ஃபார்ச்சூன் சன்ஃப்ளவர் ஆயில், நுகர்வோர் ஆரோக்கியத்தை மேம்படுத்த '17% குறைந்த எண்ணெய் உறிஞ்சுதல்' என்ற புதிய முன்மொழிவை அறிமுகப்படுத்துகிறது
ஃபார்ச்சூன் சன்ஃப்ளவர் ஆயில், நுகர்வோர் ஆரோக்கியத்தை மேம்படுத்த '17% குறைந்த எண்ணெய் உறிஞ்சுதல்' என்ற புதிய முன்மொழிவை அறிமுகப்படுத்துகிறது
~இந்த TVC பிரச்சாரத்தின் புதுமையான விளம்பரம், முன்னுரிமை சந்தைகள் முழுவதிலும் உள்ள டிஜிட்டல் தளங்கள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தொகுப்புகளுக்கு நீட்டிக்கப்படுகிறது ~
தமிழ் TVC - https://youtu.be/QWBpsQ9sf2E
சென்னை செப்டம்பர் 2025: அக்ரி பிசினஸ் லிமிடெட் (முன்னர் அதானி வில்மர் லிமிடெட்) நிறுவனத்தின் கீழ் இந்தியாவின் மிகவும் நம்பகமான சமையல் எண்ணெய் பிராண்டுகளில் ஒன்றான ஃபார்ச்சூன் சன்ஃப்ளவர் ஆயில், '17% குறைவான எண்ணெய் உறிஞ்சுதல்' என்ற ஒரு புதிய முன்மொழிவை அறிமுகப்படுத்தியுள்ளது. தயாரிப்பு பேக்கேஜிங்கில் முக்கியமாக இடம்பெற்றுள்ள இந்த புதுமை, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முழுவதும் தொடங்கப்பட்ட புதிய தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய தயாரிப்பு வீடுகளுக்கு கொண்டு வரும் ஆரோக்கியமான சமையல் அனுபவத்தை Ogilvy நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த டிவி விளம்பரங்கள் முக்கியப்படுத்தி காட்டுகின்றன. கொள்முதல் செய்யும் இடத்திலேயே அதன் நன்மைகளுடன் நுகர்வோர் நேரடியாக இணைய முடியும் என்பதை உறுதி செய்கின்ற வகையில் இந்த முன்மொழிவு, அதன் 840g பை மற்றும் 5 லிட்டர் ஜார் பேக்குகளில் காணப்படும்.
இந்த டிவி விளம்பரங்களின் சித்தரிப்பு, உணவு அதிக எண்ணெயை உறிஞ்சுவதால், கைகளில் எண்ணெய் படிந்து அசௌகரியம் ஏற்படுகின்ற உணவருந்தும் சூழ்நிலைகளை சித்தரிக்கிறது. இந்த காட்சி சித்தரிப்பானது, எண்ணெய் உறிஞ்சுதலைக் குறைக்கும் தனது தனித்துவமான திறன் மற்றும் இலகுவான, ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் விதம் ஆகியவற்றை வலியுறுத்துகின்ற ஃபார்ச்சூன் சன்ஃப்ளவர் ஆயிலை ஒரு தீர்வாக அறிமுகப்படுத்துகின்ற ஒரு குரல் பின்னணிக்கு மாறுகிறது. ஈர்க்கக்கூடிய கதைசொல்லல் மற்றும் உள்ளூர் கலாச்சார ஒத்திசைவுடன், இந்த பிராண்ட், சுவையில் சமரசம் செய்யாமல் தினசரி சமையலை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை இந்தத் திரைப்படங்கள் திறம்படக் காட்டுகின்றன.
தென் மாநிலங்களில் இந்த பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான இந்த யோசனையானது, இந்த மாநிலங்கள் இந்த பிராண்டின் முக்கிய வளர்ச்சி சந்தைகள் என்பதை அங்கீகரிப்பதில் இருந்து உருவானது. அதன் ஆழமான சமையல் மரபுகள் மற்றும் ஆரோக்கியமான சமையல் தீர்வுகளுக்கான ஒரு அதிகரித்து வரும் விருப்பத்துடன், ஃபார்ச்சூன் சன்ஃப்ளவர் ஆயில் இன் ஊடுருவலை வலுப்படுத்துவதற்கும் மற்றும் நுகர்வோருடன் நெருக்கமான தொடர்புகளை உருவாக்குவதற்கும் மாநிலங்கள் ஒரு வலுவான வாய்ப்பை அதற்கு வழங்குகின்றன.
இந்த தொடக்க நிகழ்வைப் பற்றி பேசுகையில் AWL அக்ரி பிசினஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இணைத் தலைவர் திரு. முகேஷ் மிஸ்ரா கூறுகையில், "ஃபார்ச்சூன் இல், தரம், சுவை மற்றும் ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்கும் பொருட்களை வழங்குவதில் நாங்கள் எப்போதும் அர்பணிப்புடன் இருந்து வருகிறோம். எங்கள் புதிய '17% குறைந்த எண்ணெய் உறிஞ்சுதல்' என்ற முன்மொழிவு மூலம், சுவையுடன் சமரசம் செய்யாமல், இலகுவான மற்றும் ஆரோக்கியமான சமையலுக்கான நுகர்வோரின் ஒரு முக்கிய தேவையை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். எங்கள் சமீபத்திய TVC மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் பிரச்சாரம் மூலம், செழுமையான உணவு மரபுகள் மற்றும் சுகாதார உணர்வு ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்து செல்கின்ற தெற்கு சந்தைகளில் வலுவான ஒத்ததிர்வை உருவாக்கி, வாடிக்கையாளர்களுடன் இணைவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்று கூறினார்.
வலுவான தெரிவுநிலை மற்றும் நுகர்வோர் ஈடுபாட்டை உருவாக்குகின்ற இந்த பிரச்சாரம், தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் கள செயல்பாடுகள் முழுவதிலும் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய விளம்பரம், சமநிலையான வாழ்க்கை முறைகளை தேடும் ஆரோக்கிய உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு விருப்பமான தேர்வாக ஃபார்ச்சூன் சன்ஃப்ளவர் ஆயில் இன் பங்கை வலுப்படுத்துகிறது. புதுமை, நுகர்வோர் நம்பிக்கை மற்றும் அன்றாட ஆரோக்கியம் ஆகியவற்றை ஒன்றாக இணைப்பதன் மூலம் தரத்தை உயர்த்துகின்ற மற்றும் ஆரோக்கியமான தேர்வுகளை வழிநடத்துகின்ற ஃபார்ச்சூன் '17% குறைவான எண்ணெய் உறிஞ்சுதல்' என்ற அறிமுகத்துடன், மீண்டும் ஒருமுறை சமையல் எண்ணெய் பிரிவில் அதன் தலைமைத்துவத்தை நிரூபிக்கிறது.
Comments
Post a Comment