உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கென 'சமத்வா' சிறப்பு மையத்தை தொடங்கியது காவேரி மருத்துவமனை



*Tamil photo caption:* காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில், உடல் பருமன், வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான SAMATVA மையத்தை தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் மருத்துவ இரைப்பைக் குடல் பிரிவின் மருத்துவத் தலைவர் டாக்டர் பியூஷ் பவானே, காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் ஹார்மோன் துறை (எண்டோக்ரினாலஜி) ஆலோசகர் டாக்டர் ரமீஸ் ராஜா பி மற்றும் SAMATVA குழுவினர் உடனிருந்தனர்.


உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கென 'சமத்வா' சிறப்பு மையத்தை தொடங்கியது காவேரி மருத்துவமனை


● தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

சென்னை, அக்டோபர் 07, 2026: உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு விரிவான, ஒருங்கிணைந்த சிகிச்சை, அத்துடன் வாழ்க்கை முறை மாற்றத்திற்கான பிரத்யேக வழிமுறைகளை தகுந்த நிபுணர்களைக் கொண்டு வழங்குவதற்காக காவேரி மருத்துவமனை - ரேடியல் ரோடு, ‘சமத்வா’ என்ற சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது. இந்த மையத்தை தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார்.


உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான உடல் நல பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார சர்வே-6 (2023-24)ன் படி, தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 44.2% பேர் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் உள்ளனர். உடல் பருமன் பிரச்சனைகளுக்கு வழக்கமான எடைக் குறைப்பு திட்டங்கள் மட்டும் போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு நபரின் வளர்சிதை மாற்றம், ஊட்டச்சத்து, உடலியல் சார்ந்த நிலைகளுக்கு ஏற்ப தனியாக சிகிச்சை முறைகளை உருவாக்க வேண்டும். தவிர, தகுந்த வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம். எனவே இவை அனைத்தையும் மக்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த முறையில் பெறுவதற்காக சமத்வா மையம் உருவாக்கப்பட்டுள்ளது.


இம்மையத்தின் பல்துறை மருத்துவக் குழுவில் பொது மருத்துவர்கள், ஹார்மோன் நிபுணர்கள் (எண்டோக்ரினாலஜிஸ்ட்ஸ்), இரைப்பைக் குடல் மருத்துவ நிபுணர்கள், கல்லீரல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிற துறை நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். சமத்வா உடல் எடையை குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்துவதிலும், உடல் பருமனால் ஏற்பட வாய்ப்புள்ள பிற நோய்களை வராமல் தடுப்பதிலும், சரியான வாழ்க்கை முறைகளை பரிந்துரைப்பதிலும் கவனம் செலுத்தும்.


சமத்வா மையம் குறித்து காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் மருத்துவ இரைப்பைக் குடல் பிரிவின் மருத்துவத் தலைவர் டாக்டர் பியூஷ் பவானே பேசுகையில், “உடல் பருமன் வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் நீரிழிவு நோய், கொழுப்பு கல்லீரல் நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் போன்ற நோய்கள் தோன்ற காரணமாக அமையலாம். இந்த அபாயங்களை விரிவாக மதிப்பீடு செய்து, ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற தகுந்த சிகிச்சைகளை சமத்வா மையம் வழங்கும்,” என்றார்.


காவேரி மருத்துவமனை ரேடியல் ரோட்டின் ஹார்மோன் துறை (எண்டோக்ரினாலஜி) ஆலோசகர் டாக்டர் ரமீஸ் ராஜா பி பேசுகையில், “உடல் பருமன் என்பது ஒரு சிக்கலான வளர்சிதை மாற்ற நிலையாகும். இது உடலின் பல உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது. உடல் பருமன் மேலாண்மைக்கு பல்வேறு துறை சார்ந்த பிரத்யேகமான அணுகுமுறையே முக்கிய தீர்வு. சமத்வா மையத்தில் நோயாளிகளுக்கு விரிவான மதிப்பீட்டின் மூலம் தனிப்பட்ட அபாயங்களைக் கண்டறிந்து, பொருத்தமான சிகிச்சை அணுகுமுறையை தீர்மானித்து திறம்பட வழங்குகிறோம்,” என்றார்.


காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “மக்களின் மாறிவரும் ஆரோக்கியத் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவச் சேவைகளும் மாற வேண்டும் என்று காவேரி மருத்துவமனை நம்புகிறது. உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் நீண்ட கால மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு எடைக் குறைப்பையும் தாண்டி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு மருத்துவ சேவை முறையை சமத்வா மையம் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். மருத்துவ நிபுணத்துவத்தையும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கமே இம்மையத்தின் தனிச்சிறப்பு,” என்றார்.


நிலையான வாழ்க்கை முறை மாற்றத்திற்குத் தொடர்ச்சியான வழிகாட்டுதலும் கண்காணிப்பும் தேவைப்படுவதால், சிகிச்சைக்கு பிறகும் இந்த மையம் நோயாளிகளுடன் தொடர்ந்து பயணம் செய்து நோயாளிகளின் முன்னேற்றம் மற்றும் மாறிவரும் தேவைகளின் அடிப்படையில் தனது சிகிச்சை முறைகளை தகவமைத்து வழங்கும்.

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Airtel Reinforces its Culture of Customer Obsession

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life