WPL 2026-ல் ஒரு பிரீமியர் கூட்டாளராக சின்டெக்ஸ் நிறுவனம் அதன் 50ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது

 WPL 2026-ல் ஒரு பிரீமியர் கூட்டாளராக சின்டெக்ஸ் நிறுவனம் அதன் 50ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கிறது

சென்னை, ஜனவரி 9, 2026: வெல்ஸ்பன் வேர்ல்ட் இன் ஒரு பகுதியான மற்றும் 2026 பெண்கள் பிரீமியர் லீக்கின் (WPL) முதன்மை கூட்டாளரான சின்டெக்ஸ் BAPL அதன் 50 ஆண்டு நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை நிறைந்த பயணத்தைக் கொண்டாடுகிற வகையில் களத்தில் நடைபெறும் மற்றும் ஒளிபரப்பு சார்ந்த ஆழ்த்துகின்ற ஒரு தொடர் நிகழ்வுகளின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்க்கத் தயாராக உள்ளது.

சின்டெக்ஸ் நிறுவனம் இந்தியக் குடும்பங்களில் தனது ஐம்பது ஆண்டுகால இருப்பைக் கொண்டாடும் வேளையில், WPL உடனான அதன் கூட்டாண்மை, பரிணாம வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் ஒரு பகிரப்பட்ட கதையை பிரதிபலிக்கிறது. விளிம்பு நிலையிலிருந்து பிரதான இடத்திற்கு வளர்ந்த மகளிர் கிரிக்கெட்டைப் போலவே, சின்டெக்ஸ் இன் பயணமும் நிலைத்தன்மை, புதுமை மற்றும் இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு ஆதரவளித்து பாதுகாக்கும் தீர்வுகள் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்புகள் குறித்து கருத்து தெரிவித்த வெல்ஸ்பன் BAPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சின்டெக்ஸ் நிறுவன இயக்குநர் யஷோவர்தன் அகர்வால் கூறுகையில் "சின்டெக்ஸ் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த நேரத்தில், WPL-ல் எங்கள் நிறுவனத்தின் பங்கேற்பு வெறும் காட்சித் தோற்றத்திற்கு அப்பாற்பட்டு, ரசிகர்கள் உண்மையிலேயே தங்களை இணைத்துக்கொள்ளக்கூடிய மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய தருணங்களை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஏனென்றால், இந்தியாவில் மக்களை ஒன்றிணைப்பதில் ஒரு தனித்துவமான வழியை கிரிக்கெட் கொண்டுள்ளது

பெண்கள் கிரிக்கெட்டையும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் கொண்டாடுவதன் மூலமும், இந்த லீக்கின் பரந்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலமும், கிரிக்கெட் மீதான பொதுவான அன்பின் அடிப்படையில், கடந்த ஐந்து தசாப்தங்களாக எங்கள் பயணத்தை வரையறுத்துள்ள நிலைத்தன்மை, மீள்திறன் மற்றும் நம்பிக்கை ஆகிய விழுமியங்களை நாங்கள் நினைவுகூர விரும்புகிறோம்."என்று கூறினார்.

சின்டெக்ஸ் இன் WPL 2026 கள மையத்தில், இந்த விளையாட்டுடன் ஒரு வலுவான ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைப்பு உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும், முதல் அணி அதன் 50-ரன் மைல்கல்லை அடையும்போது, கிரிக்கெட்டின் மிகவும் கொண்டாடப்படும் சாதனைகளில் ஒன்றை சின்டெக்ஸ் இன் 50-வருட பாரம்பரியத்துடன் அடையாளப் பூர்வமாக இணைக்கின்ற ஒரு பிரத்தியேகமான வர்ணனையாளரின் நினைவுபடுத்தும் அறிவிப்பு மற்றும் பிராண்டு இணைப்பின் மூலம் இந்த தருணம் அங்கீகரிக்கப்படும். 

களத்திலும் திரையிலும், சின்டெக்ஸ் நிறுவனம் போட்டிப் பகுப்பாய்வுகள் மற்றும் ஒளிபரப்பு காட்சிகளிலும் தோன்றுகின்ற மெய்நிகர் ஆடுகள வரைபட ஒருங்கிணைப்பிலும் இடம்பெறும். 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த சந்தர்ப்பத்தில், சுகாதாரம் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை ஆகியவற்றிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றும் தொழில்துறையில் முதன்முறையாக, நம்பகத்தன்மை மற்றும் புதுமையில் இந்த பிராண்டின் கவனத்தை வலியுறுத்துகின்ற ஒரு 50 ஆண்டு உத்தரவாதத்துடன் கூடிய மேம்பட்ட நீர் சேமிப்பு தொட்டியின் அறிமுகத்தை சின்டெக்ஸ் நிறுவனம் அறிவிக்க உள்ளது .

வெல்ஸ்பன் BAPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சின்டெக்ஸ் இன் இயக்குநர் யஷோவர்தன் அகர்வால் கூறுகையில், “பல தசாப்தங்களாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் தங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், ஏதேனும் ஒரு வழியில் ஒரு சின்டெக்ஸ் தொட்டியை கண்டிருப்பார்கள். அந்தப் பகிரப்பட்ட பரிச்சயமான உணர்வுதான் திரையில் உண்மையான மற்றும் நினைவுகூரத்தக்க தருணங்களை உருவாக்க எங்களுக்கு உதவும்.” என்று கூறினார்.

இயல்பான, கொண்டாட்டமான மற்றும் இந்த விளையாட்டின் உணர்வில் வேரூன்றிய ஒரு வழியில் ரசிகர்களுடன் இணைகின்ற இந்தச் செயல்பாடுகள் மூலம், சின்டெக்ஸ் நிறுவனம் போட்டியின் தருணங்களை அர்த்தமுள்ள பிராண்ட் அனுபவங்களாக மாற்றுவதற்கு நோக்கம் கொண்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Airtel Reinforces its Culture of Customer Obsession

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life