டெக்னிப் எனர்ஜீஸ் நிறுவனம் அதன் STEM உதவித்தொகை திட்டத்தின் மூன்றாவது பதிப்பின் மூலம் 100 பெண் பொறியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது

 டெக்னிப் எனர்ஜீஸ் நிறுவனம் அதன் STEM உதவித்தொகை திட்டத்தின் மூன்றாவது பதிப்பின் மூலம் 100 பெண் பொறியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது



இந்த நடப்பு ஆண்டில் 100 பொறியியல் மாணவர்களுக்கு தலா ரூ. 30,000 மதிப்பிலான உதவித்தொகை மானியம் வழங்கப்பட்டுள்ளது


பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் எதிர்கால தலைவர்களை உருவாக்குகின்ற வகையில் இந்த உதவித்தொகை திட்டம் STEM துறையில் இளம் பெண் பொறியாளர்களை ஆதரிக்கிறது

சென்னை, ஏப்ரல் 2025 - உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் அதிகார மையமான டெக்னிப் எனர்ஜீஸ் நிறுவனம், 2024-25 கல்வியாண்டிற்கான அதன் இந்திய உதவித்தொகைத் திட்டத்தின் மூன்றாம் பதிப்பிற்கான விருது பெற்றவர்களை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் CSR முயற்சியான 'பெண்களுக்கு STEM கல்வியை ஊக்குவித்தல்' திட்டத்தின் ஆதரவின் கீழ், 100 முனைப்பான மாணவர்கள் தலா ரூ. 30,000 உதவித்தொகையை தங்கள் கல்விப் பயணத்தைத் தொடரப் பெற்றுள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும், பொறியியல் படிப்பின் முதலாம் ஆண்டில் சேரும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவிலிருந்து கல்வி செயல்திறன், சேர்க்கை நிலை மற்றும் வருமானத் தகுதி ஆகியவற்றைச் சரிபார்த்தல் உள்ளிட்ட ஒரு கடுமையான மதிப்பீட்டு செயல்முறையின் அடிப்படையில் திறமையான பெண் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு, டெக்னிப் எனர்ஜீஸ், முந்தைய தொகுதிகளைச் சேர்ந்த 100 பெண் பொறியாளர்களுக்கு, தற்போது 2வது மற்றும் 3வது ஆண்டில், அவர்களின் பொறியியல் படிப்பின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தொடர்ந்து ஆதரவளிக்கிறது. 

இந்த பாராட்டு விழாவில் உரையாற்றிய டெக்னிப் எனர்ஜீஸ் நிறுவனத்தின் இந்தியா நிர்வாக இயக்குநர் திரு. தவேந்திர குமார் கூறுகையில் "டெக்னிப் எனர்ஜீஸ் நிறுவனத்தில், பெண்களுக்கு STEM துறையில் அதிகாரமளிப்பது அவர்களின் எதிர்காலங்களில் செய்யப்படும் வெறும் முதலீடு மட்டுமல்ல, நமது தொழில்துறை மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முதலீடு என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நிதி தடைகளைத் தகர்ப்பதன் மூலம், நிலைத்திருக்கும் தீர்வுகளை வழிநடத்தப் போகும் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தலைவர்களை நாங்கள் வளர்த்தெடுக்கிறோம். ஒரு பிரகாசமான, மிகவும் சமத்துவமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் நாங்கள் ஓன்றாக தொடர்ந்து செயல்படுகின்றபோது பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்குதல் ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாததாக உள்ளது."என்று கூறினார்.  

டெக்னிப் எனர்ஜீஸ் இன் பெண் பொறியாளர்கள், மாணவிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குகின்ற இந்த உதவித்தொகைத் திட்டத்தில் வெபினார்கள், ஆலோசனை அமர்வுகள் மற்றும் அனுபவப் பகிர்வு மன்றங்கள் ஆகியவை அடங்கும். இந்த முயற்சி இளம் பெண்களுக்கு, அவர்களின் கல்வியை ஆதரிப்பது மட்டுமல்ல, பொறியியல் துறையில் எதிர்கால தலைவர்களாக அவர்களின் நீண்டகால திறமைகளையும் ஆதரிக்கின்ற முக்கிய STEM துறைகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கு அதிகாரம் அளிக்கிறது.

டெக்னிப் எனர்ஜீஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஐக்கிய நாடுகளின் ஒரு முக்கியமான நிலைத்தன்மை வளர்ச்சி இலக்கான பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கின்ற வகையில் இந்த நிறுவனத்தின் உறுதிப்பாட்டுடன் இணைகிறது. இன்றுவரை, டெக்னிப் எனர்ஜீஸ் இன் உதவித்தொகைத் திட்டம் STEM துறையில் 250க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வெற்றிகரமாக ஆதரவளித்துள்ளது.

உள்ளடக்கிய மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த உலகத்தை உருவாக்குகின்ற வகையில் டெக்னிப் எனர்ஜீஸ் இந்தியா தனது முன்னணி CSR திட்டமான ‘Seed of Hope’ 'நம்பிக்கையின் விதை' திட்டத்தின் மூலம் இதுவரை 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழ்க்கைகளில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

ஏர்டெல் கிளவுட் திறனை மேம்படுத்துவதற்காக IBM உடனான ஓர் உத்திசார்ந்த கூட்டாண்மையை பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Apollo OMR Marks a Milestone in Robotic Joint Replacement:

Airtel Reinforces its Culture of Customer Obsession