அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து மைல்கல் சாதனை படைத்திருக்கிறது!

அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து மைல்கல் சாதனை படைத்திருக்கிறது!

 


சென்னை, 15 அக்டோபர் 2025: சென்னை பழைய மகாபலிப்புரம் சாலையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ், ஓ.எம்.ஆர் [Apollo Speciality Hospitals, OMR], 150 நாட்களில் 150-க்கும் மேற்பட்ட ரோபோடிக் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை (டோட்டல் நீ ரிப்ளேஸ்மென்ட் - Robotic Total Knee Replacements (TKR)) வெற்றிகரமாக நிறைவு செய்து, மூட்டு சிகிச்சையில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது. அறுவை சிகிச்சைகளில் துல்லியம் மற்றும் மருத்துவ பயனாளர் [நோயாளி] குணமடைவதில் புதிய தரநிலைகளை நிர்ணயித்து வருவதன் மூலம், தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ரோபோடிக் டி.கே.ஆர் மையங்களில் [Robotic Total Knee Replacements (TKR))] ஒன்றாக அப்போலோ ஓ.எம்.ஆர். முன்னணி வகிக்கிறது. இந்த அறுவை சிகிச்சைகளில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான ஸ்ட்ரைக்கர் [Stryker]-ன் தயாரிப்பான அதி நவீன மேக்கோ ஸ்மார்ட் ரோபோடிக்ஸ் [Mako Smart Robotics] ரோபோடிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் சிக்கலான முழங்கால் பிரச்சனைகள் உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு, இந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பெரும் பலன்களை அளித்து வருகிறது. மேலும், பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை விட குறைந்தளவு ஊடுருவுதலுடனும், பாதுகாப்பான மாற்று வழியாகவும் உள்ளது.



பாரம்பரிய முறையில் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை (டி.கே.ஆர்) என்பது மூட்டு சேதம் அல்லது முற்றிய வாத நோயான ஆர்த்ரிட்டீஸ் [arthritis] உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு முழங்கால் வலியைப் போக்கவும் மூட்டு செயல்பாட்டை மீட்டெடுக்கவும் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவர்கள் அவர்களாகவே முழங்கால் அமைப்பை ஒழுங்குப்படுத்தி, இம்பிளான்ட் எனப்படும் செயற்கை உள்வைப்புகளை வைக்கும் மருத்துவ நடைமுறையாகும். முழங்காலின் சேதமடைந்த பகுதிகள் செயற்கை உருவ வடிமைப்புகளால் மாற்றப்படுகின்றன, இதனால் மருத்துவ பயனாளர்களுக்கு மூட்டு பகுதியை நீட்டுவதற்கும், மடக்குவதற்கும், நடப்பதற்கும் வாய்ப்பளிப்பதோடு, அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

இதற்கு நேரெதிராக, ரோபோடிக் முறையில் மேற்கொள்ளப்படும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, 3டி இமேஜிங் மற்றும் கணினி வழிநடத்தும் கருவிகளைப் பயன்படுத்தி, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மிகத் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்த உதவுகிறது. இதன் மூலம் அந்தந்த மருத்துவ பயனாளரின் உடலமைப்பிற்கு ஏற்ற வகையில் துல்லியமாகத் திட்டமிட்டு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவதால், திசு சேதமடைவது குறைக்கப்படுகிறது. இரத்த இழப்பும் குறைகிறது. முழங்காலில் வைக்கப்படும் இம்ப்ளாண்ட்டின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது.

மூத்த ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் - டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் [Senior Consultant Orthopaedic Surgeons – Dr. Venkataramanan Swaminathan], டாக்டர் தாமோதரன் பி.ஆர் [Dr. Damodharan P R], டாக்டர் செந்தில் கமலசேகரன் [Dr. Senthil Kamalasekaran] மற்றும் டாக்டர் மதன் திருவேங்கடா [Dr. Madhan Thiruvengada] ஆகியோருடன் அவர்களது குழுவினரும் சேர்ந்து இந்த மைல்கல்லை சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

ரோபோடிக் அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து பேசிய அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ், ஓ.எம்.ஆர் -ன் மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் கூறுகையில் [Dr. Venkataramanan Swaminathan, Senior Consultant Orthopaedic Surgeon, Apollo Speciality Hospitals, OMR], "ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை என்பது ஒரு தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல, எலும்பியல் பராமரிப்பில், மூட்டு சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றமாகும். வழக்கமான, பாரம்பரிய முறையிலான அறுவை சிகிச்சை மருத்துவ பயனாளர்களுக்கு சிக்கலான ஒன்றாக கருதப்படும் சூழல்களிலும் கூட, அவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடனான இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எளிதில் செய்ய முடியும். முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், இந்த நவீன தொழில்நுட்பம் வலியைக் குறைப்பதோடு,, மிக விரைவாக மீண்டு வர உதவுவதோடு, முழங்காலின் இயக்கத்தை மேம்படுத்துவதோடு, அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.”


இந்த நிகழ்வில் பேசிய அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, Chief Executive Officer, Apollo Hospitals, Chennai Region], "150 நாட்களில் 150 ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பது மருத்துவ துறையில் ஒரு மைல்கல் சாதனை. மேலும் இது புதுமையான மருத்துவ சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளை கிடைக்கச் செய்வதிலும், மருத்துவ பயனாளர்களுக்கே முன்னுரிமை வழங்குவதிலும் அப்போலோ கொண்டிருக்கும் எங்களது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகவும் அமைந்திருக்கிறது.. அப்போலோ ஒ.எம்.ஆர். மருத்துவமனையில், மருத்துவ பயனாளர்களுக்கு மிகத் துல்லியமான பராமரிப்பை வழங்கவும் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை போன்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மருத்துவ நிபுணத்துவத்தை புதுமையுடன் இணைப்பதன் மூலம் நாங்கள் தொடர்ந்து முன்னேற இலக்கை கொண்டிருக்கிறோம். இதன் விளைவாக எங்கள் மருத்துவ பயனாளர்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்பானதாக மாற்றுவோம்" என்றார்.

பாரம்பரிய அறுவை சிகிச்சையில், மருத்துவ பயனாளர் 2 முதல் 4 நாட்களில் நடக்கத் தொடங்குவார், அவர் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு வர 6 முதல் 8 வாரங்கள் ஆகும். ஆனால் ரோபோடிக் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சையில், நோயாளி அறுவை சிகிச்சை நடந்த 24 மணி நேரத்திற்குள் நடக்கத் தொடங்க முடியும், குறைந்த வலி அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி இல்லாமலும் கூட, 4 வாரங்களுக்குள் அன்றாட செயல்களில் ஈடுபட முடியும். பாரம்பரிய முறையில் அறுவை சிகிச்சைக்கு 3 மணி நேரம் தேவைப்படும்; ஆனால் ரோபோடிக் TKR அறுவை சிகிச்சைக்கு 2 மணிநேரத்திற்கும் குறைவாகவே எடுக்கும்.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264--க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர். 

 



Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India