ஸ்பேமுக்கு எதிரான தனது தொடர் போராட்டத்தில் ஏர்டெல் புதிய அம்சங்களை அறிவிக்கிறது

 ஸ்பேமுக்கு எதிரான தனது தொடர் போராட்டத்தில் ஏர்டெல் புதிய அம்சங்களை அறிவிக்கிறது



சர்வதேச அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களுக்குக் கவரேஜை விரிவுபடுத்துகிறது

 தமிழ் மற்றும் மேலும் 9 உள்ளூர் மொழிகளில் ஸ்பேம் எச்சரிக்கை காட்சியை அறிமுகப்படுத்துகிறது


சென்னை, ஏப்ரல் 21, 2025: தனது வாடிக்கையாளர்களுக்கு 2750 கோடிக்கும் (27.5 பில்லியன்) அதிகமான அழைப்புகளை ஸ்பேமாக அறிவித்த தன் AI யால் இயக்கப்படும் ஸ்பேம் கண்டறிதல் கருவியை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்பேமர்களை முறியடிக்கும் வகையில் இரண்டு குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை அறிமுகப்படுத்துவதாக ஏர்டெல் இன்று அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான இந்திய மொழிகளில் அழைப்புகளையும் எஸ்எம்எஸ் செய்திகளுக்கான ஸ்பேம் எச்சரிக்கைகளையும் பெறுவார்கள். இந்தப் புதிய அம்சம் பத்து உள்ளூர் மொழிகளில் கிடைக்கும். எதிர்காலத்தில் மேலும் மொழிகளச் சேர்க்கும் திட்டமும் உள்ளது. ஏர்டெல்லின் AI-யால் இயக்கப்படும் கருவி இப்போது சர்வதேச நெட்வொர்க்குகளில் இருந்து வரும் அனைத்து ஸ்பேம் அழைப்புகளையும் எஸ்எம்எஸ்-களையும் திரையிட்டு வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கும்.

உள்நாட்டு ஸ்பேம் அழைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஏர்டெல் தீவிரப்படுத்தியவுடன் மோசடி செய்பவர்களும் ஸ்பேமர்களும் மோசடி அழைப்புகளை இந்தியாவிற்குள் அனுப்ப வெளிநாட்டு நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த ஆபத்தான போக்கு கடந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு ஸ்பேம் அழைப்புகளில் 12% அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஏர்டெல் தனது புதிய அம்சத்தின் மூலம் இந்த வளர்ந்து வரும் சவாலை முறியடிக்கலாம் என்று கருதுகிறது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த பாரதி ஏர்டெல்லின் கனெக்டெட் ஹோம்ஸ் நிறுவனத்தின் மார்க்கட்டிங் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் சர்மா, “வாடிக்கையாளர்களும்ம் அவர்களது கருத்துகளும்தான் நாங்கள் முன்னெடுக்கும் அனைத்திற்கும் மையமாக உள்ளன. வாடிக்கையாளர் கருத்துக்களை கவனமாக ஆராய்ந்த பின் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு சிறப்பாகச் சேவை செய்ய எங்கள் தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம். மேலும் வெளிநாட்டு நெட்வொர்க்குகளுக்கு ஸ்பேம் போக்குவரத்தின் அளவு அதிகரித்து வருவதால் சர்வதேச எண்களில் இருந்து வரும் அனைத்து எஸ்எம்எஸ் செய்திகளையும்ம் தொலைபேசி அழைப்புகளையும் ஸ்கேன் செய்ய எங்கள் AI-யால் இயக்கபப்டும் கருவியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அர்ப்பணிப்பு மிகுந்த பொறியாளர்களும்ம் தரவு விஞ்ஞானிகள் குழுவும் எங்கள் தயாரிப்புகளை தொடர்ந்து செம்மைப்படுத்தி மேம்படுத்தும். வளர்ந்து வரும் எந்தாவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடித்து முன்னணியில் இருப்பதை உறுதி செய்யும்”. என்றார்.

மேம்படுத்தப்பட்ட AI-யால் இயக்கப்படும் இந்த ஸ்பேம் தீர்வு, இந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, உருது உள்ளிட்ட பத்து இந்திய மொழிகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து பயனர்களுக்கு இப்போது அறிவிக்கும். உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்தி ஸ்பேம் எச்சரிக்கை அறிவிப்புகளை ஆண்ட்ராய்டு சாதனங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இலவசமாகக் கிடைக்ம், மேலும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் சேவை கோரிக்கையை எழுப்பாமலேயே தானாக செயல்படுத்தப்படும்.

பட விளக்கம்





 

                                                  











ஏர்டெல்லின் புதுமையானதும் தொழில்துறையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதுமான ஸ்பேம் எதிர்ப்புக் கருவி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்து வருகிறது. தேவையற்ற தகவல்தொடர்புகளில் இருந்து கணிசமான அளவில் விடுதலையை வழங்குகிறது. ஏர்டெல்லின் கருத்துப்படி இது இன்றுவரை 2750 கோடி அழைப்புகளை அடையாளம் கண்டுள்ளது: அதாவது செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஒவ்வொரு நொடியும் 1560 ஸ்பேம் அழைப்புகள். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் அழைப்புகளில் 16% குறைந்துள்ளது.

About Bharti Airtel Limited:

Headquartered in India, Airtel is a global communications solutions provider with over 550 million customers in 15 countries across India and Africa. The company also has its presence in Bangladesh and Sri Lanka though its associate entities. The company ranks amongst the top three mobile operators globally and its networks cover over two billion people. Airtel is India’s largest integrated communications solutions provider and the second largest mobile operator in Africa. Airtel’s retail portfolio includes high-speed 4G/5G mobile broadband, Airtel Xstream Fiber that promises speeds up to 1 Gbps with convergence across linear and on-demand entertainment, streaming services spanning music and video, digital payments and financial services. For enterprise customers, Airtel offers a gamut of solutions that includes secure connectivity, cloud and data centre services, cyber security, IoT, Ad Tech and cloud based communication. Within our diversified portfolio, we offer passive infrastructure services through our subsidiary Indus Tower Ltd. For more details visit www.airtel.com

Comments

Popular posts from this blog

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail

Technology, Trust and Inclusion to Drive Next Phase of General Insurance Growth in India

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

மிகப்பெரிய தனியார் சுயாதீன குறிப்பிட்ட செயல்பாட்டில் கவனம் செலுத்தும் பொறியியல் சேவைகள் நிறுவனமான குவெஸ்ட் குளோபல் நிறுவனத்தில் ஹில்ஹவுஸ் முதலீடு செய்ய உள்ளது

Airtel Reinforces its Culture of Customer Obsession

Lenovo India Enables Businesses in Chennai with Smarter AI

ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது

மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்

Airtel launches Priority Postpaid – delivering superior network experience for its customers

ŌURA Officially Launches in India, Unveils Exclusive Data on How the Nation Sleeps