Apollo Proton Cancer Centre, Chennai & Teynampet Apollo Speciality Hospital] ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் டிசி-யின் மெட்ஸ்டார் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையின் கொலோரெக்டல் சர்ஜரி சிஸ்டம் சீஃப் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஸ்டீவன் டி. வெக்ஸ்னர் [Prof Dr Steven D Wexner, System Chief, Colorectal Surgery, Medstar Georgetown University Hospital, Washington DC, USA] மற்றும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் கன்சல்டண்ட் கொலோரெக்டல் சர்ஜன் மற்றும் அசோசியேட் ப்ரொபஸருமான பேராசிரியர் மனிஷ் சந்த் [Prof. Manish Chand, Consultant Colorectal Surgeon & Associate Professor, University College London, UK] ஆகியோர் இணைந்து தலைமை தாங்கிய இந்த AICRS 2026 கருத்தரங்கு, சென்னை அப்போலோ மருத்துவமனையின் குடல்சார் அறுவை சிகிச்சை மையத்தால் நடத்தப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு பொதுவான அறுவை சிகிச்சை துறையாக இருந்த குடல்சார் மருத்துவத்தை, தொழில்நுட்பம் மற்றும் பல்துறை புற்றுநோய் பராமரிப்பு சார்ந்த ஒரு சிறப்புத் துறையாக உருவெக்க செய்த முயற்சியை இது பிரதிபலிக்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983-ம் ஆண்டு டாக்டர் பிரதாப் ரெட்டி சென்னையில் முதல் மருத்துவமனையைத் தொடங்கியபோது, அது மருத்துவ சுகாதாரத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, அப்போலோ 76 மருத்துவமனைகளில் 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட டெலிமெடிசின் மையங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமாக விளங்குகிறது. 3,00,000-க்கும் அதிகமான ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ள அப்போலோ மருத்துவமனை இன்று உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். நோயாளிகளுக்கு உலகின் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்கான சிகிச்சையை வழங்கவும், உலகை இன்னும் ஆரோக்கியமான இடமாக மாற்றவும் அர்ப்பணிப்புடன்.


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது