தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் ஹிந்துஜா அறக்கட்டளையின் சில்ட் முன்முயற்சி துவக்கம்! 75 கால்பந்து மைதான விவசாய நிலங்கள் ஏற்கனவே மீட்டெடுப்பு!
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் ஹிந்துஜா அறக்கட்டளையின் சில்ட் முன்முயற்சி துவக்கம்! 75 கால்பந்து மைதான விவசாய நிலங்கள் ஏற்கனவே மீட்டெடுப்பு! தமிழ்நாட்டில் விவசாயிகள் முன்னேற்றம் மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சிக்கான சிறந்த முன்னெடுப்பு சுமார் 55 ஹெக்டேர் விவசாய நிலங்களை மீட்டெடுத்து 60க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டம்! சென்னை, 25 நவம்பர் 2025 : 110 ஆண்டுகள் பழமையான இந்துஜா குழுமத்தின் தொண்டு நிறுவனமான இந்துஜா அறக்கட்டளை, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதன் முதன்மையான ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 'நிலையான விவசாய நில வளப்படுத்தலுக்கான சில்ட்' என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. பிரதான் (வளர்ச்சி நடவடிக்கைக்கான தொழில்முறை உதவி), அசோக் லேலேண்ட் நிறுவனத்தை CSR கூட்டாளியாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சி, சூளகிரி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் 60க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 75 ஹெக்டேர் விவசாய நிலத்தை மீட்டெடுத்துள்ளது. அதன்மூலம், சாகுபடி செலவுகளைக் குறைத்துள்ளது. நீர்ப்பாசன குளங்கள் மற்றும் தோட்டக...