2027 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்றும், அதே நேரத்தில் பணவீக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் ஆக்சிஸ் வங்கியின் பொருளாதார கண்ணோட்டம் தெரிவிப்பு!
2027 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என்றும், அதே நேரத்தில் பணவீக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் ஆக்சிஸ் வங்கியின் பொருளாதார கண்ணோட்டம் தெரிவிப்பு! சென்னை 16 டிசபர் 2025: கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள், குறைந்த கடன் செலவுகள், விரைவான மூலதன உருவாக்கம் மற்றும் கொள்கை தளர்வுகளிலிருந்து சுழற்சி முறையில் ஏற்பட்ட ஊக்கம் ஆகியவற்றால், 2027 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி போக்குக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்று, ஆக்சிஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் மற்றும் ஆக்சிஸ் கேபிட்டலின் குளோபல் ரிசர்ச் தலைவர் நீலகாந்த் மிஸ்ரா, வங்கியின் அவுட்லுக் 2026 அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநிலை காரணமாக பணவீக்க அழுத்தங்கள் இல்லாமல் பொருளாதாரம் போக்குக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும் என்று மிஸ்ரா மற்றும் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி குழு கூறியுள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தில், ஆக்சிஸ் வங்கி, வழக்கமான வளர்ச்சி விகிதத்தை விடவும், சந்தை வல்லுநர்க...