அப்போலோ கேன்சர் சென்டரில் நவீன 'கதிரியக்க அறுவைசிகிச்சை' மூலம் பொறியியல் மாணவருக்கு மறுவாழ்வு
அப்போலோ கேன்சர் சென்டரில் நவீன 'கதிரியக்க அறுவைசிகிச்சை' மூலம் பொறியியல் மாணவருக்கு மறுவாழ்வு
10 ஆண்டு கால வலிப்பு நோயிலிருந்து விடுதலை
சென்னை, 15 டிசம்பர் 2025: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த இளம் பொறியியல் மாணவர் ஒருவர், வெளியே சொல்ல முடியாத பாதிப்பின் வேதனையோடு கடந்த 10 ஆண்டுகளாக கடும் போராட்டமான வாழ்க்கையை எதிர்கொண்டு வந்தார். அவருக்கு ஏற்பட்ட வலிப்பு மற்றவர்களைப் போல, கைகால் இழுத்து வரும் சாதாரண வலிப்பாக இருக்கவில்லை. சில நேரங்களில் காரணமே இல்லாமல் அவர் திடீரெனச் சிரிப்பார்; சில சமயங்களில் வெறுமனே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார் அல்லது தன்னிச்சையாகத் தலையை அசைப்பார். இதைப் பார்த்த ஆசிரியர்கள் அவரை தவறாகப் புரிந்து கொண்டனர்; அவரது நண்பர்களோ இதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், இந்தத் தொந்தரவுகள் அடிக்கடி வருவதையும், அவரது இயல்பு வாழ்க்கையை பாதிப்பதையும் கண்ட குடும்பத்தினரின் கவலையோ அதிகரித்துக்கொண்டே வந்தது.
23 வயதிற்குள், பல்வேறு வலிப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொண்ட போதிலும், வலிப்புத்தாக்கம் அவரது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அது எப்போது வரும் என்று கணிக்க முடியாததாகவும், எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாததாகவும் இருந்தது.
அப்போலோ கேன்சர் சென்டரில், அவருக்கு செய்யப்பட்ட நவீன ‘நியூரோ இமேஜிங்’ பரிசோதனையில் இதற்கான அடிப்படை காரணம் கண்டறியப்பட்டது. மூளையின் மிக ஆழமான பகுதியான ஹைபோதலாமஸில், 'ஹைபோதலாமிக் ஹமார்டோமா' (hypothalamic hamartoma) எனப்படும் அரிய வகை கட்டி மறைந்திருந்தது. இது மூளையின் மூன்றாவது உள்ளறை (வென்ட்ரிக்கிள்) வரை பரவியிருந்தது. இந்தக் கட்டி அமைந்திருந்த இடம்தான் சிகிச்சைக்குப் பெரும் சவாலாக இருந்தது. நினைவாற்றல், பார்வை மற்றும் ஹார்மோன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் மிக முக்கியமான நரம்பு மண்டலப் பாதைகளுக்கு நடுவே அக்கட்டி அமைந்திருந்ததால், அதனை அகற்ற பாரம்பரிய முறைப்படி அறுவை சிகிச்சை செய்தால், மூளையின் முக்கியச் செயல்பாடுகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து இருந்தது.
சென்னை அப்போலோ கேன்சர் சென்டரில் (ACC), பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று கூடி, இதற்கான அனைத்துச் சிகிச்சை முறைகளையும் (திறந்தநிலை அறுவை சிகிச்சை, எண்டோஸ்கோபி, லேசர் சிகிச்சை) ஆராய்ந்தது. இறுதியில், மூளையின் ஆழத்தில் இருக்கும் இதுபோன்ற கட்டிகளுக்கு ‘கதிரியக்க அறுவைசிகிச்சை’ (Radiosurgery) என்பதே இந்த இளம் நோயாளிக்கு சிறந்த முறை என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். கத்தியின்றி, ரத்தமின்றி செய்யப்படும் இந்தச் சிகிச்சையில் மண்டை ஓட்டைத் திறக்க வேண்டிய அவசியமில்லை; நினைவாற்றல் பாதைகளைச் சேதப்படுத்தும் அபாயமும் இதில் இல்லை. திறந்தநிலை அறுவை சிகிச்சை மற்றும் எண்டோஸ்கோபி முறைகளைப் போலல்லாமல், கதிரியக்க அறுவைசிகிச்சை சுற்றியுள்ள நல்ல திசுக்களைப் பாதிக்காமல், அந்தக் கட்டியை மட்டும் மிகத் துல்லியமாக நீக்குகிறது. மற்ற அறுவைசிகிச்சைகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவதும், நீண்டகால ஓய்வும் தேவைப்படும். ஆனால், இந்த நவீன கதிரியக்க அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் பெரும்பாலும் ஒரே நாளில் வீடு திரும்பிவிடலாம்.
இந்த மாணவரின் பாதிப்பு மற்றும் கட்டியின் சிக்கலான அமைப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் 'சைபர்நைப்' (CyberKnife®️) எனப்படும் அதிநவீன ரோபோட்டிக் கதிரியக்கச் சிகிச்சையை மேற்கொள்வது என தீர்மானித்தனர்.
இதன் மூலம் மிகத் துல்லியமாக, மூளையின் மற்ற பகுதிகள் பாதிக்கப்படாமல் அந்தக் கட்டிக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுவாக, கதிரியக்க அறுவைசிகிச்சைக்குப் பிறகு வலிப்புத்தாக்கம் ஏற்படுவது குறைவதற்கு சில மாதங்கள் ஆகும். ஆனால், இந்த இளைஞரின் விஷயத்தில் நடந்தது சிறப்பு மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்திய ஒரு மருத்துவ அதிசயம் என்றே சொல்லலாம். சிகிச்சை முடிந்த நான்கே வாரங்களில் அவருக்கு வலிப்புத்தாக்க நிகழ்வு முற்றிலும் முற்றிலும் நின்றுவிட்டது. இனிவரும் காலங்களில் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு விடும்.
சிகிச்சைக்குப் பின் அவருக்குப் பார்வை குறைபாடு, ஞாபக மறதி அல்லது ஹார்மோன் கோளாறு என எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. அதற்கு பின் செய்யப்பட்ட பின்தொடர் பரிசோதனைகள் நிலையாக அவர் குணமடைந்து வருவதை உறுதி செய்தன; மூளையின் ஆழமான பகுதியில் அமைந்திருந்த கட்டிகளுக்கு கதிரியக்க அறுவைசிகிச்சை பாதுகாப்பானது மற்றும் துல்லியமானது என்பதை இது வலுவாக உறுதி செய்திருக்கிறது.
இது குறித்து அப்போலோ கேன்சர் சென்டரின் கதிரியக்க அறுவைசிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் சங்கர் வங்கிபுரம் கூறியதாவது "ஹைபோதலாமிக் ஹமார்டோமா (hypothalamic hamartoma) கட்டிகள், மூளையின் நினைவாற்றல், நடத்தை மற்றும் பார்வை நரம்புகள் சந்திக்கும் மையத்தில் அமைந்திருப்பதால், சிகிச்சையளிப்பதற்கு மிகவும் சவாலானவை. 'சைபர்நைஃப்' சிகிச்சையானது, திறந்தநிலை அறுவைசிகிச்சையில் ஏற்படும் ஆபத்துகள் ஏதுமின்றி, ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் செயல்படுகிறது. மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய்களுக்கும் கதிரியக்க அறுவைசிகிச்சை ஒரு சிறந்த தீர்வு என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. குறிப்பாகப் பேச்சு, இயக்கம் மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் மிக முக்கியமான பகுதிகளில் வலிப்புத்தாக்கம் முதலில் தொடங்கும்போது, திறந்தநிலை அறுவைசிகிச்சை செய்வது ஆபத்தானது. அதுபோன்ற நேரங்களில், நோயாளியின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்காமல் வலிப்பைக் கட்டுப்படுத்த கதிரியக்க அறுவைசிகிச்சை உதவுகிறது. இந்த இளைஞர் அடைந்துள்ள விரைவான மற்றும் முழுமையான குணம், இத்தொழில்நுட்பத்தின் சிறப்பான செயல்திறனுக்கு ஒரு நேர்த்தியான சான்றாக திகழ்கிறது."
10 ஆண்டுகளாக வலிப்பு நோயால் தடைபட்டுப் போன தனது பொறியியல் பட்டப்படிப்பை, அந்த மாணவர் இப்போது முழு நம்பிக்கையுடன் மீண்டும் தொடரவுள்ளார்.
கதிரியக்க அறுவை சிகிச்சைத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், குணப்படுத்தவே முடியாது என்று கருதப்பட்ட பல தீவிரமான நோய்களுக்கு, பாதுகாப்பான மற்றும் நிரந்தரத் தீர்வளிக்கிறது என்பதை இந்த வெற்றிகர சிகிச்சை நிகழ்வு உறுதி செய்துள்ளது.
#புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது.
இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம்.
ஊடக விசாரணைகளுக்கு அல்லது மேலதிக தகவல்களுக்கு ‘தொடர்புகொள்க: எம்எஸ்எல்
Comments
Post a Comment