பயணம் மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை மறுவரையறை செய்ய ஆக்சிஸ் பேங்க் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துகின்றன: ஒவ்வொரு ஸ்வைப்பிலும் மேலும் பல அனுகூலங்களை பெறுங்கள்

 பயணம் மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை மறுவரையறை செய்ய ஆக்சிஸ் பேங்க் மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துகின்றன: ஒவ்வொரு ஸ்வைப்பிலும் மேலும் பல அனுகூலங்களை பெறுங்கள்

வாடிக்கையாளர்களின் பயணம் மற்றும் செலவின விருப்பங்களுக்கு ஏற்ப, கோ-பிராண்டட் கார்டின் இரண்டு வகைகள் அறிமுகம்


இண்டிகோ சேனல் செலவினங்களுக்கு அதிக வெகுமதி விகிதம்


சர்வதேச லவுஞ்ச் அணுகல் மற்றும் குறைந்த வெளிநாட்டு பண பரிவர்த்தனை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை பயன்கள்

சென்னை, பிப்ரவரி 19, 2026: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் பேங்க் மற்றும் இந்தியாவின் விருப்பமான விமான நிறுவனமான இண்டிகோ ஆகியவை இணைந்து இந்திய நுகர்வோரின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இண்டிகோ ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் இண்டிகோ ஆக்சிஸ் பேங்க் பிரீமியம் கிரெடிட் கார்டு ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கின்ற இந்த கார்டுகள் இண்டிகோ நிறுவனத்தின் விசுவாசத் திட்டமான இண்டிகோ புளூசிப் மூலம் செலவு செய்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அன்றாட கொள்முதல் மற்றும் பயணம் சார்ந்த செலவுகளுக்கு வசதியான மற்றும் தொந்தரவின்றி வெகுமதிகள் பெறுவதை


செயல்படுத்துவது இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும். இரண்டு அட்டைகளும் தகுதியான பரிவர்த்தனைகளில் இண்டிகோ சேனல்களில் செலவிடுவதற்கான விரைவான வருவாயுடன் இண்டிகோ புளூசிப்களை வழங்குகின்றன.

வாடிக்கையாளர்கள் வரவேற்பு மற்றும் புதுப்பித்தல் சலுகைகள், மைல்கல் வெகுமதிகள், மேலும் ஓய்வறை வசதி, பொழுதுபோக்குச் சலுகைகள், உணவக தள்ளுபடிகள் மற்றும் தேர்வு செய்யப்படும் அட்டை வகையைப் பொறுத்து குறைக்கப்பட்ட அந்நிய செலாவணி கட்டணம் உள்ளிட்ட பல வாழ்க்கை முறை சலுகைகளின் ஒரு தொகுப்பையும் அனுபவிக்க முடியும்.

இன்டிகோ ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டின் விலை ₹799 + ஜிஎஸ்டி ஆகும், மேலும் இது சில்லறை பிரிவை இலக்காகக் கொண்டது. இந்த அட்டை முக்கிய செலவு பிரிவுகளில் விரைவான வெகுமதிகளுடன் பயணம் மற்றும் வாழ்க்கை முறை நன்மைகளின் ஒரு கவர்ச்சிகரமான கலவையையும், வழங்குகிறது.

₹5,000 + ஜிஎஸ்டி விலை நிர்ணயிக்கப்பட்ட இன்டிகோ ஆக்சிஸ் பேங்க் பிரீமியம் கிரெடிட் கார்டு, சிறந்த பயணம் மற்றும் வாழ்க்கை முறை நன்மைகளை நாடும் உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைகள் ரூபே மற்றும் விசா நெட்வொர்க்குகளில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த அறிமுகம் குறித்து பேசிய ஆக்சிஸ் பேங்க் இன் கார்டுகள், பேமெண்ட்கள் மற்றும் சொத்து மேலாண்மை - தலைவர் மற்றும் தலைமை, அர்னிகா தீட்சித் கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துகின்ற வங்கிச் சேவை மற்றும் பயணம் ஆகிய இரண்டின் சிறந்த அம்சங்களையும் ஒன்றாக கொண்டு வருகின்ற இண்டிகோ நிறுவனத்துடனான எங்களின் மூலோபாய கூட்டான்மையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் கோ-பிராண்ட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், சாதாரண பயணிகள் மற்றும் அடிக்கடி பறப்பவர்கள் இருவருக்கும் இணையற்ற மதிப்பை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிரத்யேக 


பயண சலுகைகள், விரைவுபடுத்தப்பட்ட வெகுமதி வருவாய்கள் மற்றும் ஒவ்வொரு பயணத்தையும் மேலும் பலனளிக்கச் செய்யும் சிறப்புரிமைகளுக்கான தடையற்ற அணுகல் ஆகியவற்றை வழங்க இந்த கார்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டாண்மை புதுமை மற்றும் வாடிக்கையாளர்கள் மையப்படுத்தல் ஆகியவற்றுக்கான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும், வானில் மற்றும் அதற்கு அப்பாலும், பல்வேறு பிரிவுகள் முழுவதிலும் அதிக சுதந்திரம், நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதி ஆகியவற்றுடன் எங்கள் காடுதாரர்களுக்கு அதிகாரம் வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்."என்று கூறினார்.

இண்டிகோ நிறுவனத்தின் தலைமை தகவல் மற்றும் டிஜிட்டல் அதிகாரி நீதன் சோப்ரா கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக விசுவாசமான அடிக்கடி பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு முன்மொழிவை மேம்படுத்துவதற்கு இண்டிகோ உறுதிப்பாட்டுடன் உள்ளது. இந்த திசையில், ஆக்சிஸ் வங்கியுடனான எங்கள் கூட்டாண்மை ஒரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். அன்றாட செலவுகளை இண்டிகோ ப்ளூசிப்களாக மாற்றுகிற மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் வசதியான, நம்பகமான சேவையை ஆக்சிஸ் பேங்க் இன் விரிவான வங்கி நெட்வொர்க்குடன் இணைக்கிற இந்த கோ- பிராண்ட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த வாழ்க்கை முறை பலன்களுடன், இந்த கோ- பிராண்டட் கிரெடிட் கார்டுகள் எங்கள் வாடிக்கையாளர்களின் இண்டிகோ அனுபவத்தை மேலும் பலனளிக்கச் செய்யும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்."என்று கூறினார்.

இந்த வெளியீடு குறித்து கருத்துத் தெரிவித்த NPCI நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோஹினி ராஜோலா, “நுகர்வோருக்கு பாதுகாப்பான, விரிவாக்கக்கூடிய மற்றும் வசதியான டிஜிட்டல் பணப் பரிமாற்ற அனுபவங்களை வழங்குவதில் NPCI எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. RuPay நெட்வொர்க்கில் இண்டிகோ ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவது இந்த கவனத்துடன் ஒத்துப்போகிறது. RuPay தளத்தின் நம்பகத்தன்மையால் ஆதரிக்கப்படுகிற இது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு செலவினங்களில் பலன்களைப் பெறுவதற்கான கட்டமைக்கப்பட்ட 


மற்றும் பலனளிக்கும் வழியை வழங்குகிறது . இந்தியாவின் டிஜிட்டல் செலுத்துதல்கள் சூழல் அமைப்பு வளர்ச்சியடையும் போது, இத்தகைய கூட்டாண்மைகள் நுகர்வோர் தேர்வை மேம்படுத்துகின்றன மற்றும் தடையற்ற மற்றும் உள்ளடக்கிய செலுத்துதல் சூழலின் அடித்தளத்தை வலுப்படுத்த உதவுகின்றன.” என்று கூறினார்.

விசா நிறுவனத்தின் இந்தியாவிற்கான நாட்டு மேலாளர் ரிஷி சாப்ரா மேலும் கூறுகையில், “இன்றைய இந்திய நுகர்வோர் வெறும் பரிமாற்றங்களை மட்டும் விரும்பாமல், அதற்கும் மேலாக அவர்களின் அபிலாஷைகள், முன்னுரிமைகள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பிரதிபலிக்கும் அனுபவங்களையும் விரும்புகிறார்கள். இண்டிகோ-ஆக்சிஸ் பேங்க் விசா கோ-பிராண்டட் கார்டுகளின் அறிமுகம் அதற்காகவே நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணம் சார்ந்த வெகுமதிகளை அர்த்தமுள்ள வாழ்க்கை முறை சலுகைகளுடன் இணைப்பதன் மூலம், ஒவ்வொரு தருணத்திலிருந்தும் ஒவ்வொரு பயணத்திலிருந்தும் அதிகமானவற்றைப் பெற எங்கள் கார்டுதாரர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். வளர்ந்து வரும் இந்திய நுகர்வோர் தளத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, பாதுகாப்பான, தடையற்ற மற்றும் வளமிக்க செலுத்துதல் அனுபவங்களை வழங்குவதற்கான விசா நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த கூட்டாண்மை. பிரதிபலிக்கிறது.” என்று கூறினார்.

உங்கள் பயணம், உங்கள் விருப்பம்: உங்கள் செலவு செய்யும் பாணியைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட இரண்டு கார்டுகள்:


இண்டிகோ ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு 

இண்டிகோ ஆக்சிஸ் பேங்க் பிரீமியம் கிரெடிட் கார்டு



ஒவ்வொரு செலவிற்கும் வெகுமதி: தகுதியான பிரிவுகளில் செலவிடப்படும் ஒவ்வொரு ₹100க்கும் 1 ப்ளூசிப் பெறுங்கள்


 


வகை அடிப்படையிலான சலுகைகள்: மளிகை மற்றும் உணவகங்களில் ₹100க்கு 2 ப்ளூசிப்களையும், இண்டிகோ சேனல் பரிவர்த்தனைகளில் ₹100க்கு 3 ப்ளூசிப்களையும் பெறுங்கள்

 

பயணச் சலுகைகள்: சேருதல், புதுப்பித்தல் மற்றும் மைல்கல் செலவுகளை அடைதல் ஆகியவற்றில் 1,200 ப்ளூசிப்ஸ் வவுச்சரை அனுபவியுங்கள் 


UPI நன்மை: UPI பரிவர்த்தனைகளில் துரிதப்படுத்தப்பட்ட வெகுமதி வருவாய் 



லவுஞ்ச் அணுகல்: கூடுதல் வசதிக்காக இலவச உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல்



தனித்தன்மைவாய்ந்த வெகுமதிகள்: இண்டிகோ செலவினங்களில் ₹100க்கு 7 ப்ளூசிப்கள், உணவகங்கள் மற்றும் மளிகைப் பொருட்களில் ₹100க்கு 3 ப்ளூசிப்கள், மற்றும் பிற தகுதியுள்ள வகைகளில் செலவழிக்கும் ஒவ்வொரு ₹100க்கும் 2 ப்ளூசிப்கள் 


போட்டித்தன்மை வாய்ந்தஅந்நிய செலவாணி விகிதங்கள்: சர்வதேச செலவினங்களில் வெறும் 2.5% குறைக்கப்பட்ட அந்நியசெலவாணி கட்டணங்களில் இருந்து பயனடையுங்கள் 



வரவேற்பு, புதுப்பித்தல் மற்றும் மைல்கல் போனஸ் : சேருதல், புதுப்பித்தல் மற்றும் மைல்கல் செலவினங்களில் அடைவதில் 5,000 ப்ளூசிப்கள் மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறுங்கள் 


விரிவான லவுஞ்ச் அணுகல்: உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலைய லவுஞ்ச்களுக்கு இலவச அணுகலை அனுபவியுங்கள் 



தனித்துவமான வாழ்க்கை முறை சலுகைகள்: மேம்படுத்தப்பட்ட அன்றாட அனுபவங்களுக்காக BookMyShow மற்றும் EazyDiner இல் சலுகைகளைப் பெறுங்கள். 






ஆக்சிஸ் பேங்க் பற்றி

ஆக்சிஸ் பேங்க் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றாகும். ஆக்சிஸ் பேங்க் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், SME, விவசாயம் மற்றும் சில்லறை வணிகங்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு முழு அளவிலான சேவைகளின் தொகுப்பை வழங்குகிறது. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி நாடு முழுவதும் 6,110 உள்நாட்டு கிளைகள் (விரிவாக்க கவுண்டர்கள் உட்பட) மற்றும் 12,838 ATMகள் மற்றும் பண மறுசுழற்சி செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளது. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி இந்த வங்கியின் ஆக்சிஸ் விர்ச்சுவல் சென்டர் எட்டு மையங்களில் 1,582 மெய்நிகர் உறவு மேலாளர்களைக் கொண்டுள்ளது. இந்த ஆக்சிஸ் குழுமத்தில் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் லிமிடெட், ஆக்சிஸ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் டிரஸ்டி, ஆக்சிஸ் கேபிடல், A.TReDS லிமிடெட், ஃப்ரீசார்ஜ், ஆக்சிஸ் பென்ஷன் ஃபண்ட் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஃபவுண்டேஷன் ஆகியவை அடங்கும்.

மேலும் தகவலுக்கு, https://www.axis.bank.in/ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

இண்டிகோ நிறுவனம் பற்றி

இண்டிகோ இந்தியாவின் விருப்பமான மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனங்களில் ஒன்றாகும். மலிவு விலையில் கட்டணங்களை வழங்குதல், சரியான நேரத்தில் விமானங்களை இயக்குதல் மற்றும் அதன் இணையற்ற நெட்வொர்க் முழுவதும் 


மரியாதையான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்குதல் ஆகியவற்றில் இண்டிகோ ஒரு எளிய தத்துவத்தைக் கொண்டுள்ளது . 400+ விமானங்களைக் கொண்ட அதன் விமானக் குழுவுடன், இந்த விமான நிறுவனம் 95+ உள்நாட்டு மற்றும் 40+ சர்வதேச இடங்களை இணைக்கின்ற சுமார் 2200+ தினசரி விமானங்களை இயக்குகிறது, மேலும் நடப்பு ஆண்டு 25 இல் 124 மில்லியன் வாடிக்கையாளர்களை வரவேற்றது. உலக விமான விருதுகள் 2025 இல் ஸ்கைட்ராக்ஸால் 'இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிறுவனம்' என்றும் இண்டிகோ பெயரிடப்பட்டது. உலகளாவிய விமான பகுப்பாய்வு நிறுவனமான Cirium நிறுவனத்தால் 2025 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பகுதியில் ஆறாவது மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிறுவனமாக இண்டிகோ பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, http://www.goindigo.in/ இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது எங்கள் மொபைல் செயலியைப் பதிவிறக்கவும். Facebook | Twitter | Instagram ஆகியவற்றில் நீங்கள் எங்களுடன் இணையலாம்.


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

LG நிறுவனம் ‘த நேஷன் கால்ஸ் ஃபார் செலிப்ரேஷன்’ பிரச்சாரத்தை சிறப்பு குடியரசு தின சலுகைகளுடன் அறிமுகப்படுத்துகிறது

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது