உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ‘ZERO TO HERO’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்

 உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ‘ZERO TO HERO’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்



சென்னை, 9 பிப்ரவரி 2026: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் இணைந்து, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், பூஜ்ஜிய நிலை (Zero Stage) புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் மேலும் நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதம் மற்றும் முழுமையான மீட்சியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் ‘ஜீரோ டூ ஹீரோ’ -‘ZERO TO HERO’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ICMR–NCRP தரவுகள் தெரிவிக்கின்றன. ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் மூன்றாம் அல்லது நான்காம் நிலையில் இருக்கும்போது நோய் கண்டறியப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் சிகிச்சை சிக்கலாகி, குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் இணைந்து நிபுணர்கள் தலைமையிலான கலந்துரையாடல் நிகழ்வை நடத்தின. இதில், புற்றுநோயை பூஜ்ஜிய அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், அதன் மூலம் எளிய சிகிச்சை, உயிரிழப்பை தடுத்தல் மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல் போன்றவைக் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலை புற்றுநோய் துறையின் அறுவை சிகிச்சை நிபுணரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் அய்யப்பன் வழிநடத்தினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழு கலந்து கொண்டது. மேலும், சிறுநீரக புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ஆர். ஸ்ரீவத்சன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் பி. வெங்கட், மார்பக அறுவை சிகிச்சை ஆலோசகரும் நிபுணரும் ஆன டாக்டர் ஆஷா ரெட்டி, அறுவை சிகிச்சை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகரான டாக்டர் அஜித் பாய் மற்றும் டாக்டர் செந்தில்குமார்.ஏ.சி. இரைப்பை குடல் துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர். செந்தில் குமார் கணபதி என பல்துறை புற்றுநோய் நிபுணர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.

இந்த கலந்துரையாடலில் புற்றுநோய் வகை என்ன, ஆரம்ப நிலையில் கண்டறிவது எப்படி, தரமான சிகிச்ச்சைகள் என்ன, அவர்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் வழிமுறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மட்டுமே புற்றுநோயிலிருந்து மீண்டுவருவதற்கான வாய்ப்பை அளிக்கும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாகவும் தீர்மானிக்கப்பட்டது.


அதை முன்னிறுத்தும் வகையில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் ‘ஜீரோ டு ஹீரோ’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் ஆயுளை நீட்டிக்க செய்யலாம் என்ற கருத்தை முன்வைக்கிறது. மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று புற்றுநோயை வென்று வாழ்க்கையின் ஜீரோவிலிருந்து ஹீரோக்களாக உருவெடுத்த நபர்களை கொண்டாடவும் செய்கிறது. மூளை, மார்பகம், கழுத்து, நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளை பாதித்த புற்றுநோய்களில் கூட, ஆரம்பகால கண்டறிதல் மூலம் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ள உதாரணங்களை இந்த பிரச்சாரம் முன்வைக்கிறது. முன்கூட்டியே நோயறிதலால் ஒன்றுபட்ட இவர்களை முன்வைத்து இவர்களின் மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை மற்றவர்களுக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதன் மூலம் புற்றுநோயால் உயிரிழப்பு தடுக்கலாம் என்னும் நம்பிக்கை மற்றவர்களுக்கு விதைக்கிறது.


திரு. ஹர்ஷத் ரெட்டி, டைரக்டர், குரூப் ஆங்காலஜி & இன்டர்நேஷனல், அப்போலோ மருத்துவமனை எண்டர்பிரைசஸ் லிமிடெட், ஜீரோ டு ஹீரோ குறித்து பேசும்போது, “ஆரம்பகால நோயறிதல் என்பது மருத்துவ சிகிச்சையை எளிதாக்கும் என்பது மட்டுமல்ல; இது பாதிக்கப்பட்டவர்களுக்கும் மேம்பட்ட வாழ்க்கையை உறுதி செய்யும். சுருக்கமாக சொல்வதானால் தாமதமாக கண்டறியப்படும் நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு நீண்ட ஆயுள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத்தரம் கிடைப்பதை தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன. அதைதான் நாங்கள் முன்னெடுத்துள்ளோம்’’ என்றார்.


மேலும் ‘‘அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையை மட்டும் வழங்குவதில்லை. புற்றுநோய் தடுக்கும் வழிமுறைகளை கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிதல் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக முறையான துல்லியமான பரிசோதனை மூலம் முன்கூட்டியே கண்காணித்து, கணித்து அவர்களைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம் சிகிச்சையிலும் விரைவாக செயல்பட முடிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அதிகமானவர்கள் நோயறிதல் நிலையிலிருந்து சாதாரணமாக உயிர்வாழ்வதற்கான மேம்பட்ட நிலையை அடைய முடிகிறது. எங்களின் இந்த அணுகுமுறையால் புற்றுநோயாளிகளுக்கு நோய் முற்றி அவை எதிர்வினையாற்றும் முன்பே, புற்றுநோய் கட்டுப்பாட்டிற்கு மாற்றும் ஆற்றலை வழங்கமுடிகிறது’’ என்கிறார்.  


திரு. கரண் பூரி, தலைமை நிர்வாக அதிகாரி, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ், சென்னை ஜீரோ டு ஹீரோ குறித்து ‘‘பொதுவாக புற்றுநோய் மூன்றாம் நிலை அல்லது நான்காம் நிலையில் தொடங்குவதில்லை. அது அமைதியான கொலையாளி. ஏனெனில் அது அமைதியாகவே அறிகுறிகள் இல்லாமல் தொடங்கும். பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே பாதிப்பை தீவிரப்படுத்தியிருக்கும். அதனால் ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் முக்கியமாகிறது. சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் ‘ஜீரோ டு ஹீரோ’ பிரச்சாரம் என்பது தாமதமான மீட்பு நிலையிருந்து ஆரம்ப கட்ட வெற்றிகளுக்கு மாற்றுவதற்கான வழியை முன்நிறுத்தி செல்கிறது.


புற்றுநோய் பூஜ்ஜியம் அல்லது முதல் கட்டத்தில் கண்டறியப்படும்போது, சிகிச்சையும் எளிமையானதாக இருக்கும் அதற்கு பிந்தைய விளைவுகளும் வலுவாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை விரைவாகவே இயல்பு நிலைக்கும் திரும்பும். 


நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப்பிரச்சாரம் மக்களை முன்கூட்டியே விழிப்புணர்வுடன் செயல்படவும், புற்றுநோய் குறித்த கேள்விகளை தயக்கமில்லாமல் கேட்கவும், இந்நோய் குறித்து பயமின்றி முன்வரவும் அதிகாரம் அளிக்கிறது. இதனால் ஆரம்ப கால நோயறிதலால் பாதிக்கப்பட்டவர் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீளவும், அதற்கு பிந்தைய வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள்ளவும் முடியும். 



#புற்றுநோயை வெல்வோம்

அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/


புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக,  மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.  இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. 


இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.  


இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம். 


ஊடக விசாரணைகளுக்கு அல்லது மேலதிக தகவல்களுக்கு ‘தொடர்புகொள்க: எம்எஸ்எல் 







Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail