இரத்த ஓட்டம் இல்லா நசிவு நிலை (அவாஸ்குலர் நெக்ரோசிஸ்) பாதிப்பில் 36 வயது நோயாளி ஒருவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லாமல், இயக்கத்தை மீண்டும் பெற அப்போலோ ஆயுர்வைட் உதவியது
இரத்த ஓட்டம் இல்லா நசிவு நிலை (அவாஸ்குலர் நெக்ரோசிஸ்) பாதிப்பில் 36 வயது நோயாளி ஒருவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவையில்லாமல், இயக்கத்தை மீண்டும் பெற அப்போலோ ஆயுர்வைட் உதவியது
சென்னை, ஜனவரி 20, 2026:
இந்தியாவின் முன்னணி NABH அங்கீகாரம் பெற்ற, துல்லியமான ஆயுர்வேத மருத்துவமனை நெட்வொர்க்கான அப்போலோ ஆயுர்வைட், இடுப்பு எலும்பின் இரத்த ஓட்டம் இல்லா நசிவு நிலை (அவாஸ்குலர் நெக்ரோசிஸ்) நோய்க்கு ஆளான 36 வயது ஆண் நோயாளிக்கு வெற்றிகரமான சிகிச்சை அளித்து, அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்கவும், மீண்டும் செயல்பாடு மிக்க, வலி இல்லாத வாழ்க்கைக்குத் திரும்பவும் உதவியுள்ளது. நீண்ட நேரம் நின்று பணிபுரிதல் மற்றும் இரவுப் பணிகள் உள்ளிட்ட மேற்பார்வையிடும் பணியை மேற்கொண்ட இந்த நோயாளர், சிகிச்சைக்கு முன் கடுமையான இயக்கக் கட்டுப்பாடுகளை அனுபவித்து வந்தார். ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரவோ நிற்கவோ முடியாத நிலையிலும், தொடர்ச்சியான வலியின் காரணமாக அவர் நடக்கவும் மிகவும் சிரமப்பட்டார். இரத்த ஊட்டக் குறை நசிவு நோயின் முற்றிய நிலை காரணமாக, அறுவைச் சிகிச்சையே அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது முந்தைய ஆலோசக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 2024-ல், நோயாளி அறுவை சிகிச்சை அல்லாத மாற்று தீர்வு கோரி அப்போலோ ஆயுர்வைட், வானகரம் கிளையை அணுகினார். ஒரு விரிவான மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, சிகிச்சைக் குழு அவாஸ்குலர் நெக்ரோசிஸின் நோய்க்காரணவியல் செயல்முறையை முறையாகத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு துல்லியமான ஆயுர்வேத சிகிச்சை நெறிமுறையை உருவாக்கியது. இந்த சிகிச்சை நெறிமுறை, நோயின் தீவிரம், தொடர்புடைய அபாய காரணிகள், தனிப்பட்ட உடல் தன்மை மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றை மதிப்பிட்ட பின் வடிவமைக்கப்பட்டது.. இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் இரண்டையும் உறுதி செய்வதற்காக
நோயாளியின் குறிப்பிட்ட மாறிகளை நிறுவப்பட்ட சிகிச்சை கட்டமைப்புகளுடன் இணைக்கின்றது.
இந்த மருத்துவ சிகிச்சைத் திட்டம் எலும்புத் திசு ஊட்டமளித்தலையும் புத்துணர்வாக்கத்தையும் ஊக்குவிக்க அஸ்திபோஷக ரசாயனம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் விறைப்பைக் குறைக்கவும் மருந்து சேர்த்த மூலிகை எண்ணெய்கள் கொண்ட அப்யங்கம் மேலும் ஆழ்மட்ட தசை-எலும்பு நோயியல் மற்றும் மண்டல சமநிலையின்மைகளை நிவர்த்தி செய்வதற்காக பஸ்தி சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது. 10 மாத கால சிகிச்சைப் போக்கில், வலி குறைதல், மூட்டு இயக்கத் திறன் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோயாளி கண்டார். தற்போது, அவர் வலியின்றி உள்ளார், இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடிகிறது, நீண்ட நேரம் நின்றிருக்க முடிகிறது, மற்றும் தனது குழந்தையைத் தூக்குவது மற்றும் பராமரிப்பது உள்ளடக்கிய குடும்ப வாழ்வில் தீவிரமாக பங்கேற்கிறார்.
இந்த நோய்நிலை குறித்து, அப்போலோ ஆயுர்வைட் இன் மூத்த மருத்துவர் மற்றும் மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் ஸ்மிதா ஜெயதேவ் கூறும்பொழுது, “அவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்பது பெரும்பாலும் அறுவை சிகிச்சை தவிர்க்கமுடியாது எனக் கருதப்படும் ஒரு நிலை. இந்த நோய் சிகிச்சை, ஒரு துல்லியம் சார்ந்த, மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்படும் ஒரு ஆயுர்வேத அணுகுமுறை, நோயின் முன்னேற்றத்தை எவ்வாறு கையாளலாம் மற்றும் செயல்பாட்டை மீட்டெடுக்கலாம் என்பதை விளக்குகிறது. ஆயுர்வேத தலையீடு இந்நிலையின் XX கட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இருப்பினும் தீவிரமான முன்னேற்றத்திற்கு அறுவை சிகிச்சை ஆதரவு தேவைப்படும், அங்கு ஆயுர்வேதம் மீள்காலப் பயணத்தை மேம்படுத்துவதில் உதவுகிறது.
வயது முதிர்வு அல்லது பிற ஆபத்துக் காரணிகளால் தசைக்கூட்டுச் சிதைவுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு, ஆயுர்வேதம் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் தினசரி உணவுப் பழக்கவழக்கங்களையும் வலியுறுத்துகிறது. நீண்ட கால திசுக்களின் ஊட்டத்துக்கு உதவுவதற்கு பசுவின் பால், பசு நெய், தேன் மற்றும் நெல்லிக்காய் போன்ற பொருட்களை, முறையான வழிகாட்டுதலின்
கீழ், சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.” என்றார்.
தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சிகிச்சை பெற்ற திரு. விமல் R, "இது என் வாழ்க்கையின் ஒரு கடினமான கட்டமாக இருந்தது. சிறிய அன்றாட தேவைகளுக்குகூட குடும்பத்தை நான் சார்ந்து இருந்தேன். நிற்பது, நடப்பது அல்லது சில நிமிடங்கள் உட்காருவது போன்ற எளிய பணிகளுக்கும் ஆதரவு தேவைப்பட்டது, குறிப்பாக என் வயதில் இது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருந்தது. ஒரு இளம் பெற்றோராக, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய நீண்ட குணமடைவு பற்றிய எண்ணம் மிகவும் சவாலாக இருந்தது. அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வதற்கு முன்பு வேறு எந்த மாற்று வழி உள்ளதா என்று ஆராய நான் விரும்பினேன். அப்போலோ ஆயுர்வைட் பற்றி நான் அறிந்தேன் மற்றும் நல்ல நம்பிக்கையில் சிகிச்சை பெற முடிவு செய்தேன். காலப்போக்கில், முன்னேற்றம் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் இருந்தது. இன்று, நான் என் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளேன், வேலை செய்ய முடியும், சுதந்திரமாக நகர முடியும், மற்றும் வலி இல்லாமல் என் குழந்தையை பராமரிக்க முடியும்." என்று கூறினார்.
அவாஸ்குலர் நெக்ரோசிஸ் (AVN) என்பது இந்தியாவில் ஒரு அதிகரித்து வரும் கவலையாக உள்ளது, 20-40 வயது இளைஞர்களிடையே இதன் பரவல் கூடுதலாக உள்ளதுடன் இது மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் (THR), பாதிக்கும் மேற்பட்டவற்றுக்குக் காரணமாகின்றது. நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாடு மற்றும் மது அருந்துதல் ஆகியவை முக்கிய ஆபத்துக் காரணிகளாகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், அவாஸ்குலர் நெக்ரோசிஸை, எலும்பிலிருந்து மேலதிக கனிம இழப்பைத் தடுக்கவும், இயற்கையான எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் நோக்கம் கொண்ட ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பஞ்சகர்ம சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அவாஸ்குலர் நெக்ரோசிஸுக்கான மரபணு அடிப்படையிலான, துல்லியமான ஆயுர்வேத நெறிமுறைகளை அப்போலோ ஆயுர்வைட் முன்னோடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. AVN நோய்க்காக அப்போலோ ஆயுர்வைட், மருத்துவ மேற்பார்வையின் கீழ், கட்டமைக்கப்பட்ட, அறுவை சிகிச்சையற்ற சிகிச்சை முறைகளை
வழங்குகின்ற ஆதார அடிப்படையிலான, துல்லியமான ஆயுர்வேத சிகிச்சை நெறிமுறைகளை முன்னோடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்போலோ ஆயுர்வைட் பற்றி
அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் (www.ayurvaid.com ) என்பது இந்தியாவின் முன்னணி நெறிமுறைகள் சார்ந்த, துல்லியமான ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் நாள்பட்ட நோய் மீட்சி/மேலாண்மை மற்றும் நிலையான நல்வாழ்வுக்கான ஒருங்கிணைந்த பராமரிப்பு மையங்களின் முன்னணி சங்கிலியாகும். 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, அப்போலோ ஆயுர்வைட் பெங்களூரு, சென்னை, புது தில்லி, கொச்சி, அல்மோரா மற்றும் ஹைதராபாத் முழுவதும் பரவியுள்ள ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுடன் ஆயுர்வேதத்தை ஒரு முக்கிய மருத்துவ முறையாக மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது, விரைவில் மும்பை மற்றும் பிற முக்கிய இந்திய நகரங்களுக்கும் விரிவடைகிறது.
2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மற்றும் 2022 முதல் அப்போலோ குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அப்போலோ ஆயுர்வைட் நிறுவனம், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ அறிவியலை மருத்துவ துல்லியத்துடன் இணைக்கும் ஒரு தனித்துவமான பராமரிப்பு மாதிரியை உருவாக்குகின்ற ஆயுர்வேத தலைமையிலான ஒருங்கிணைந்த சிகிச்சையை முறைப்படுத்துவதில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. மருத்துவமனைகளின் இந்த சங்கிலி, துணையூக்கி சிகிச்சை, நோய்த்தடுப்பு சிகிச்சை, மறுசீரமைப்பு மற்றும் முதன்மை தலையீடு ஆகியவற்றில் ஒரு கவனத்துடன், நரம்பியல், புற்றுநோயியல், சிறுநீரகவியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் முழுவதிலும் தடையற்ற, ஒருங்கிணைந்த சிகிச்சையின் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மாதிரியை நிரூபித்துள்ளது. அப்போலோ ஆயுர்வைட் இன் தனித்துவமான 'முழு நபர் பராமரிப்பு' அணுகுமுறை, அறிகுறி மட்டத்தில் மட்டுமல்லாமல், மூல காரண மட்டத்திலும் பல்வேறு நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கு முழு நபரையும் கருத்தில் கொள்கிறது மற்றும் தடுப்பு மற்றும் சிகிச்சையிலிருந்து மறுவாழ்வு, உயிர்வாழ்வு மற்றும் நல்வாழ்வு வரை முழு வாழ்க்கைச் சுழற்சி முழுவதிலும் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
மதிப்புமிக்க QCI DL ஷா நேஷனல் குவாலிட்டி அவார்ட் (2012) பெற்ற முதல் மற்றும் ஒரே ஆயுர்வேத நிறுவனமான அப்போலோ ஆயுர்வேத நிறுவனமான அப்போலோ ஆயுர் வைட் இந்தியாவின் முதல் NABH-அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மருத்துவமனையாகும் (2010). ஆயுர்வேத துணை அறுவை சிகிச்சைக்கான NABH அங்கீகாரத்தையும் இது முதன்முதலில் பெற்றது (2013) மேலும் அதன் நாடு தழுவிய நெட்வொர்க்கில் உள்ள ஐந்து மருத்துவமனைகள் NABH-அங்கீகாரம் பெற்றவை. 2023 ஆம் ஆண்டில், இது இந்தியாவில் முதல் மற்றும் ஒரே QAI-அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம் சார்ந்த மாற்ற பராமரிப்பு மையமாக மாறியது.
இது சமீபத்தில் உலகளவில் முதன்முதலில் முன்னோடியாக உள்ள 'சோதனை செய்யப்பட்ட பாதுகாப்பான' ஆயுர்வேத பாரம்பரிய மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் ஒவ்வொரு பாட்டில்-லேபிளிலும் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மருந்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, அந்த பாட்டிலுக்குப் பொருந்தக்கூடிய சோதனை அறிக்கையைப் பார்க்கலாம்.
அப்போலோ ஆயுர்வைட் இன்று இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த ஆயுர்வேத உடல்நல பராமரிப்பு நிறுவனமாக உள்ளது.

Comments
Post a Comment