பார்சிலோனா ஐ உற்பத்தி இடமாகக் கொண்ட லென்ஸ்கார்ட் நிறுவனம் மெல்லெர் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மேலும் லபுபு தயாரிப்பாளர் பாப்மார்ட் நிறுவனத்துடன் புதிய படைப்பாற்றல் கூட்டான்மை மூலம் பிரீமியம் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துகிறது; குளோபல் ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸ் ஐ வலுப்படுத்துகிறது
பார்சிலோனா ஐ உற்பத்தி இடமாகக் கொண்ட லென்ஸ்கார்ட் நிறுவனம் மெல்லெர் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மேலும் லபுபு தயாரிப்பாளர் பாப்மார்ட் நிறுவனத்துடன் புதிய படைப்பாற்றல் கூட்டான்மை மூலம் பிரீமியம் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துகிறது; குளோபல் ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸ் ஐ வலுப்படுத்துகிறது
சென்னை, நவம்பர் 18, 2025: லென்ஸ்கார்ட் நிறுவனம் இந்தியாவில் மெல்லெர் பிராண்டின் அறிமுகத்தை இன்று அறிவித்தது மேலும், ஒரு நவீன ஹவுஸ் ஆஃப் ஐவேர் பிராண்ட்ஸ் ஐ கட்டியெழுப்பும் தனது முனைப்பை வலுப்படுத்துகின்ற மற்றும் நவீன கண்ணாடி வடிவமைப்புக்கான ஒரு மையமாக லென்ஸ்கார்ட் நிறுவனத்தை நிலை நிறுத்துகின்ற வகையில் உலகளாவிய பாப்-கலாச்சார பிராண்டான பாப்மார்ட் நிறுவனத்துடன் ஒரு புதிய படைப்புத்திறன் மிக்க கண் கண்ணாடிகளுக்கான கூட்டாண்மை பற்றியும் அறிவித்துள்ளது.
இந்த பாப்மார்ட் x லென்ஸ்கார்ட் கண்ணாடி தொகுப்பு, சிங்கப்பூரில் லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் இணையதளத்திலும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட லென்ஸ்கார்ட் கடைகளிலும் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது. வெளிப்படுத்துகின்ற வகையில், வேடிக்கையான மற்றும் கலாச்சார பின்னணி கொண்ட பேஷன் உபகரணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு, இந்த தொகுப்பு சேகரிக்கத்தக்க, கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
ஹாரி பாட்டர், ஹலோ கிட்டி, போகிமான், டிராகன் பால் Z, சூப்பர்மேன் மற்றும் பேட்மேன் உள்ளிட்ட லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் விரிவடைந்து வரும் கலாச்சார ஒத்துழைப்புகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கூட்டாண்மை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்புகள், ரசிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் துணை கலாச்சாரங்களுடன் ஆழமாக இணைக்கும் வடிவமைப்பு சார்ந்த கதைசொல்லல் மூலம் லென்ஸ்கார்ட் அதன் கண் கண்ணாடிகளின் ஈர்ப்பை விரிவுபடுத்த உதவுகின்றன.
பார்சிலோனாவில் நிறுவப்பட்ட மெல்லெர் பிராண்ட், ஐரோப்பாவின் மிகவும் செல்வாக்கு மிக்க D2C இளைஞர் கண்ணாடி பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இது அதன் துணிச்சலான வடிவங்கள், தெரு-கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட வண்ணத் திட்டங்கள் மற்றும் வெளிப்படுத்துகின்ற, ஃபேஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அழகியல் ஆகியவற்றால் வேறுபடுகிறது. 700,000 க்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் வலுவான ஈர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட மெல்லர், ஒரு துடிப்பான உலகளாவிய சமூகத்தையும் மற்றும் தனித்துவமான, வடிவமைப்பு-சார்ந்த கண்ணாடிகளை நாடுகின்ற இளம் நுகர்வோருடன் ஒரு ஆழமான தொடர்பையும் கட்டமைத்துள்ளது.
இந்தியாவில், மெல்லெர், லென்ஸ்கார்ட் இன் சில்லறை விற்பனை நெட்வொர்க் முழுவதிலும் மற்றும் லென்ஸ்கார்ட் செயலி மற்றும் வலைத்தளம் வழியாக ஆன்லைனிலும் இப்போது கிடைக்கும். உயர் ஃபேஷன் ஈடுபாடு கொண்ட பிணைப்புப் பகுதிகளுடன் பொருந்த, GeoIQ நுண்ணறிவைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட ~500 தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் இந்த பிராண்ட் முதலில் அறிமுகப்படுத்தப்படும்.
மெல்லர், ஜான் ஜேகப்ஸ், ஓன்டேஸ் போன்ற பிராண்டுகள் மற்றும் பாப்மார்ட், டிராகன் பால் Z, ஹாரி பாட்டர் போன்ற படைப்பு கூட்டாண்மைகள் மூலம், லென்ஸ்கார்ட், புதிய தலைமுறை வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மையமாகக் கொண்டு, ஒரு சிந்தனை மிக்க பிரீமியம் தயாரிப்புகளின் தொகுப்பை படிப்படியாக உருவாக்கி வருகிறது. வலுவான தளங்கள் பிராண்டுகளின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை இந்த கண் கண்ணாடித் தொழில்துறை காண்பித்துள்ளது. மேலும் லென்ஸ்கார்ட் வெளிப்படுத்துகின்ற, வடிவமைப்பு சார்ந்த பிராண்டுகளின் அடுத்த அலையை செயல்படுத்துவதில் தனது பங்கை ஆற்ற நம்புகிறது. தனித்தன்மை, பிரீமியம் தரம் மற்றும் ஸ்டைலை நாடுகின்ற உலகளாவிய வாடிக்கையாளர்களின் ஒரு பரந்த அளவிலான குழுவின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு லென்ஸ்கார்ட். நிறுவனத்திற்கு உதவுகின்ற வகையில், ஒவ்வொரு பிராண்டும் ஒரு தனித்த வடிவமைப்பு தத்துவத்தையும் மற்றும் நுகர்வோர் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, லென்ஸ் தொழில்நுட்பப் பகுதியில், உலகளாவிய கண்டுபிடிப்பு நிறுவனங்களான டோக்காய் மற்றும் ரோடன்ஸ்டாக் ஆகியவையும் லென்ஸ்கார்ட் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளன.
லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பியூஷ் பன்சால் அவர்கள் கூறுகையில், "நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் எங்கள் வாடிக்கையாளர்களே உந்துசக்தியாக இருக்கிறார்கள். அவர்கள் உலகளாவிய வடிவமைப்பு, தனித்துவம் மற்றும் நம்பகமான தரம் கொண்ட பிராண்டுகளைத் தேடுகிறார்கள். மெல்லெர் பிராண்டின் துணிச்சலான அழகியல் மற்றும் வலுவான சமூகம் ஆகியவை எங்கள் 'ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸ்'க்கு ஒரு அற்புதமான கூடுதல் அம்சமாக இதை அமைக்கின்றன. மேலும், பாப்மார்ட் போன்ற படைப்புத்திறன் மிக்க கூட்டாண்மைகள் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வழிகளில், குதூகலம், கற்பனை மற்றும் சேகரிக்கும் தன்மை ஆகியவை கொண்ட தருணங்களை கண் கண்ணாடிகளில் கொண்டு வர நாங்கள் நம்புகிறோம்."என்று கூறினார்.
லென்ஸ்கார்ட்டின் நிறுவனர் மேலும் கூறுகையில் "ஜான் ஜேக்கப்ஸ், ஓன்டேஸ் மற்றும் இப்போது மெல்லெர் போன்ற பிராண்டுகளை ஒன்றிணைப்பதன் மூலமும், பாப் மார்ட் போன்ற கூட்டு முயற்சிகளின் மூலமும், வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளையும் சிறந்த அனுபவங்களையும் வழங்குவதே எங்கள் நோக்கமாகும். அதிக மக்களை அடைவதற்கும் அவற்றின் முழு திறனையும் வெளிக்கொண்டு வருவதற்கும் அடுத்த தலைமுறை கண் கண்ணாடி பிராண்டுகளுக்கான தளத்தையும் திறன்களையும் வழங்குகின்ற ஒரு செயல்படுத்துபவராக எங்களை நாங்கள் பார்க்கிறோம்."என்றார்.
லென்ஸ்கார்ட் இன் விநியோக விரிவாக்கம், முழு அடுக்கு விநியோக சங்கிலி, வடிவமைப்பு மண்டலம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் ஆகியவற்றின் மூலம் வலுவூட்டப்பட்ட கூட்டாண்மை பிராண்டுகள், புதிய பார்வையாளர்களை சென்றடையவும், சந்தைகள் முழுவதிலும் அர்த்தமுள்ள வகையில் பெருமளவில் வளரவும் முடியும்.
கண் கண்ணாடித் துறை ஒரு உலகளாவிய அளவில் வளர்ச்சியடைந்து வரும் இந்தக் கட்டத்தில், இந்த வகையை வடிவமைப்பதில் பல-பிராண்டு தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன் ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸ் தொலைநோக்குப் பார்வையுடன், லென்ஸ்கார்ட், வெளிப்படுத்துகின்ற, வடிவமைப்பு சார்ந்த கண்ணாடி பிராண்டுகள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புகளின் அடுத்த அலையை உலகளவில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments
Post a Comment