அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது!
அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது!
சென்னை, நவம்பர் 20, 2025: தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய முன்னெடுப்பாக,, அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன் [Apollo Hospitals Greams Lane], பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (Deep Brain Stimulation - DBS) எனும் மேம்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது. இது பார்கின்சன் நோய்க்கான ஒருங்கிணைந்த பராமரிப்பு மற்றும் நரம்பியல் பிரச்சினைகளுக்கான நவீன அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் தமிழ்நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த மையம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த மருத்துவ நிபுணத்துவம், நேர்மறையான பலன்களை அளிக்கும் துல்லியமான நரம்பியல் அறுவைசிகிச்சைகள் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு மாதிரி ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட இந்த மையம், இந்தியா முழுவதுக்கும் மட்டுமில்லாமல், நம்முடைய அண்டை நாடுகளான தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் மருத்துவ பயனாளர்களுக்கு சிறந்த சிகிச்சை முடிவுகளை வழங்கி வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், உடல் இயக்க பிரச்சினைகள் மற்றும் டிபிஎஸ் ஆகிவற்றுக்கான அப்போலோ அட்வான்ஸ்ட் மூவ்மெண்ட் டிஸ்ஆர்டர்ஸ் & டிபிஎஸ் சென்டர் [Apollo Advanced Movement Disorders & DBS Centre], தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான டிபிஎஸ் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.. இதன் மூலம், தென் இந்தியாவின் முன்னணி சிகிச்சை மையங்களில் ஒன்றாக இம்மையம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இம்மையத்தின் மருத்துவர்கள் குழு, அடுத்த தலைமுறை மூளை உணர்வைத் தூண்டும் டிபிஎஸ் தொழில்நுட்பங்களில் [brain-sensing DBS technologies] சிறப்பு அனுபவம் பெற்றதாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மருத்துவ பயனாளருக்கும் ஏற்ற வகையில் அவர்கள் உடல் இயக்கத்திறன் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை வெகுவாக மேம்படுத்தும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட தூண்டல் உத்திகளை வழங்கி வருகிறது..
இம்மையத்திற்கு, மூத்த நரம்பியல் ஆலோசகர் மற்றும் உடல் இயக்கக் கோளாறு சிறப்பு மருத்துவர் டாக்டர். விஜய்சங்கர் பரமானந்தம் [Dr. Vijayashankar Paramanandam, Senior Consultant Neurologist & Movement Disorders Specialist] மற்றும் மூத்த செயல்பாடு நரம்பியல் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் [Dr. Arvind Sukumaran, Senior Consultant Functional Neurosurgeon] ஆகியோர் ஒன்றாக இணைந்து தலைமை வகிகித்து வருகின்றனர்.
இவ்விரு நிபுணர்களும் உடல் இயக்கக் கோளாறுகள் மற்றும் செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சை துறைகளில் சர்வதேச அளவில் மேம்பட்ட பயிற்சியுடன் ஆழ்ந்த அனுபவத்தையும் பெற்றுள்ளனர். மேலும் இவர்கள் உலகளாவிய சிறந்த மருத்துவ நடைமுறைகளை அப்போலோ மருத்துவமனையின் ஒழுங்கமைக்கப்பட்ட, வழிகாட்டுதல் நெறிமுறை அடிப்படையிலான டிபிஎஸ் திட்டத்தில் [DBS program] செயல்படுத்தி வருகின்றனர். இவர்களின் கூட்டு முயற்சி ஒவ்வொரு மருத்துவ பயனாளருக்கும் அவர்களது பிரச்சினைகள் குறித்த விரிவான மதிப்பீடு, துல்லியமான அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட காலம் பின்பற்ற வேண்டிய தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது..
இந்த நிகழ்வில் அப்போலோ மருத்துவமனை, சென்னை பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். இளங்குமாரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO Apollo Hospitals Chennai Region] பேசுகையில், "அப்போலோ மருத்துவமனையைப் பொறுத்தவரையில் எங்களுடைய நோக்கம், மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக எங்களைத் தேடி வரும் ஒவ்வொருவருக்கும் மிக மேம்பட்ட மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்பதே. அப்போலோ அட்வான்ஸ்ட் மூவ்மெண்ட் டிஸ்ஆர்டர்ஸ் & டிபிஎஸ் சென்டர் [Apollo Advanced Movement Disorders & DBS Centre] அடைந்துள்ள முன்னேற்றமும், வரவேற்பும், ஆழ்ந்த நிபுணத்துவம், துல்லியமான சிகிச்சை மற்றும் மருத்துவ பயனாளர்கள் மீதான அக்கறை ஆகியவற்றில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பண்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற சிறப்பு நிபுணத்துவம் மற்றும் அதிநவீன மூளை-உணர் தொழில்நுட்பங்களின் மூலம், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவ பயனாளர்களின் வாழ்க்கையை மாற்றும் வகையில் எங்களது மருத்துவர்கள் குழு செயல்பட்டு வருகிறது. டிபிஎஸ் பிரிவில் தமிழ்நாட்டின் முன்னணி மையமாக விளங்குவதோடு, நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கை, மீண்டும் யாருடைய உதவியும் இல்லாமல் தாமாகவே உடல் இயக்கத்தை மேற்கொள்ளும் சுதந்திரம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்." என்று கூறினார்
டிபிஎஸ் என்பது ஒரு முற்றிலும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தொடர்ச்சியான சிகிச்சைப் பயணம் என்பதை வலியுறுத்தி பேசிய அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேனின் மூத்த நரம்பியல் ஆலோசகர் மற்றும் உடல் இயக்கக் கோளாறு சிறப்பு மருத்துவர் டாக்டர். விஜய்சங்கர் பரமானந்தம் [Dr. Vijayashankar Paramanandam, Senior Consultant Neurologist & Movement Disorders Specialist, Apollo Hospitals Greams Lane, Chennai] கூறுகையில், "டிபிஎஸ் அறுவை சிகிச்சையில் குறுக்குவழிகள் என்று எதுவும் இல்லை. இந்த மருத்துவ முடிவெடுக்கும் செயல்முறை அறுவை சிகிச்சைக்கு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். மருத்துவ ரீதியிலான கணிப்பை, தொழில்நுட்பத்துடன் இணைப்பதே எங்கள் நோக்கம். டிபிஎஸ் என்பது ஒரு அறுவை சிகிச்சையை விட மேலானது; இது ஒருவர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைப் பயணம். இதன் வெற்றி, துல்லியமாக உள்வைப்பு சாதனத்தை பொருத்துவதில் (implantation) மட்டும் இல்லை, ஒவ்வொரு நோயாளியின் அறிகுறிகளின் சுயவிவரத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட, நிபுணத்துவம் வாய்ந்த, தனிப்பயனாக்கப்பட்ட நிரலாக்கத்தையும் (programming) சார்ந்துள்ளது. இதுவே தூண்டுதலை அர்த்தமுள்ள மற்றும் நிலையான முன்னேற்றமாக மாற்றுகிறது. மருத்துவ பயனாளர்களுக்கு மீண்டும் அவர்களின் உடல் இயக்கத்தையும், நம்பிக்கையையும், இறுதியாக அவர்களின் வாழ்க்கையையும் மீட்டுக் கொடுப்பதே எங்கள் நோக்கம்," என்று கூறினார்.
டிபிஎஸ் அறுவை சிகிச்சைக்குத் தேவையான கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய தரங்களைக் குறிப்பிடும் விதமாக, அப்போலோ சில்ட்ரன் ஹாஸ்பிட்டல்ஸின் மூத்த கண்காணிப்பு செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அரவிந்த் சுகுமாரன் [Dr. Arvind Sukumaran, Senior Consultant Functional Neurosurgeon, Apollo Children’s Hospitals, Chennai] பேசுகையில், ‘’ "டிபிஎஸ் முறையை சரியான பகுதியில் மேற்கொள்வது என்பது குறிப்பிட்ட இலக்கான நியூக்ளியஸை தாக்குவது என்று அர்த்தமல்ல. இது ஒவ்வொரு நோயாளியின் செயல்பாட்டு உடற்கூறியல், ஒவ்வொருவருக்கும் அவர்களது மருத்துவ பலன்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதாகும். அதேநேரம், நுட்பம் அல்லது பாதுகாப்பின் எந்தவொரு அம்சத்திலும் சமரசம் செய்யாமல் இருப்பதையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அதிக அளவில் டிபிஎஸ் மேற்கொள்ளப்படும் சர்வதேச மையங்களில் எங்களது மருத்துவர்கள் பெற்ற பயிற்சியானது, மிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சமீபத்திய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கவும், அதே நேரத்தில் அடிப்படையான விஷயங்களில் சமரசம் செய்யாமல் இருக்கவும் தேவையான திறனை எங்களுக்கு அளித்து வருகிறது. அடிப்படை விதி எளிமையானது: ஒவ்வொரு முறையும், பாதுகாப்பை மையமாக வைத்து, ஒவ்வொரு முறையும் சரியாகச் செய்ய வேண்டும்." என்றார்.
மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஆரம்ப கட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளும் அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேனின் உறுதிப்பாடு, நிகழ்நேர நரம்பு உணர் சிகிச்சை மற்றும் அடாப்டிவ் சிமூலேஷனை ஒருங்கிணைத்து இந்தியாவிலேயே முதல் மெட்ரானிக் ப்ரைன்சென்ஸ்™ (Medtronic BrainSense™) டிபிஎஸ் அறுவை சிகிச்சையை எங்களது மையம் மேற்கொண்டதில் இருந்து தெளிவாகிறது. இந்த அறுவை சிகிச்சை, நிகழ்நேர நரம்பு உணர்தல் மற்றும் தகவமைப்புத் தூண்டல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகால மருத்துவ பயனாளர்களின் சிகிச்சை முடிவுகளைச் சிறப்பானதாக மாற்றவும் மேம்படுத்தவும், ஆதார-அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்த மையம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்த மைல்கல் நிகழ்வு வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது’’ என்றார்..
அப்போலோ மருத்துவமனைகள், கிரீம்ஸ் லேனில் உள்ள முழுமையான டிபிஎஸ் சிகிச்சை செயல்முறைகளில் நரம்புகளைப் படம்பிடிக்கும் நியூரோஇமேஜிங், எலெக்ட்ரோபிசியாலாஜிக்கல் எனப்படும் மின்னியல்-உடலியக்க மேப்பிங் (electrophysiological mapping), தனிப்பயனாக்கப்பட்ட அறுவை சிகிச்சைத் திட்டம், நெறிமுறை அடிப்படையில் உள்வைப்பு சாதனத்தைப் பொருத்துதல் மற்றும் நிபுணத்துவம் கொண்ட நிரலாக்கத்துடன் கூடிய நீண்டகால மருத்துவ பராமரிப்பைத் தொடர்தல் போன்றவை அடங்கும். இது ஒவ்வொரு படியும் துல்லியம் மற்றும் பாதுகாப்பின் சமரசமற்ற தரநிலைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது.
மேம்பட்ட நிலையில் உள்ள பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிபிஎஸ் சிகிச்சை மீண்டும் உடல் இயங்கும் திறன், உடல் தடுமாற்றமில்லாத ஸ்திரத்தன்மை மற்றும் அடுத்தவர்களின் உதவியிலாமல் தாமாகவே இயங்கும் ஆற்றல் ஆகியவற்றை வழங்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. அதன் பல்துறை நிபுணத்துவம் மற்றும் மருத்துவ பயனாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றின் மூலம், அப்போலோ மருத்துவமனை, கிரீம்ஸ் லேன், இந்தியாவில் டிபிஎஸ் சிகிச்சை முறையை முன்னெடுத்துச் செல்வதோடு, தெற்காசியா முழுவதிலும் உள்ள மருத்துவ பயனாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் வழங்கி வருகிறது.
அப்போலோ மருத்துவமனை பற்றி:
1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264--க்கும் அதிகமான கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.


Comments
Post a Comment