திருப்போரூரில் புதிய பள்ளிப் கட்டிடத்தைத் திறந்து வைத்து, ‘வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்’ எனும் தனது உயரிய நோக்கத்தை நோக்கி நகரும் வெர்சுனி இந்தியா!

 திருப்போரூரில் புதிய பள்ளிப் கட்டிடத்தைத் திறந்து வைத்து, ‘வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்’ எனும் தனது உயரிய நோக்கத்தை நோக்கி நகரும் வெர்சுனி இந்தியா!  

தையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்பு வசதியினால், மாணவர் சேர்க்கைத் திறனை சுமார் 35-லிருந்து 100 முதல் 140 வரை உயர்த்தியுள்ளது. இது குழந்தைகள் சிறந்து கற்கவும், வளரவும், முன்னேறவும் மிகச் சிறந்த சூழலை உருவாக்குகிறது. 

சென்னை 2026: உலகின் முன்னணி வீட்டு உபயோகப் பொருள் பிராண்டுகளைக் கொண்ட வெர்சுனி இந்தியா, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் அமைந்துள்ள தையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிறுவனம் சார்பில் புதிதாக கட்டிடம் ஒன்றை திறந்து வைத்துள்ளது. இந்நிறுவனம், “வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுதல்” எனும் தனது உயரிய நோக்கத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகவும், வசதியாகவும், தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளக்கூடிய இடத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்ற நம்பிக்கையே இந்த நோக்கத்தின் மையக்கருத்தாகும். பள்ளி உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், தையூர் பகுதி குழந்தைகளுக்கு சிறந்த கற்றல் சூழலையும், அவர்கள் வளர்ந்து தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கான நல்வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வெர்சுனி இந்தியா முயன்றுள்ளது.

ஐந்தாம் வகுப்பு வரை கல்வி வழங்கும் இப்பள்ளி, முன்பு மிகக் குறைந்த இடவசதி மற்றும் உள்கட்டமைப்புடன் ஒரு சிறிய கூரை போன்ற அமைப்பிலேயே இயங்கி வந்தது. இந்த இடநெருக்கடி கற்றல் சூழலைப் பாதித்ததோடு, கூடுதல் மாணவர்களைச் சேர்ப்பதற்கும் தடையாக இருந்தது. தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கூடுதல் இடவசதியை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 100 முதல் 140 மாணவர்கள் வரை கல்வி பயிலும் வகையில் பள்ளியின் மாணவர் சேர்க்கைத் திறன் உயர்ந்துள்ளது.

இக்கட்டிடம் 2025-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2026-ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் CSR திட்டத்தை அமல்படுத்தும் பார்ட்னராக 'ரைட்ஸ் எஜுகேஷன் அண்ட் டெவலப்மென்ட் சென்டர்' (REDC) செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது, திட்டமிடல், செயலாக்கம் மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தது.

திறப்பு விழாவில் உரையாற்றிய வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான (MD & CEO) குல்பாஹார் தவ்ரானி கூறுகையில், “குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், வளரவும், கனவு காணவும் ஊக்கமளிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதிலிருந்தே கல்வி தொடங்குகிறது. வெர்சுனி நிறுவனத்தின் நோக்கம் வீடுகளைச் சிறந்த இல்லங்களாக மாற்றுவதாகும். மக்கள் வசதியாகவும், ஆதரவாகவும், தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையிலான சூழலை உருவாக்குவது, நம்மைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தையூர் பள்ளியின் அன்றைய நிலையைப் பற்றி அறிந்தபோது, எங்களால் முடிந்த ஒரு பயனுள்ள பங்களிப்பை வழங்க வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம். இந்நீதிய கட்டிடம் தையூர் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்கான ஒரு சிறிய அடியாகும்.

எங்களைப் பொறுத்தவரை, அதிகமான குழந்தைகள் இந்தப் பள்ளியின் கதவுகளைக் கடந்து உள்ளே நுழைவதையும், தன்னம்பிக்கையுடன் கற்றுக்கொள்வதையும், தங்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதையுமே இத்திட்டத்தின் உண்மையான வெற்றியாகக் கருதுகிறோம். இத்திட்டத்தை நிஜமாக்க எங்களுடைய CSR கூட்டாளியான REDC அமைப்புக்கும், பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்குக் கிடைத்த பெருமையாகும்,” என்று தெரிவித்தார்.

திறப்பு விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் மக்கள், வெர்சுனி இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் REDC அமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பள்ளிப் பைகள் மற்றும் கல்வி உபகரணப் பெட்டிகள் வழங்குதல், ஊழியர்களின் பங்கேற்பு நடவடிக்கைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை இடம்பெற்றன.

தற்போது இப்பள்ளியில் சுமார் 35 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், இந்த புதிய உள்கட்டமைப்பு வரும் ஆண்டுகளில் சுற்றியுள்ள சமூகங்களைச் சேர்ந்த மேலும் பல குழந்தைகளை வரவேற்பதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது. வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்பட்ட கற்றல் சூழல்களுக்கான அணுகலை சாத்தியமாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தான் இயங்கும் சமூகங்களுக்குப் பயனுள்ள வகையில் பங்களிப்பளிப்பதற்கான வெர்சுனி இந்தியாவின் முயற்சிகளில் இத்திட்டமும் ஒரு பகுதியாகும்.

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Airtel Reinforces its Culture of Customer Obsession

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life