நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.

 நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.

நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு, சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சையினை நடைமுறைப்படுத்துவதே NCRI-இன் பிரதான குறிக்கோள் ஆகும். நரம்பியல் சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதற்கும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குப் பல்முனை பராமரிப்பு வழங்குவதற்கும், NCRI தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. நரம்பியல் துறையின் தற்போதைய அறிவியல் முன்னெடுப்புகளை, பிற மருத்துவப் பிரிவு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சிறந்த மருத்துவ நடைமுறையை வழங்கும் அரும்பணியைச் செய்துவருகிறது NCRI. கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு, அவர்களுக்குப் பன்முனை பராமாரிப்பு, புதுமையான மற்றும் பல்துறை மருத்துவர்களை இணைக்கும் விதமான சிகிச்சை முறை முதலியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது NRCI.  

நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவரான மருத்துவர் பொன்னையா வனமூர்த்தி, பக்கவாதம், தலையில் அடிபடுவதால் ஏற்படும் காயம் மற்றும் பிற மோசமான நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றத்தின் மருத்துவச் சிறப்புகளைக் குறித்து எடுத்துரைத்தார். 

டாக்டர் எம்ஜியார் பல்கலைக்கழகத்தின் தூணை வேந்தரான மருத்துவர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி, நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் 5 ஆம் ஆண்டு கருத்தரங்கினைத் தொடங்கி வைத்தார். நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் செயலாளரான மருத்துவர் K. ஸ்ரீதர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, முதல்முறையாக அமெரிக்காவின் நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டியுடன் இணைவதைப் பற்றிய மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 சர்வதேச நரம்பியல் வல்லுநர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர். இதில், நரம்பியல் சிகிச்சையில் மேம்பட்ட கண்காணிப்பு குறித்த முன் கூட்டமைப்புப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக நடக்கும், நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் கருத்தரங்கில், உலகம் முழுவதிலுமிருந்து 400 புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கு, "வளர்ந்து வரும் போக்குகள், விரிவடையும் வாய்ப்புகள், மாறும் கண்ணோட்டங்கள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

Comments

  1. Best Family Resorts in ECR

    Finding the Best Family Resorts in ECR can make a family getaway comfortable, enjoyable, and memorable. The ECR coastline offers a peaceful setting away from the busy city, with beautiful beaches, spacious resort surroundings, swimming pools, outdoor activities, and family-friendly dining options. Whether you are planning a weekend vacation, a birthday celebration, or a relaxing holiday with children and family members, ECR resorts provide a convenient combination of comfort and entertainment. With well-designed rooms, scenic views, recreational facilities, and easy access to popular attractions along ECR, a family resort can be an ideal choice for spending quality time together.
    S.No 10, New, 15A1 and 106/15A2, Karikattukuppam Rd, Muthukadu, Chennai
    +91 99622 44551https://uminobeachresort.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Apollo OMR Marks a Milestone in Robotic Joint Replacement: