அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும், குழந்தைகளுக்கான 10,000 துளையிடும் இதய சிகிச்சை நடைமுறைகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது!

 அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 6000 திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும், குழந்தைகளுக்கான 10,000 துளையிடும் இதய சிகிச்சை நடைமுறைகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது!


சென்னை, ஆகஸ்ட் 6, 2025: இந்தியாவில் குழந்தைகளுக்கான இதய சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னையிலுள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும் [pediatric cardiac surgeries], 10,000 குழந்தைகளுக்கான துளையிடும் இதய சிகிச்சை நடைமுறைகளையும் (pediatric cardiac interventional procedures) வெற்றிகரமாகச் செய்துள்ளது. இது நாட்டில் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் முன்னணி தனியார் மருத்துவமனைகளில் ஒன்றாக அப்போலோ-வின் மருத்துவ நிபுணத்துவத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.


2009-ம் ஆண்டு அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை [Apollo Children’s Hospitals] நிறுவப்பட்டதிலிருந்து, இதய அறிவியல் துறை, பிறவி இதய நோய், பிற காரணங்களால் ஏற்பட்ட இதய நோய் ஏற்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு தொடர்ந்து உயர்தர சிகிச்சையை இந்த மருத்துவமனை வழங்கி வருகிறது. இதில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இதய சிகிச்சைகள், குழந்தைகளில் மிகவும் சிக்கலான, அதிக ஆபத்துகளைக் கொண்ட இதய சிகிச்சைகள் ஆகியவையும் அடங்கும்.


மருத்துவ சிகிச்சையின் மிகவும் சிக்கலான பகுதிகளில் குழந்தைகளுக்கான இதய நோய் சிகிச்சையும் ஒன்றாகும். இந்தியாவில், ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் கிட்டத்தட்ட 8 பேர் பிறவி இதய குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 300,000 குழந்தைகள் இதய பாதிப்புடன் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, இந்த முக்கியமான சுகாதார சவாலை பன்னோக்கு சிகிச்சை அணுகுமுறையுடன் எதிர்கொண்டுள்ளது. குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் மேம்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளையும் நோய்ப் பராமரிப்பையும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை வழங்குகிறது.


அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நெவில் சாலமன் [Dr. Neville Solomon, Senior Consultant Paediatric Cardiac Surgeon], மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.எஸ். முத்துக்குமரன் [Dr. C. S. Muthukumaran, Senior Consultant Interventional Cardiologist] தலைமையிலான குழு விரிவான அளவில் உயிர்காக்கும் நடைமுறைகளைச் செய்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் தமனி சுவிட்ச் அறுவை சிகிச்சை (arterial switch), ஒட்டுமொத்த அசாதாரண நுரையீரல் சிரை இணைப்பு அறுவை சிகிச்சைகள் (Total Anomalous Pulmonary Venous Connection surgery - TAPVC), சிக்கலான பெருநாடி வளைவு மறுகட்டமைப்புகள் (complex aortic arch reconstructions), வால்வு சீரமைப்பு சிகிச்சைகள், ஃபாலட்டின் டெட்ராலஜி அறுவை சிகிச்சைகள் (surgeries for tetralogy of Fallot), நுரையீரல் அட்ரேசியாவிற்கான அறுவை சிகிச்சைகள் (pulmonary atresia), ஒற்றை வென்ட்ரிக்கிள் பாலியேஷன் (single ventricle palliation), மிகவும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் (highly complex redo surgeries) ஆகிய சிக்கலான சிகிச்சைகளும் இதில் அடங்கும். ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக, 650 கிராம் மட்டுமே எடை கொண்ட மிகச் சிறிய குழந்தைக்கு வெறும் 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நெவில் சாலமன் கூறுகையில் “குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும்போது துல்லியம், நேரம், பிறவி இதய குறைபாடுகள் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவை தேவை. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில், எங்கள் அணுகுமுறை, உயர் தெளிவுடன் நோயறிதல், சான்றுகள் சார்ந்த நெறிமுறைகள், உடனடியாக முடிவெடுப்பது ஆகிய நடைமுறைகளை ஒருங்கே கொண்டதாக உள்ளது. இந்த அதிக ஆபத்துள்ள குழந்தை இதய நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களை குணம் அடையச் செய்வதற்கு, நுணுக்கமான தீவிர அறுவை சிகிச்சை திட்டமிடல், அறுவை சிகிச்சைக்குப் பின்பு தீவிர பராமரிப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்களை ஒருங்கிணைப்புடன் செய்ய வேண்டியது மிக முக்கியமானது.” என்றார்.


அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த மருத்துவரும் இதயநோய் நிபுணருமான டாக்டர் சி.எஸ். முத்துக்குமரன் கூறுகையில், “குழந்தைகளுக்கான இதயவியல் சிகிச்சை நடைமுறைகள் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது. குறைந்தபட்ச ஊடுருவும் மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் பெருமளவிலான பிறவி இதய குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. இந்த நடைமுறைகள் முழுமையாகத் திறந்த இதய அறுவை சிகிச்சையின் தேவையைக் குறைப்பதுடன் குணம் அடையும் கால அவகாசத்தையும் குறைக்கின்றன. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில், மேம்பட்ட இமேஜிங், கேதடர் அடிப்படையிலான தொழில்நுட்பம் (catheter-based technology), தனிப்பட்ட சிகிச்சை உத்திகளைப் பயன்படுத்துவது போன்றவை பாதுகாப்பாகவும் திறம்படவும் சிகிச்சை அளிக்க எங்களுக்கு உதவுகிறது." என்றார்.


அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, Chief Executive Officer – Chennai Region, Apollo Hospitals] கூறுகையில், “இந்த மைல்கல் சாதனை, உலகத் தரம் வாய்ந்த குழந்தை மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான அப்போலோவின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். குழந்தைகளுக்கான எங்களது இதய சகிச்சைக் குழுவின் சிறந்த பணி, அப்போலோவின் மருத்துவச் சிறப்பு, தொடர்ச்சியான புதுமைகள் ஆகியவை முழுமையான குணப்படுத்துதலுக்கு சான்றாக நிற்கிறது. ஒரு குழந்தையின் இதயத்தைக் காத்து அதைக் காப்பாற்றுவது என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தின் போக்கை மாற்றும் செயலாகும். இந்த சிறந்த சாதனைக்காக எங்களது இதய சிகிச்சைக் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.


இந்த மைல்கல் சாதனையில் அப்போலோவின் மாற்று அறுவை சிகிச்சை குழுவுடன் இணைந்து 3000-க்கும் மேற்பட்ட பிறந்த குழந்தைகளுக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளும், 40 இசிஎம்ஓ (ECMO) நடைமுறைகளும், குழந்தைகளுக்கான இதய மாற்று அறுவை சிகிச்சைகளும் அடங்கும். இந்தியாவைத் தாண்டி, ஈராக், நைஜீரியா ஆகிய நாடுகளிலும் பிற அப்போலோ கிளைகளிலும், இந்தக் குழு மேலும் 1500 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாகப் பிரித்து வாழ்வளிக்கும் மருத்துவமனையாகவும் இருந்து வருகிறது. இது போன்ற மிகவும் சிக்கலான மருத்துவ நடைமுறைகளில் கொண்டிருக்கும் அப்போலோ கொண்டிருக்கும் நிபுணத்துவம், மருத்துவமனையின் குழந்தைகளுக்கான விரிவான அறுவை சிகிச்சைத் திறன்களை எடுத்துக் காட்டுகிறது.


மேம்பட்ட நோயறிதல் கருவிகள், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், குழந்தைகளுக்கான இதய கேத் லேப்கள், அர்ப்பணிப்புள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவற்றின் மூலம், அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை ஒவ்வொரு குழந்தைக்கும் மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குகிறது. ஆரம்பகால நோயறிதலில் இருந்து அறுவை சிகிச்சை, நீண்டகால பின்தொடர்தல் வரை தனிப்பயனாக்கப்பட்ட, தடையற்ற பராமரிப்பை அவர்கள் பெறுவதை அப்போலோ உறுதி செய்கிறது.


அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை அக்கறையுடனும் திறமையுடனும் செயல்பட்டு வருவதால் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்த மருத்துவமனை குழந்தைகளின் இதயத்துடிப்பைச் சீராக்கி அவர்களது வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றுகின்றது.


அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 12,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், 5,000-க்கும் அதிகமான மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான ப்ரைமரி கிளினிக்குகள் மற்றும் 1,228-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது. 


 ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.


கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.



Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases