ஆர்த்தி ஸ்கேன்ஸ் உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் கண்டறியும் இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் லாஞ்சிவிட்டி ஆய்வகமான 'வைட்டல் இன்சைட்ஸ்'ஸை தொடங்கியுள்ளது!

ஆர்த்தி ஸ்கேன்ஸ் உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் கண்டறியும் இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் லாஞ்சிவிட்டி ஆய்வகமான 'வைட்டல் இன்சைட்ஸ்'ஸை தொடங்கியுள்ளது!


சென்னை, அக்டோபர் 28, 2025: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் சேவை (Integrated Diagnostics Provider) நிறுவனமான ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் [Aarthi Scans and Labs], நமது உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் [performance &wellness vertical, Vital Insights] கண்டறியும் பரிசோதனை மையத்தை சென்னை அண்ணா நகரில் தொடங்கியுள்ளது. இந்த புதிய பரிசோதனை மையத்தை, உடல்நலத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பிரிவில் புகழ்பெற்ற நிபுணர் திரு. ஏ.டி. இராஜாமணி (A.T. Rajamani, Strength and Conditioning Coach) அவர்களால் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஆர்த்தி ஸ்கேன்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. வி. கோவிந்தராஜன் (V Govindarajan, Founder and CEO, Aarthi Scans) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மையம், தனிநபர்கள் மேற்கொண்டு வரும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளைத் தாண்டி, அவர்களின் உடலமைப்பு (Structural), உடலில் உள்ள இரசாயனங்கள் (Chemical), மற்றும் உடல் செயல்பட்டு வரும் முறை (Functional) ஆகியவற்றின் மூலம் மூன்று முக்கியமான பரிமாணங்களில் தங்கள் உடலைப் புரிந்து கொள்ள உதவுகிறது. டெக்ஸா ஸ்கேன்கள் (DEXA scans), வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்தம் தொடர்பான அளவீடுகளுக்கான பரிசோதனை (metabolic & blood profiling), உடல் வலிமை மற்றும் உடலின் சமநிலை குறித்த மதிப்பீடுகள் (strength & balance assessments), உடல் முழுவதற்குமான எம்.ஆர்.ஐ. இமேஜிங் (CT & MRI imaging) போன்ற மிகவும் மேம்பட்ட நோயறியும் சோதனைகள் மூலம், ஒருவரின் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்றும் உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப எப்படி தன்னை தகவமைத்து கொள்கிறது என்பது பற்றியும் முழுமையான கண்ணோட்டம் உள்ளிட்டவைகளை ஒரே தளத்தில் எளிதில் மேற்கொள்ளும் வகையில் இந்த ஆய்வகம் வழங்குகிறது.

வைட்டல் இன்சைட்ஸில், நம்முடைய உடல்நிலை குறித்த முக்கிய தகவல்களை கண்டறியும் மதிப்பீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற வகையில், தனிப்பயனாக்கப்பட்ட திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, உடல்நலத்தை மேம்படுத்த உணவுடன் கூடுதலாக எடுத்து கொள்பவை மற்றும் வாழ்க்கை முறை பரிந்துரைகள் (exercise, nutrition, supplementation, lifestyle recommendations) உள்ளிட்டவை அடங்கும். இதன் மூலம் தனிநபர்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்களது ஆரோக்கியத்தை பற்றி புரிந்து கொண்டு, பொறுப்புடன் செயல்படுவதனால் தங்களுடைய உடல் செயல்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும்.


உடல்நலத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பிரிவில் புகழ்பெற்ற நிபுணர் திரு. ஏ.டி. இராஜாமணி (A.T. Rajamani, Strength and Conditioning Coach) கூறுகையில், "நம்முடைய உடலின் உண்மையான செயல்திறன் என்பது உடலை வருத்தி செயல்படுவதில் இல்லை, அது உங்கள் உடலை மிகச்சரியாக புரிந்துகொள்வதிலிருந்தே உண்மையான செயல்திறன் வெளிப்படும்.. உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதற்கு எங்கு ஆதரவு தேவை என்பதைத் தெளிவாகக் காண வைட்டல் இன்சைட்ஸ் மக்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு தடகள வீரராகவோ, ஒரு தொழில்முறையாளராகவோ, அல்லது ஆரோக்கியமாக இருந்தால் போதுமென விரும்புபவராகவோ இருந்தாலும், இந்த நுண்ணறிவு மதிப்பீடுகள் உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை அளிக்கவும், உடல் செயல்திறனை மீட்டெடுக்கவும், நீண்ட காலத்திற்கு உங்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவும் உதவும்" என்று தெரிவித்தார்.

ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கதிரியக்க நிபுணர் திரு. அருண்குமார் கோவிந்தராஜன் (Arunkumar Govindarajan, Executive Director and Radiologist) பேசுகையில், "25 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆர்த்தி ஸ்கேன்ஸை (Aarthi Scans) தொடங்கியபோது, மிக அத்தியாவசியமான நோயறியும் பரிசோதனைகளை (essential diagnostics) அனைவருக்கும் மலிவான கட்டணத்தில் எளிதில் கிடைக்கச் செய்வதே எனது இலக்காக இருந்தது. ஒரு நோயைக் கண்டறிய நாம் செய்யும் செலவு ஒருபோதும் சிகிச்சைக்குத் தடையாக இருக்கக்கூடாது என்று நான் உறுதியாக நம்பினேன். இன்று, வைட்டல் இன்சைட்ஸ் (Vital Insights) மூலம், நாங்கள் அந்த இலக்கிலிருந்து ஒரு அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறோம். அதாவது, நோய்களைத் துல்லியமாக கண்டறிவதன் மூலம் மனித ஆற்றலை, ஆரோக்கியத்தை (human potential) நீடிக்க செய்யும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம். DEXA, VO2 Max பரிசோதனை, உடல்நலம், நோய்கள், உடல் இயக்க செயல்பாடுகள் குறித்த விவரங்களை அளிக்கும் விரிவான இரத்த உயிரிக்குறிகாட்டிகள் (comprehensive blood biomarkers), உடல் வலிமை மற்றும் சமநிலை பரிசோதனைகள் (strength and balance testing) மற்றும் முழு உடல் MRI இமேஜிங் போன்ற மேம்பட்ட கருவிகளை ஒருங்கிணைக்கிறோம். இதன் மூலம், உலகெங்கிலும் கிடைக்கக்கூடிய மிக விரிவான உடல் செயல்திறன் (performance) மற்றும் நீண்ட ஆயுளுக்கான (longevity) மதிப்பீடாக இருக்கும். இது துல்லியத்தை மையமாகக் கொண்ட ஆரோக்கியத்தைப் பற்றியது. மக்கள் அதிக காலம் வாழ்வது மட்டுமல்லாமல், வலுவாக வாழவும், அவர்களின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவும் உதவுவதே இதன் நோக்கமாகும்." என்றார்.


அண்ணாநகரில் இந்த கிளை தொடங்கப்படுவதன் மூலம், தரவு சார்ந்த ஆரோக்கியம் (data-driven wellness) மற்றும் (preventive healthcare) தடுப்பு மருத்துவம் ஆகிவற்றை இன்னும் அதிகமான மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்யும் பணியை வைட்டல் இன்சைட்ஸ் வலுப்படுத்தும். மேலும் மக்கள் தங்களுடைய உடல்நலம் குறித்த தெளிவு, கட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துகிறது.


ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் பற்றி

திரு. வி. கோவிந்தராஜன் அவர்களால் 1988-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் சேவைகளை வழங்கும் நிறுவனமாக முன்னணியில் இருந்து வருகிறது. 70-க்கும் மேற்பட்ட MRI ஸ்கேனர்கள், 71 CT ஸ்கேனர்கள் மற்றும் 20 பரிசோதனை ஆய்வகங்களுடன், சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் தினமும் 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்களுக்கு ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் தனது சேவைகளை வழங்கி வருகிறது. எல்லோருக்கும் ஏற்ற வகையிலான மலிவான கட்டணம், உயர் தரத்திலான இமேஜிங் மற்றும் நேர்மைக்குப் புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்கேன்ஸ், ’செலவு ஒருபோதும் உடல்நலன் மீதான அக்கறைக்கு விலையாக இருக்காது’ [where cost never comes at the cost of care] என்ற புதிய சுகாதார மாதிரியை முன்னோடியாகக் கொண்டு செயல்படுகிறது.




Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது