அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது
அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது
துல்லியமான ஆயுர்வேத சிகிச்சைகளை முன்னேற்றுவதில் ஒரு புதிய மைல்கல்
சிக்கலான தொற்றாத நோய்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான துல்லியமான ஆயுர்வேத அடிப்படையிலான உள்நோயாளி மற்றும் வெளிநோயாளி மருத்துவ சேவைகளை வழங்குகின்ற நவீன உபகரணங்களுடன் கூடிய 35 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைத் தொடங்கியது
சென்னை, நவம்பர் 3, 2025: அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள் சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, கிரீம்ஸ் சாலையில் அதன் முதன்மை 35-படுக்கை கொண்ட மருத்துவமனையின் துவக்கத்தை இன்று அறிவித்தது. அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டெர்ப்ரைஸ் லிமிடெட் இன் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி மற்றும் அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜிவ் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் ப்ரதாப் C. ரெட்டி அவர்களால் இந்த வசதி திறந்து வைக்கப்பட்டது.
இந்தத் துவக்கம், சென்னையின் உடல்நலப் பராமரிப்பு சூழலின் ஒரு விரிவாக்கத்தைக் காட்டிலும் பெரியதொரு முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இது, இந்தியாவின் முழுமையான சுகாதார அணுகுமுறையில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது.1983-ல் அப்போலோ உடல்நல சிகிச்சை வழங்கலை மறுவரையறை செய்த கிரீம்ஸ் சாலையில் இருந்து, நவீன மருத்துவத்துடன் இணக்கமாக செயல்படும் ஒரு கூடுதல் அறிவியலாக ஆயுர்வேதத்தை வலுப்படுத்துவதன் மூலம், இப்போது அப்போலோ ஆயுர்வைட் அந்த மரபை மேலும் நீட்டிக்கிறது.
எலும்பியல், நரம்பியல் மற்றும் நரம்பு சிதைவு கோளாறுகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், பெண்கள் ஆரோக்கியம், குழந்தைகளின் வளர்ச்சிக் கோளாறுகள், முதியோர் பராமரிப்பு, குத-மலக்குடல் நோய்களுக்கான ஆயுர்வேத பாரா-சர்ஜிக்கல் சிகிச்சைகள், நாள்பட்ட காயங்கள், விளையாட்டு மருத்துவம், தோல் நோயியல் மருத்துவம் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட ஒரு பரந்த தொகுப்பின் சிறப்புப் பிரிவுகளில் ஆதார அடிப்படையிலான ஆயுர்வேத சிகிச்சையை வழங்குவதற்காக இந்தப் புதிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் ப்ரதாப் C. ரெட்டி அவர்கள் கூறுகையில்,"இந்தியாவின் மனிதகுலத்திற்கு அளித்த மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று ஆயுர்வேதம். அப்போலோ வில், துல்லியம், ஆதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு ஆகியவற்றுடன் சிகிச்சை செய்யப்படும் போது, ஆயுர்வேதம் நோய்களின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலமும், நல்வாழ்வை மேம்படுத்துவதன் மூலமும் நவீன மருத்துவத்தை நிறைவு செய்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் மூலம், இரு துறைகளின் சிறந்த அம்சங்களையும் ஒன்றிணைக்கும் முழுமையான, நோயாளி-மைய்யப்படுத்தப்பட்ட உடல்நலப் பராமரிப்பில் இந்தியாவின் தலைமைப் பங்கை நாங்கள் வலுப்படுத்துகிறோம். மீட்பு, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உயர்தர, ஆராய்ச்சி-வழிகாட்டிய ஆயுர்வேத சிகிச்சைக்கு இந்தப் புதிய மையம் ஒரு வழிகாட்டியாக செயல்படும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்."என்று கூறினார்.
அப்போலோ அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டெர்ப்ரைஸ் லிமிடெட் இன் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் அப்போலோ ஆயுர்வைட் இன் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி அவர்கள் கூறுகையில், "அப்போலோ வில், உடல்நலப் பராமரிப்பு முழுமையானதாக இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நோயாளியின் தேவைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்பியுள்ளோம். அப்போலோ ஆயுர்வைட்
மூலம், மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்பட்ட, ஆதார-அடிப்படையிலான ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் இணைக்கின்றோம். இது குணமடைதலை மேம்படுத்துகிறது, மன-உடல் சமநிலையை மீட்டெடுக்கிறது, மற்றும் வாழ்நாள் முழுவதுமான நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. அனைத்து நான்கு தென்னிந்திய மாநிலங்கள், புது தில்லி, அல்மோரா ஆகிய பகுதிகளில் ஒரு வலுவான இருப்பைக் கொண்டுள்ள அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் , மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் விரைவில் தொடங்கவிருக்கும் கிளைகளுடன், துல்லியமான ஆயுர்வேதம் மற்றும் முழுமையான குணப்படுத்துதலுக்கான இந்தியாவின் மிக முன்னணி வலையமைப்பைத் தொடர்ந்து அமைத்து வருகின்றன."என்றார்.
அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜீவ் வாசுதேவன் கூறும்பொழுது, “சென்னையில் எங்கள் முதன்மை மருத்துவமனை தொடங்கப்பட்டது எங்கள் இரண்டு தசாப்த கால பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. இந்தியாவின் சுகாதார சிறப்பின் மையமான கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மையம், ஆயுர்வேதத்தின் துல்லியத்தையும் அப்போலோ வின் மருத்துவ அமைப்புகளின் அறிவியல் துல்லியத்தையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது. மூல காரண நோயறிதல் மற்றும் சிக்கலான தொற்றாத நோய்களுக்கான சிகிச்சை, நோய்க்குப் பிந்தைய தீவிர மறுசீரமைப்பு மற்றும் முழு நபர் ஆரோக்கியம் ஆகியவற்றின் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்க நாங்கள் உறுதிப்பாட்டுடன் உள்ளோம். முழுமையான குணமாகுதலை நாடும் ஒவ்வொரு நபருக்கும் உயர்தர, பாதுகாப்பான மற்றும் விளைவு சார்ந்த ஆயுர்வேத பராமரிப்பை அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்.” என்றார்.
பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அப்போலோ வின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்த மருத்துவமனை பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகள், மருத்துவ உணவுகள் மற்றும் OTC சூத்திரங்கள் உள்ளிட்ட 'சோதிக்கப்பட்ட பாதுகாப்பான' ஆயுர்வைட் தயாரிப்புகளின் வரம்பையும் வழங்கும். ஒவ்வொரு தயாரிப்பும்
கடுமையான தர சோதனைக்கு உட்படுகிறது, மேலும் லேபிளில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு அறிக்கைகளை நிகழ்நேரத்தில் சரிபார்க்கலாம். பெண்களின் ஆரோக்கியம், குழந்தை நல்வாழ்வு, முதியோர் பராமரிப்பு, வலி மேலாண்மை, தூக்கம், மன அழுத்தம் மற்றும் தோல் ஆரோக்கியம் போன்ற பல்வேறு தேவைகளை இந்த வரம்பு பூர்த்தி செய்கிறது.
அப்போலோ ஆயுர்வைட் பற்றி
அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் (www.ayurvaid.com ) என்பது இந்தியாவின் முன்னணி நெறிமுறைகள் சார்ந்த, துல்லியமான ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் நாள்பட்ட நோய் மீட்சி/மேலாண்மை மற்றும் நிலையான நல்வாழ்வுக்கான ஒருங்கிணைந்த பராமரிப்பு மையங்களின் முன்னணி சங்கிலியாகும். 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, அப்போலோ ஆயுர்வைட் பெங்களூரு, சென்னை, புது தில்லி, கொச்சி, அல்மோரா மற்றும் ஹைதராபாத் முழுவதும் பரவியுள்ள ஆயுர்வேத மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுடன் ஆயுர்வேதத்தை ஒரு முக்கிய மருத்துவ முறையாக மாற்றுவதற்கு உறுதிபூண்டுள்ளது, விரைவில் மும்பை மற்றும் பிற முக்கிய இந்திய நகரங்களுக்கும் விரிவடைகிறது.
2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மற்றும் 2022 முதல் அப்போலோ குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அப்போலோ ஆயுர்வைட் நிறுவனம், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ அறிவியலை மருத்துவ துல்லியத்துடன் இணைக்கும் ஒரு தனித்துவமான பராமரிப்பு மாதிரியை உருவாக்குகின்ற ஆயுர்வேத தலைமையிலான ஒருங்கிணைந்த சிகிச்சையை முறைப்படுத்துவதில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. மருத்துவமனைகளின் இந்த சங்கிலி, துணையூக்கி சிகிச்சை, நோய்த்தடுப்பு சிகிச்சை, மறுசீரமைப்பு மற்றும் முதன்மை தலையீடு ஆகியவற்றில் ஒரு கவனத்துடன், நரம்பியல், புற்றுநோயியல், சிறுநீரகவியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் முழுவதிலும் தடையற்ற, ஒருங்கிணைந்த சிகிச்சையின் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மாதிரியை நிரூபித்துள்ளது. அப்போலோ ஆயுர்வைட் இன் தனித்துவமான 'முழு
நபர் பராமரிப்பு' அணுகுமுறை, அறிகுறி மட்டத்தில் மட்டுமல்லாமல், மூல காரண மட்டத்திலும் பல்வேறு நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கு முழு நபரையும் கருத்தில் கொள்கிறது மற்றும் தடுப்பு மற்றும் சிகிச்சையிலிருந்து மறுவாழ்வு, உயிர்வாழ்வு மற்றும் நல்வாழ்வு வரை முழு வாழ்க்கைச் சுழற்சி முழுவதிலும் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
மதிப்புமிக்க QCI DL ஷா நேஷனல் குவாலிட்டி அவார்ட் (2012) பெற்ற முதல் மற்றும் ஒரே ஆயுர்வேத நிறுவனமான அப்போலோ ஆயுர்வேத நிறுவனமான அப்போலோ ஆயுர் வைட் இந்தியாவின் முதல் NABH-அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மருத்துவமனையாகும் (2010). ஆயுர்வேத துணை அறுவை சிகிச்சைக்கான NABH அங்கீகாரத்தையும் இது முதன்முதலில் பெற்றது (2013) மேலும் அதன் நாடு தழுவிய நெட்வொர்க்கில் உள்ள ஐந்து மருத்துவமனைகள் NABH-அங்கீகாரம் பெற்றவை. 2023 ஆம் ஆண்டில், இது இந்தியாவில் முதல் மற்றும் ஒரே QAI-அங்கீகாரம் பெற்ற ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம் சார்ந்த மாற்ற பராமரிப்பு மையமாக மாறியது.
அப்போலோ ஆயுர்வைட் இன்று இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஒருங்கிணைந்த ஆயுர்வேத உடல்நல பராமரிப்பு நிறுவனமாக உள்ளது.
மேலும் ஊடக கேள்விகளுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:

Comments
Post a Comment