அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பிரத்யேக ரோபோட்டிக் கணைய அறுவைசிகிச்சை திட்டத்தை தொடங்குகிறது

 அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பிரத்யேக ரோபோட்டிக் கணைய அறுவைசிகிச்சை திட்டத்தை தொடங்குகிறது



சென்னை: ஜுன் 11, 2025: இரைப்பை குடலியல் சார்ந்த புற்றுநோய் சிகிச்சையில் புதிய தரஅளவுகோலை நிறுவும் விதத்தில் அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை ஒரு பிரத்யேக ரோபோட்டிக் கணைய அறுவைசிகிச்சைத் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இரைப்பை குடல் சார்ந்த புற்றுநோய்களில் அதிக சிக்கலான, அதிக இடர்வாய்ப்பு உள்ள அறுவைசிகிச்சைகளுள் ஒன்றாக கருதப்படும் முழுமையான ரோபோட்டிக் விப்பிள்ஸ் செயல்முறையின் (Pancreaticoduodenectomy) தொடர் நிகழ்வுகளின் வெற்றிகரமான நிறைவின் மூலம் இத்திட்டத்தின் அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது.  

மிக நவீன ரோபோட்டிக் தளங்களைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். P. வெங்கட் மற்றும் அத்துறையின் நிபுணர் டாக்டர். பிரியா கபூர் ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் குழுவால் இந்த சிக்கலான அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. கணைய புற்றுநோய் அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய மீட்சியில் ஒரு மைல்கல் நிகழ்வாக அறுவைசிகிச்சை செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளும், அதற்குப் பிந்தைய சிக்கல்கள் எதுவுமின்றி, ஏறக்குறைய நான்கு நாட்கள் காலஅளவில் மருத்துவமனையிலிருந்து அவர்களது இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

தனது ரோபோட்டிக் விப்பிள்ஸ் அறுவைசிகிச்சை செயல்திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியிருப்பதன் வழியாக மேம்பட்ட, நவீன இரைப்பை குடல் புற்றுநோய் சிகிச்சையில் தனது தலைமைத்துவத்தை அப்போலோ கேன்சர் சென்டர், மீண்டும் வலுவாக நிரூபித்திருக்கிறது. இந்தியாவில் அதிக அனுபவம் மிக்க புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர்களுள் ஒருவராகத் திகழும் டாக்டர். P. வெங்கட் தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடக்க நிலையிலுள்ள மற்றும் வளர்ச்சியடைந்திருக்கின்ற கணையப் புற்றுநோய்கள் ஆகிய இருவகை புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிப்பதில் நிகரற்ற நிபுணத்துவத்தை இந்த குழு வெளிப்படுத்துகிறது. சத்தமின்றி கொல்லும் நோய் என அழைக்கப்படும் கணையப் புற்றுநோய், ஆரம்ப நிலைகளில் அறிகுறிகள் இல்லாத நோயாகவே பொதுவாக இருக்கிறது. மஞ்சள் காமாலை போன்றவற்றின் அறிகுறிகள் வெளிப்பட்டதற்குப் பிறகே இவை பொதுவாக இது உறுதி செய்யப்படுகிறது. ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் வழியாக, துல்லியத்தையும், விரைவான மீட்சியையும் சிறப்பான சிகிச்சை விளைவுகளையும் உறுதிசெய்யும் மிகக்குறைந்த ஊடுருவல் உள்ள அணுகுமுறையை நோயாளிகளுக்கு இக்குழு வழங்குகிறது. இதன்மூலம் இப்பிராந்தியத்தில் கணையப் புற்றுநோய்க்கான சிகிச்சைப் பராமரிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இது நிகழ்த்தியிருக்கிறது.  

அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை – ன் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். P. வெங்கட், இச்சாதனையின் முக்கியத்துவத்தையும், அரிதான தன்மையையும் அடிக்கோடிட்டுக் கூறியதாவது: “ஒரு முழுமையான ரோபோட்டிக் விப்பிள் செயல்முறையை மேற்கொள்வது புற்றுநோய் அறுவைசிகிச்சையில் தொழில்நுட்ப ரீதியில் அதிக நிபுணத்துவம் தேவைப்படுகின்ற செயல்பாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. இதற்கு வெறுமனே அறுவைசிகிச்சைத் திறன் மட்டும் இருந்தால் போதாது; உடற்கூறு மீது ஆழமான அறிவு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான அணுகுமுறை ஆகியவையும் அடங்கும். ரோபோ சாதனத்தின் மூலம் இரத்தநாள பிணைப்புகளை உள்ளடக்கிய மூன்று செயல்முறைகளையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பது இரைப்பை குடல் புற்றுநோயியலில் சிகிச்சையில் சாத்தியப்படும் எல்லைகளை தொடர்ந்து முன்னோக்கி நகர்த்துவதில் அப்போலோவின் அர்ப்பணிப்பு உணர்வையும், எமது மருத்துவர்கள் குழுவின் நிபுணத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அதிக சவாலான புற்றுநோய்களுள் ஒன்றான இதனால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அதிக பாதுகாப்பான, குறைந்த ஊடுருவல் உள்ள மற்றும் விரைவான மீட்சியை வழங்கும் சிகிச்சையின் ஒரு புதிய யுகம் தொடங்கியிருப்பதை இந்த மைல்கல் நிகழ்வு குறிக்கிறது.” 

கணையப் புற்றுநோய் என்பது, இந்தியாவில் ஒரு முக்கியமான சுகாதார பிரச்சனையாக இருந்து வருகிறது; சமீப ஆண்டுகளில் இதன் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இந்திய ஆண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு 1,00,000 நபர்களில் ஏறக்குறைய 3.0 என்பதும், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு 1,00,000 நபர்களில் சுமார் 2.1 என்பதும் கணையப் புற்றுநோய் பாதிப்பு விகிதமாக அறியப்படுகிறது. கணையப் புற்றுநோயானது இந்நாட்டில் புற்றுநோய் பாதிப்பிற்கும், உயிரிழப்பிற்கும் அதிக பங்களிப்பை வழங்கும் ஒரு நோயாக உருவெடுத்து வருவதை இப்புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உயர்ந்து வரும் இப்போக்கை திறம்பட சமாளிப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிவது மற்றும் அதன் மீதான விழிப்புணர்வை பரப்புவதில் தொடர்ச்சியான முயற்சிகள் அத்தியாவசியமானதாக இருக்கின்றன. (Link)

அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை – ன் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் சிறப்பு நிபுணர் டாக்டர். பிரியா கபூர் இது குறித்து பேசுகையில், “இந்த பிரத்யேக செயல்திட்டமானது, கணைய மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய்களை எப்படி தாங்கள் அணுகி கையாள்கிறோம் என்பதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. சிகிச்சையின் பயனளிப்பு தன்மை மீது எவ்வித சமரசமும் இல்லாமல், மிகச்சிறிய கீறல்கள், விரைவான மீட்சி மற்றும் குறைவான சிக்கல் விகிதங்களுடன் ஒரு சிறப்பான மாற்று வழிமுறையை ரோபோட்டிக் அறுவைசிகிச்சை நோயாளிகளுக்கு வழங்குகிறது. பல நோயாளிகளுக்கும் சிக்கல் அல்லது இணை நோய்களின் காரணமாக இதற்கு முன்னதாக சாத்தியமற்றது என தவிர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அறுவைசிகிச்சைக்கான சாத்தியங்களின் கதவை இது திறந்து வைக்கிறது. நவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை தனிச்சிறப்பான புற்றுநோயியல் சிகிச்சைகளை ஒருங்கிணைப்பதன் வழியாக, நோயாளிகளின் வாழ்நாள் காலத்தை நாங்கள் நீடிக்கிறோம்; அதுமட்டுமின்றி, நம்பிக்கையையும், கண்ணியத்தையும் மற்றும் தங்களது வாழ்க்கையை மீண்டும் உற்சாகத்தோடு தொடங்கும் வாய்ப்பையும் நோயாளிகளுக்கு நாங்கள் வழங்குகிறோம்.” என்று கூறினார். 

விப்பிள் செயல்முறையானது, ஆரம்பநிலை மற்றும் சிறிய பாதிப்புள்ள கணைய புற்றுநோய்க்கு சாத்தியத்திறனுள்ள குணமாக்கலை வழங்கக்கூடும்; ஆனால், பாரம்பரியமாகவே நீண்டநாட்கள் மீட்சியுடன் அதிக இடர்வாய்ப்புள்ளதாக இது இருக்கிறது. தனது பிரத்யேக ரோபோட்டிக் கணைய அறுவைசிகிச்சை செயல்திட்டத்தின் மூலம் உலகளவில் மிகவும் சிக்கலான இரைப்பை குடலியல் அறுவைசிகிச்சைகளுள் ஒன்றுக்கு உலகத் தரத்திலான நிபுணத்துவத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வழங்குகிறது. அதிக துல்லியம், வெகுசில சிக்கல்கள் மற்றும் விரைவான மீட்சி என்ற ஆதாயங்களை ரோபோட்டிக் அறுவைசிகிச்சை உறுதிசெய்கிறது.  

அப்போலோ கேன்சர் சென்டர், சென்னை – ன் தலைமை செயலாக்க அலுவலர் திரு. கரண் பூரி பேசுகையில், “நோயாளிகளின் வாழ்க்கையில் உண்மையிலேயே ஒரு வேறுபாட்டை உருவாக்குகின்ற உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவது மீதுதான் அப்போலோவில் எமது கூர்நோக்கம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த பிரத்யேக கணைய சிகிச்சை செயல்திட்டத்தின் கீழ், முற்றிலும் ரோபோட்டிக் அடிப்படையிலான விப்பிள் செயல்முறையின் வெற்றிகரமான நிறைவு, எமது அறுவைசிகிச்சை நிபுணத்துவத்திற்கும் மற்றும் திறனுடன் செயல்படுகின்ற முன்னணி தொழில்நுட்பத்திற்கும் சான்றாக இருக்கிறது. பாதுகாப்பான அறுவைசிகிச்சைகள், வேகமாக குணமடைவதற்கான மீட்சிகள் மற்றும் நம்பிக்கையை சிக்கலான புற்றுநோய்களை எதிர்கொள்பவர்களுக்கு தருகின்ற நோயாளியின் நலனை மையமாகக் கொண்ட எமது அணுகுமுறையை இந்த மைல்கல் நிகழ்வு பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்தியாவெங்கிலும் மற்றும் இந்தியாவிற்கு அப்பாலுள்ள நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு மேம்பட்ட, வாழ்க்கையை மாற்றுகின்ற சிறப்பான சிகிச்சைகள் கிடைக்குமாறு செய்வதில் முதன்மை வகிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என்று கூறினார். 

சிறுநீர் பாதையியல், மகளிர் நோயியல், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோயியல் ஆகிய பிரிவுகளில் ரோபோட்டிக் முன்னோடித்துவ அறுவைசிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடியாக நீண்ட காலமாக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் இருந்து வருகிறது. இந்த தனிச்சிறப்பான சிகிச்சை திட்டத்தின் அறிமுகம், ரோபோட்டிக் உதவியுடன் இரைப்பை குடலியல் சார்ந்த புற்றுநோயியலில் ACC – ன் நிபுணத்துவத்தை மேலும் மேம்படுத்துகிறது. இதன்மூலம் அதிக சவாலான, அதிக இடர்வாய்ப்புள்ள உறுப்பான கணையத்திற்கு துல்லியமான மற்றும் குறைவான ஊடுருவல் உள்ள தீர்வுகளை வழங்குவதில் பெருமை கொள்கிறது.  

#புற்றுநோயை வெல்வோம்


அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/ 


புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக,  மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.  இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. 


இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.  


இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம். 


ஊடக விசாரணைகளுக்கு அல்லது மேலதிக தகவல்களுக்கு ‘தொடர்புகொள்க: 




Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

Airtel Reinforces its Culture of Customer Obsession

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

ŌURA Officially Launches in India, Unveils Exclusive Data on How the Nation Sleeps