சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-ஆனது, இந்தியா முழுவதும் கிராஸ்ரூட் புத்தாக்கங்களை முன்னெடுக்கும் 40 அரையிறுதி அணிகளை அறிவித்துள்ளது
சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-ஆனது, இந்தியா முழுவதும் கிராஸ்ரூட் புத்தாக்கங்களை முன்னெடுக்கும் 40 அரையிறுதி அணிகளை அறிவித்துள்ளது
அரையிறுதிப் போட்டியாளர்கள், அவர்களின் கருத்துருக்களை மேலும் மேம்படுத்துவதற்காக, மென்டார்ஷிப், புரோடோடைப்பிங் சப்போர்ட் மற்றும் புத்தாக்கத் தளங்களுக்கான அணுகல் ஆகியவறை பெறுவார்கள்
முதல் 40 அணிகளுக்கு INR 8 லட்சம் வழங்கப்படும் அதே வேளையில், ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் ஒரு சாம்சங் மடிக்கணினியும் வழங்கப்படும்
CHENNAI– இந்நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சாம்சங் இந்தியா இன்று, இளைஞர்களுக்கான அதன் நாடு தழுவிய புத்தாக்கப் போட்டியின் நான்காவது பதிப்பான சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-க்கான 40 அரையிறுதிப் போட்டியாளர்களின் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை அறிவித்துள்ளது. இந்த அணிகள் இப்போது போட்டியின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். அங்கு சமூக தாக்கத்திற்கான அவர்களின் யோசனைகளை மேலும் மேம்படுத்துவதற்காக, மென்டார்ஷிப், புரோடோடைப்பிங் சப்போர்ட் மற்றும் புத்தாக்கத் தளங்களுக்கான அணுகல் ஆகியவறை பெறுவார்கள்.
இந்த ஆண்டு அரையிறுதிப் போட்டியாளர்கள், கச்சார் (அசாம்), பாக்பத் (உத்தரப் பிரதேசம்), மஹபூப்நகர் (தெலுங்கானா), துர்க் (சத்தீஸ்கர்) மற்றும் சுந்தர்கர் (ஒடிஷா) போன்ற தொலைதூரப் பகுதிகள் உட்பட 15 இந்திய மாநிலங்களிலிருந்து வரும் பங்கேற்பாளர்களுடன், குறிப்பிடத்தக்க புவியியல் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இத்திட்டம் நாடு முழுவதிலுமிருந்து வரும் மாற்றத்தை உண்டாக்கும் இளம் வயதினரை தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆற்றலின் மூலம் யதார்த்த உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவுகிறது.
சால்வ் ஃபார் டுமாரோ-வின் இந்த 2025 ஆம் ஆண்டு பதிப்பானது, நான்கு முக்கிய கருப்பொருள்களின் கீழ், நுழைவுகளை அழைத்தது:
ஒரு பாதுகாப்பான, அறிவார்ந்த மற்றும் உள்ளடக்கிய பாரதத்திதற்கான AI
இந்தியாவில் சுகாதாரம், தூய்மை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றிற்கான நல்ல எதிர்காலம்
விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம், கல்வி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான சமூக மாற்றம்
தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துருக்களானவை, காற்றின் தர கண்காணிப்பு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுத்தமான நீருக்கான அணுகல் ஆகியவற்றிற்கான AI-இயக்கு கருவிகள் முதல், உணவுக் கழிவுகள் மற்றும் e-கழிவு மேலாண்மைக்கான அறிவார்ந்த தீர்வுகள் வரையிலான இந்திய சமூகத்தின் வளர்ந்து வரும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றன. பிற புத்தாக்கங்களில், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விளையாட்டு மூலம் கற்றல், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி ஆப்-கள் மற்றும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான விளையாட்டை முதன்மையாக் கொண்ட இடையீடுகள் உள்ளிட்டவை அடங்கும். சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சிக் களங்களில், ஆரம்பகால நுரையீரல் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் மனநல சிகிச்சைக்கான கருவிகள் ஆகியவை உள்ளடங்கிய புராஜக்ட்-கள், இன்டெலிஜென்ட் டேட்டா ஸ்கிராப்பிங் மூலம் தொழில்நுட்ப ஆராய்ச்சியை எளிதாக்குகின்றன.
“நாங்கள், சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ 2025-இன் முதல் 40 அரையிறுதிப் போட்டியாளர் அணிகளை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். டயர் 2, டயர் 3 நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த இந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள், உண்மையான சமூக சவால்களைத் தீர்ப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். அர்த்தமுள்ள மாற்றத்தை உண்டாக்கும் இந்திய இளைஞர்களின் கருத்துக்கள், அவர்களின் நம்பமுடியாத திறனை பிரதிபலிக்கின்றன. அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகரும்போது, மென்டார்ஷிப், ரிசோர்சஸ் மற்றும் அவர்களின் கருத்துருக்களை ஒரு அறிவார்ந்த, கூடுதலாக உள்ளடக்கிய பாரதத்திற்கான நிஜ உலக தாக்கமாக மாற்றுவதற்கான ஒரு தளத்துடன் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.”என்று சாம்சங் தென்மேற்கு ஆசியாவின் கார்ப்பரேட் துணைத் தலைவர் SP சுன் கூறினார்.
“சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-வுடன் எங்கள் கூட்டாண்மையைத் தொடர்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இவ்வாண்டின் அணுகுமுறையானது பிராந்திய பிரதிநிதித்துவத்தை மையமாகக் கொண்டது, மேலும் இது, தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துருக்களின் வரம்பு மற்றும் ஆழத்தில் தெளிவாக பிரதிபலிக்கிறது. இந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள் இந்தியாவின் எதிர்கால ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர், ”என்று FITT-IIT டெல்லியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நிகில் அகர்வால் கூறினார்.
அரையிறுதிப் போட்டியாளர்களுக்கு முன்னால் உள்ள சவால்கள் என்ன?
சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ 2025-க்கான தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக, முதல் 40 அணிகள் தங்கள் கருத்துருக்களை சாத்தியமுள்ள முன்மாதிரிகளாக மாற்ற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தீவிர இன்னோவேஷன் பூட்கேம்ப்-இல் பங்கேற்கும். இந்தக் கட்டத்தில், பங்கேற்பாளர்கள் சாம்சங் R&D மற்றும் தென்மேற்கு ஆசிய செயல்பாடுகளில் உள்ள தலைவர்கள் மற்றும் நிபுணர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுவார்கள். மேலும், அவர்கள் IIT டெல்லியில், தொழில்துறை மற்றும் அரசு நிபுணர்களால் வழிநடத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொண்டு, புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவை பற்றிய நேரடி நுண்ணறிவுகளைப் பெறுவார்கள். இந்த பூட்கேம்ப்-ஆனது, IIT டெல்லி வழிகாட்டிகள் மற்றும் சாம்சங் சால்வ் ஃபார் டுமாரோ-வின் முந்தைய பதிப்புகளின் முன்னாள் மாணவர்களிடமிருந்து கட்டமைக்கப்பட்ட முன்மாதிரியை உருவாக்குவதற்கான உதவியை உள்ளடக்கியதன் மூலம், இது கற்றல் மற்றும் வழிகாட்டுதலின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது. இந்த பூட்கேம்பைத் தொடர்ந்து, ஒரு நேஷனல் பிட்ச் ஈவண்ட் நடைபெறும்; அதில் தேர்ந்தெடுக்கும் ஒரு சாம்சங் நடுவர் குழுவானது, போட்டியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் இறுதி 20 அணிகளை மதிப்பீடு செய்து பட்டியலிடும்.
விருதுகள் மற்றும் உதவி
முதல் சிறந்த 40 அணிகளுக்கு 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும் அதே வேளையில், ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் சாம்சங் மடிக்கணினி வழங்கப்படும்
முதல் சிறந்த 20 அணிகள், 20 லட்சம் ரூபாய் மற்றும் புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் ஸ்மார்ட்போன்களைப் பெறும்
கிராண்ட் ஃபினாலே-இல் வெற்றி பெறும் நான்கு அணிகள், தங்கள் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, IIT டெல்லியில் 1 கோடி ரூபாய் இன்குபேஷன் மானியத்தைப் பெறும்
கிராண்ட் ஃபினாலே-இல் சிறப்பு விருதுகள் – குட்வில் அவார்டு, யங் இன்னோவேட்டர் அவார்டு மற்றும் சோஸியல் மீடியா சாம்பியன் ஆகியன ஒரு ஒருங்கிணைந்த பரிசுத் தொகையான 4.5 லட்சம் ரூபாயுடன்
இளைஞர் அதிகாரத்திற்கான ஒரு உலகளாவிய பார்வை
2010 இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சால்வ் ஃபார் டுமாரோ எனும் முன்முயற்சியானது, இப்போது 68 நாடுகளில் செயலில் உள்ளது மற்றும் உலகளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான இளம் பருவத்தினரை ஈடுபடுத்தியுள்ளது. இந்த முன்முயற்சியானது, இளம் சமுதாயத்தை எதிர்காலத்திற்கான தலைவர்களாக மாற்றுவதற்கான கல்வி, திறன்கள் மற்றும் வாய்ப்புகளுடன் சித்தப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்-இன் "Together for Tomorrow! Enabling People" எனும் உலகளாவிய CSR தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது.
சாம்சங்கின் உலகளாவிய CSR திட்டங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, எங்கள் [CSR webpage]-ஐப் பார்வையிடவும்.
Comments
Post a Comment