ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின்
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ஜெயின், " காப்பீட்டாளர்கள் உள்ளீட்டு வரி வரவுகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவானது, நுகர்வோருக்கு நன்மையையும் தொழில்துறையில் வளர்ச்சியையும் தரும் சிறப்புக்குறிய மைல்கல்லாகும். இந்த அறிவிப்பு மில்லியன் கணக்கான குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை மிகவும் மலிவு விலையில் வழங்க வழிவகை செய்கிறது. காப்பீட்டு நுழைவுக் கட்டணத்தை குறைப்பதன் மூலம், அதிகளவில் தனிநபர் காப்பீடு ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் எமர்ஜென்சி மற்றும் ஹெல்த்கேர் காப்பீட்டுத் துறையின் நீண்டகால மக்கள் தேவையை மேம்படுத்துகிறது. காப்பீடு என்பது ஒரு நிதி சார்ந்த தயாரிப்பு மட்டுமல்ல, அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள் மற்றும் எதிர்பாராத அவசர நிலைகளில் இருந்து குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சேவையாகும். மேலும் இந்த அறிவிப்பு நிதித் திட்டமிடலில் அதை இன்னும் ஆழமாக மேற்கொள்ள உதவும். இது, நுகர்வோர் மற்றும் காப்பீட்டாளர்கள் இருவருக்கும் வெற்றி-வெற்றி எனும் சூழலை உருவாக்கும். தவிர, ஆரோக்கியமான மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும், ஒரு எதிர்கால சீர்திருத்தமாக இதை நாங்கள் கருதுகிறோம்" என்றார்
Comments
Post a Comment