எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க MSME-க்களுக்காக ரூஃப்டாப் சோலார் நிதியைத் தொடங்கும் ஆக்சிஸ் வங்கி!


எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க MSME-க்களுக்காக ரூஃப்டாப் சோலார் நிதியைத் தொடங்கும் ஆக்சிஸ் வங்கி!
சென்னை 06 பிப்ரவரி 2026 : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கியானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME-கள்) சூரிய ஆற்றலுக்கு மாறுவதற்கும், ஆற்றல் தன்னிறைவின் மூலம் எரிசக்தி செலவுகளை மேம்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நிதியுதவித் தீர்வான 'ரூஃப்டாப் சோலார் ஃபைனான்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், MSMEக்கள் ₹10 லட்சம் முதல் ₹2 கோடி வரை பிணையமில்லாத கடன்களை, 4–7 ஆண்டுகள் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் பெறலாம். இந்த அமைப்பு MSME-க்கள் தங்கள் பேலன்ஸ் ஷீட் அல்லது பணி மூலதன சுழற்சிகளில் அழுத்தம் கொடுக்காமல் ரூஃப்டாப் சோலார் சிஸ்டத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. MSMEக்கள் சுயமாகவும் சொந்தமாகவும் ரூஃப்டாப் சோலார் சிஸ்டம் நிறுவ உதவுவதன் மூலம், இந்தச் சலுகை அவர்களுக்கு இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், எரிசக்தி செலவுகளில் அதிக கட்டுப்பாட்டைப் பெறவும், இந்தியாவின் சுத்தமான எரிசக்தி மாற்றத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில் நீண்டகால நிதி சேமிப்பை உருவாக்கவும் உதவுகிறது.

இந்த புதிய திட்டத்தை ஆக்சிஸ் வங்கியின் அனைத்து கிளை நெட்வொர்க் மூலம் நாடு முழுவதும் பெறலாம். தரமான செயலாக்கம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, வங்கி முன்னணி அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் (OEMs) கூட்டு சேர்ந்aதுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக்சிஸ் வங்கி ஒரு தொழில்நுட்பப் பங்காளருடனும் இணைந்து, அமைப்புச் செலவுகள், எதிர்பார்க்கப்படும் சேமிப்புகள் மற்றும் செயலாக்க காலக்கெடு உட்பட, சோலார் சிஸ்டம் செயல்பாட்டின் முழு பயணத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மேம்பட்ட வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது.

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Apollo OMR Marks a Milestone in Robotic Joint Replacement:

Airtel Reinforces its Culture of Customer Obsession