தினசரி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மை மற்றும் எளிதான அணுகலை முன்னிலைப்படுத்துகின்ற வகையில் 'பாரத் கனெக்ட்' க்கான பிரச்சாரத்தை NBBL தொடங்கியுள்ளது

 

தினசரி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மை மற்றும் எளிதான அணுகலை முன்னிலைப்படுத்துகின்ற வகையில் 'பாரத் கனெக்ட்' க்கான பிரச்சாரத்தை NBBL தொடங்கியுள்ளது



டீசர் படத்திற்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=-W1Ku7JGtIg 

முதல் விளம்பரப் படத்திற்கான இணைப்பு: https://youtu.be/R_qhYgQHFdA?si=nlNtLnMn2_BlyKT1 

சென்னை, ஜூன் 17, 2025: - நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நிறுவனத்தின் ஒரு முழுச்சொந்தமான துணை நிறுவனமான NPCI பாரத் பில் பே லிமிடெட் (NBBL) வாடிக்கையாளர்கள் மற்றும் பில் அளிப்பவர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தனது பில் செலுத்தும் தளமான பாரத் கனெக்ட் க்கான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. DDB முத்ரா குழுமத்தால் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட இந்த உணர்வுபூர்ணமான பிரச்சாரமான, "Aap Humein Jaante Nahi, Par Maante Hain" (நீங்கள் எங்களை அறியாமல் இருக்கலாம், ஆனால் எங்களை நம்புகிறீர்கள்) என்ற இந்த பிரச்சாரம், அன்றாட வாழ்வில், ஒப்பிடமுடியாத எளிமை, பாதுகாப்பு மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றுடன் வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்துதல் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை மேம்படுத்துகின்ற பாரத் கனெக்ட் இன் தடையற்ற ஒருங்கிணைப்பை மைய்யப்படுத்துகிறது. தொடர்ச்சியான மற்றும் ஒரு முறை பில் செலுத்துதல்களுக்கு தடையற்ற கொடுப்பனவுகளை செயல்படுத்தும் ஒருங்கிணைந்த தளமாக பாரத் கனெக்ட் செயல்படுகிறது.

பாரத் கனெக்ட் ஒரு வலுவான, ஒன்றோடொன்று இயங்கக்கூடிய தளமாக செயல்படுகிறது, பயன்பாட்டு பில்கள், கிரெடிட் கார்டு பில்கள், காப்பீட்டு பிரீமியங்கள் முதல் கடன் EMIகள் மற்றும் பல வரை தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியல்லாத கொடுப்பனவுகளை தடையின்றி நிர்வகிக்கிறது. அதன் விரிவான உள்கட்டமைப்பு, ஃபின்டெக் செயலிகள், வங்கி பயன்பாடுகள், வலைத்தளங்கள் மற்றும் உதவி சேனல்கள் உள்ளிட்ட கூட்டாளர் தளங்கள் மூலம் பிணைக்கப்பட்டு, பல்வேறு வகைகளில் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய கொடுப்பனவுகளுக்கான ஒரு எங்கும் நிறைந்த சூழல் அமைப்பை உருவாக்குகிறது தொடர்புடைய இயல்பான வாழ்க்கை சூழ்நிலைகள் மூலம் வெளிப்படுகிற இந்த அகிலத்திய பிரச்சாரம், நுகர்வோருடன் தனிப்பட்ட மட்டத்தில் இணைப்பதற்காக பதினொரு மொழிகளில் வெளியிடப்படும். புனீத் இசார், ஸ்ரேயா தன்வந்தரி, ஷரிப் ஹாஷ்மி, சந்தன் ராய் மற்றும் கோபால் தத் போன்ற பிரபலமான முகங்களைக் கொண்ட இந்த பிரச்சாரம், இந்த தளம் திரையின் பின்னணியில் இயங்கினாலும், பாரத் கனெக்டில் தினமும் மில்லியன் கணக்கான மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உண்மையாக விளக்குகிறது. இந்த 360-டிகிரி பிரச்சாரம் தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள், அச்சு ஊடகம், வானொலி மற்றும் வெளிப்புற ஊடகங்களில் வெளியிடப்படும்.  

இந்த பிரச்சாரம் குறித்து பேசிய NBBL இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நூபூர் சதுர்வேதி, "ஒவ்வொரு தனிப்பட்ட நாளிலும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொடும் பில் கொடுப்பனவுகளுக்கான ஒரு நம்பகமான மற்றும் உள்ளடக்கிய டிஜிட்டல் உள்கட்டமைப்பாக பாரத் கனெக்ட் நிற்கிறது. இந்த பிரச்சாரத்தின் மூலம், எங்கள் நோக்கத்தை வெளிப்படையாகக் காட்டவும், ஒவ்வொரு இந்தியருக்கும் அவர்களின் அத்தியாவசிய செலுத்துதல்களை நிர்வகிக்கும்போது எளிமை, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம். இந்த பிரச்சாரத்தில் தொடர்புடைய நிகழ்வுகள் மூலம், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை செயல்படுத்துவதில் பாரத் கனெக்ட் இன் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்."என்று கூறினார். 

“இந்தப் பிரச்சாரத்தை இயக்கும் நுண்ணறிவு ஒரு எளிய உண்மையிலிருந்து உருவானது. பாரத் கனெக்ட் கோடிக்கணக்கான அன்றாட பில் செலுத்துதல்களை சாத்தியமாக்குகிறது, ஆனால் அதன் பெயர் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமில்லை. இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் ஒரு நம்பகமான சேவை எவ்வாறு மக்களின் வாழ்க்கையில் ஆழமாக வேருன்றக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற, பயன்பாடு மற்றும் விழிப்புணர்வுக்கு இடையேயான இந்த இடைவெளியே எங்கள் கதையின் அடித்தளமாக மாறியது" என்று DDB முத்ரா குரூப் இன் குரூப் கிரியேட்டிவ் டைரக்டர்கள் ககன்தீப் பிந்த்ரா மற்றும் ராகுல் ஆர்க்காட் கூறினர்.


இந்த ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் மூலம், இந்தியாவின் டிஜிட்டல் செலுத்துதல் சூழல் முழுவதிலும் நம்பகத்தன்மை, பயன்பாட்டின் எளிமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை பாரத் கனெக்ட் நிறுவுகிறது. பில் செலுத்துதல் தளத்திற்கான அத்தியாவசிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், பாரத் கனெக்ட், பில் செலுத்துதல்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்கு தங்கள் அன்றாட வழக்கங்கள் முழுவதிலும் அதை நம்பியிருக்கும் வீடுகள் மற்றும் தனிநபர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

NBBL பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.bharat-connect.com இணையத்தளத்தைப் பார்வையிடவும்.



Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Apollo OMR Marks a Milestone in Robotic Joint Replacement:

Airtel Reinforces its Culture of Customer Obsession