சாம்சங் இந்தியாவானது AI-ஆற்றல் பெற்ற ரிமோட் டயக்னாஸ்டிக் மற்றும் டிரபுள்ஷூட்டிங் கருவி மூலம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியுள்ளது

சாம்சங் இந்தியாவானது AI-ஆற்றல் பெற்ற ரிமோட் டயக்னாஸ்டிக் மற்றும் டிரபுள்ஷூட்டிங் கருவி மூலம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியுள்ளது

சாம்சங்கின் ஹோம் அப்ப்ளையன்சஸ் ரிமோட் மேனேஜ்மென்ட் (வீட்டு சாதன ரிமோட் நிர்வாக - HRM) கருவியானது AI-ஆற்றல் பெற்ற ரிமோட் டயக்னாஸ்டிக் மற்றும் டிரபுள்ஷூட்டிங் மூலம் காத்திருப்பு நேரங்களை குறைத்து வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

ஆலோசகர்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு தருவார்கள் மற்றும் வீட்டு வருகைகளின் தேவையை குறைப்பார்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்கணிப்பு தீர்வுகளை வழங்குவார்கள்.

HRM ஆனது ரிமோட் ஆனது ஆலோசனை, கண்காணிப்பு, மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள் மூலம் ஸ்மார்ட்திங்க்ஸ் செயலியில் பதிவு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட் சாதனங்களுக்கு மெய்-நேர சிக்கல் தீர்வுக்கு வழிவகுக்கிறது


CHENNAI MAY20, 2025: இந்தியாவின் மிகப்பெரிய கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பிரான்டான சாம்சங் ஆனது தனது ஹோம் அப்ளையன்சஸ் ரிமோட் மேனேஜ்மென்ட் (HRM) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பிடத்தக்க அளவில் காத்திருப்பு நேரங்களை குறைத்து வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகின்ற அடுத்த-தலைமுறைக்கான, ரிமோட் சிக்கல் கண்டறியும் மற்றும் தீர்க்கும் தீர்வு ஆகும்.


AI-ஆற்றல் பெற்ற ரிமோட் டயக்னாஸ்டிக் மற்றும் டிரபுள்ஷூட்டிங்கின் ஆற்றலை பேணுவதன் மூலம் சாம்சங் தொழில்நுட்பவியலாளர்கள் (டெக்னிஷியன்) இப்போது பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடியும் மற்றும் சிக்கலான வீட்டு வருகைகளுக்கான தேவையை குறைக்க முடியும். இந்த ஆக்கப்புத்தாக்க தொழில்நுட்பமானது விரைவு தீர்வுகள் மற்றும் குறைந்த பழுது நேரம் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது தொழில்துறையில் ஒரு புதிய செந்தரத்தை அமைக்கிறது மற்றும் வாடிக்கையாளர் சேவையின் எதிர்காலத்தை மறுவரையறை செய்கிறது மற்றும் நுகர்வோர்கள் மற்றும் அவர்களது ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் இடையேயான உறவை மறுகற்பனை செய்கிறது.


"சாம்சங் சேவையானது வீட்டு சாதன பழுது கண்டறிதலில் முன்னனியில் உள்ளது மற்றும் பிரச்சினைகளை நுண்ணியம் வழுவாத வகையில் கண்டறிய மேம்பட்ட கருவிகளை பயன்படுத்துகிறது. இதன் ஸ்மார்ட் டயக்னாஸ்டிக்ஸ் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் முன்கணிப்பு தீர்வுகளை பிரச்சினைகளை ரிமோட்டாக கண்டறிந்து தீர்க்கப்படுவதன் மூலம் பெறலாம். இதனால் டெக்னிஷியன் வருகைக்கான தேவை குறைகிறது. இந்த திருப்புமுனை தொழில்நுட்பமானது குறிப்பிடத்தக்க வகையில் காத்திருப்பு நேரங்களை குறைக்கிறது, விரைவான தீர்வுகளை உறுதிபடுத்துகிறது மற்றும் ப்ராடக்ட் பராமரிப்பு பற்றி உரிய கால விவரங்களை வழங்கி உச்சக்கட்டமாக வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது," என்று சாம்சங்கின் வாடிக்கையாளர் திருப்தி பிரிவின் VP ஆன சுனில் கியூடின்ஹா விளக்கினார்.




HRM ஆனது ரிமோட் ஆலோசனை, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் ஸ்மார்ட்திங்க்ஸ் செயலியில் பதிவுபெற்ற சாம்சங் ஸ்மார்ட் சாதனங்களுக்கு நிகழ்நேர தீர்வை செயல்படுத்துகிறது. ஸ்மார்ட்திங்க்ஸ் என்பது வாடிக்கையாளர்-நோக்கு செயலியாகும் மற்றும் இது சாதன இயக்கு கருவியாக செயல்படுகிறது மற்றும் பயன்பாட்டு போக்குகளின் தரவை சேமிக்கிறது. இந்த ஆக்கப்புத்தாக்கத்தின் மூலம் சாம்சங், ஸ்மார்ட் சாதன நிர்வாகத்தில் தொடர்ந்து முன்னனி வகிக்கிறது மற்றும் உலகம் முழுதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டு சாதனத்தின் பராமரிப்பை அதிக திறனுள்ளதாகவும் தொந்தரவற்றதாகவும் ஆக்குகிறது. ஒரு வாடிக்கையாளர் தனது வீட்டு சாதனம் தொடர்பான பிரச்சினையுடன் சாம்சங்கின் ஆதரவு குழுவை தொடர்பு கொண்டால் HRM அமைப்பானது பதிவு செய்த கருவியின் மாடல் மற்றும் சீரியல் நம்பரை தானாகவே சாம்சங்கின் CRM (கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட் சிஸ்டம்) மூலம் கண்டறிகிறது. செயல்படுத்தப்பட்டவுடன் தொடர்பு மைய ஆலோசகர்கள் ரிமோட்டாக வாடிக்கையாளர் ஒப்புதலுடன் பழுது கண்டறியலாம், கண்காணிக்கலாம் மற்றும் சாதனத்தின் ஒருசில செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் கூட செய்யலாம் மற்றும் உடனடி பழுதுநீக்கும் வழிகாட்டலை வழங்கலாம். 


 


எவ்வாறு HRM ஆனது ஒரு AC கூலிங் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியது

சென்னையில் கோடைக்காலமானது விரைவிலேயே தொடங்கி விட்டது மற்றும் வெப்பநிலை 35o க்கும் அதிகமாகிவிட்டது எனவே ரோஹன் லூத்ராவின் ஏர் கன்டிஷனர் ஆனது குறைந்த திறனுடன் கூலிங் செய்து கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக ரோஹன் தனது ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்திங்க்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருந்ததாலும் AC ஆனது செயலியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததாலும் அவருக்கு பிழை பற்றிய ஒரு அறிவிப்பு வந்தது. உடனடியாக ரோஹன் ஸ்மார்ட்திங்சில் ஹோம் கேர் மூலம் சேவையை கோரினார் மற்றும் அவர் தொடர்பு மைய ஆலோசகருடன் இணைக்கப்பட்டார். ஆலோசனையின் பேரில் HRM-ன் ரிமோட் டயக்னாஸ்டிக்ஸ் மூலம் பிரச்சினையை கண்டறிந்து AC-ன் மைக்ரோஃபில்ட்டர் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். பின்னர் அவர் ரோஹனுக்கு படிப்படியாக தொலைபேசி அழைப்பிலேயே வழிநடத்தி AC-ன் கூலிங் திறனை ஒருசில நிமிடங்களிலேயே வீட்டு வருகைக்கான தேவையில்லாமல் மீட்டெடுத்தார்.

இந்த மெய்-உலக உதாரணமானது எவ்வாறு HRM கருவியானது வாடிக்கையாளர் ஆதரவை உருமாற்றி வருகிறது மற்றும் ஸ்மார்ட் சாதன பராமரிப்பை அதிக திறன் வாய்ந்ததாகவும் முன்கணிப்புமிக்கதாகவும் தொந்தரவற்றதாகவும் ஆக்குகிறது என்று கோடிட்டு காட்டுகிறது.



Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Airtel Reinforces its Culture of Customer Obsession