ஐசிஐசிஐ புரூ ஐ-ப்ரோடெக்ட் ஸ்மார்ட் பிளஸ்: 10 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுடன் குறைந்த பிரீமியத்தில், குறுகிய கால நிதிப் பொறுப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஸ்மார்ட்டான வழி

ஐசிஐசிஐ புரூ ஐ-ப்ரோடெக்ட் ஸ்மார்ட் பிளஸ்: 10 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுடன் குறைந்த பிரீமியத்தில், குறுகிய கால நிதிப் பொறுப்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஸ்மார்ட்டான வழி 

சென்னை 2026: ICICI ப்ருடென்ஷியலின் ஐ-ப்ரோடெக்ட் ஸ்மார்ட் (iProtect Smart) தற்போது 10 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டுக்கடன், குழந்தைகளின் கல்வி இலக்குகள் மற்றும் வணிகக் கடன்கள் போன்ற குறிப்பிட்ட நிதிப் பொறுப்புகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்காகவே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது நிதிப் பொறுப்புகள் அதிகமாக இருக்கும் வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில், குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் காப்பீட்டைத் தேர்வு செய்ய முடிகிறது. மேலும், இத்திட்டத்தில் ₹67,100/- வரையிலான இலவச ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுச் சேவைகள், ₹3 லட்சம் உடனடி க்ளெய்ம் வழங்கள் மற்றும் தீவிர நோய் கண்டறியப்பட்டால் 100% இழப்பீடு ஆகியவை அடங்கும். 

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் விநியோகப் பிரிவுத் தலைவர் (Chief of Distribution) திரு. மணிகண்டன் ராஜாமணி அவர்கள் கூறும்போது, “நிதிப் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களின் வாழ்க்கை இலக்குகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸில், வாடிக்கையாளர்களின் நிதிப் பயணத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களுக்கு மிக முக்கியமானவற்றைப் பாதுகாக்க உதவுவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். மலிவான கட்டணத்துடன், அர்த்தமுள்ள நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களை இணைத்து, 10 ஆண்டு கால பாலிசி யோகனையுடன் எங்களது காப்பீட்டுச் சேவைகளை விரிவாக்குவதன் மூலம் 'ஐசிஐசிஐ புரூ ஐப்ரோடெக்ட் ஸ்மார்ட் பிளஸ்' (ICICI Pru iProtect Smart Plus) இந்த வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்தும் அணுகுமுறையை அப்படியே பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார். 

“99.3% என்ற தொழில்துறையின் முன்னணி க்ளெய்ம் தீர்வு விகிதம் மற்றும் 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரியாக 1 வேலை நாளில் க்ளெய்ம் தீர்வு செய்யும் வேகம் ஆகியவற்றுடன், வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மிகவும் தேவையான நேரங்களில் நாங்கள் எப்போதும் உடன் நிற்கிறோம்.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனம் ₹ 1,306 கோடி மதிப்பிலான இறப்புக்காலக் க்ளெய்ம்களைத் தீர்த்து வைத்துள்ளதுடன், ₹ 3,360 கோடியை முதிர்வு மற்றும் வாழ்க்கை நலப்பயன்களாக வழங்கியுள்ளது. இது பாலிசிதாரர்களுக்குத் தேவையான நேரத்தில் நிதிப் பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குவதில் ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், 2026 நிதியாண்டில் நிறுவனம் ₹ 5,149 கோடி மதிப்பிலான இறப்புக்காலக் க்ளெய்ம்களைத் தீர்த்து வைத்துள்ளதோடு, ₹ 15,363 கோடியை முதிர்வு மற்றும் வாழ்க்கை நலப்பயன்களாக வழங்கியுள்ளது.” என்றார்.

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Airtel Reinforces its Culture of Customer Obsession

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI