அப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற பொருளில் 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்டுள்ளது - வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களை, ஆதாரங்களின் அடிப்படையில் ஊட்டச்சத்து மூலம் எதிர்த்துப் போராடும் நோக்கில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது!

 அப்போலோ மருத்துவமனை 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற பொருளில் 'மை ஃபுட் மை ஹெல்த்' என்ற நூலை வெளியிட்டுள்ளது - வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்களை, ஆதாரங்களின் அடிப்படையில் ஊட்டச்சத்து மூலம் எதிர்த்துப் போராடும் நோக்கில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது!



இந்தப் புத்தகம் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தேவையான, நம்பகமான ஊட்டச்சத்து தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குகிறது


சென்னை, 09 ஜூலை 2025: இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் நிறுவனமான அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals], மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சைக்கான [Medical Nutrition Therapy (MNT)] அதிகாரப்பூர்வமான, விரிவான வழிகாட்டி நூலான "எனது உணவு, எனது ஆரோக்கியம்" என்று பொருள்படும் "மை ஃபுட் மை ஹெல்த்" (My Food, My Health) என்ற நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. அப்போலோ மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற உணவியல் நிபுணர்களால் எழுதப்பட்டு, இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் உணவியல் ஆலோசகர் திருமதி அனிதா ஜதானாவால் [Ms. Anita Jatana, Consultant Dietetics at Indraprastha Apollo Hospitals] தொகுக்கப்பட்டு இந்தப் புத்தகம், வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தக்கத்தில் குழந்தைப் பருவம் முதல் முதுமை வரையில் அனைவருக்கும் தேவையான ஊட்டச்சத்து பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன., ’மை ஃபுட் மை ஹெல்த்’, அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்ட ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களுடன் ஒவ்வொரு தனிநபரையும் தயார்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


நீரிழிவு, உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில், உணவைப் பற்றி பல தவறான தகவல்களும் பரவலாக உள்ளன. இந்தச் சூழலில், " "மை ஃபுட் மை ஹெல்த்" (My Food, My Health), தனிப்பட்ட சுகாதார மேலாண்மைக்கு தெளிவையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதற்கான நம்பகமான கருவியாகச் செயல்படுகிறது.


இந்தப் புத்தகத்தை தலைமை விருந்தினர் திருமதி சுசரிதா ரெட்டி [Chief Guest, Mrs. Sucharitha Reddy] வெளியிட்டார். முதல் பிரதியை அப்போலோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி [Dr. Prathap C. Reddy, Founder & Chairman of Apollo Hospitals] பெற்றுக் கொண்டார்.


அப்போலோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டி [Dr. Prathap C. Reddy, Founder & Chairman of Apollo Hospitals] பேசுகையில், “‘"மை ஃபுட் மை ஹெல்த்" (My Food, My Health) என்ற இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், நோய்த் தடுப்பு சுகாதார சேவையை அனைவருக்கும் எளிதில் கிடைக்கூடியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கான எங்கள் இலக்கை நோக்கிய மற்றொரு முக்கியமான படியை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம். தொற்று அல்லாத நோய்கள் அனைத்து வயதினரின் வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து வருகின்றன. எனவே நமது மக்கள் உணவு குறித்தும் ஆரோக்கியம் குறித்தும் தகவல் அறிந்து செயல்படுவது தொடர்பான அறிவைக் கற்பிக்க வேண்டும். இப்போது இன்று நாம் உணவில் எதை எடுத்து கொள்ளலாம், எதை தவிர்க்கலாம் என்று நாம் மேற்கொள்ளும் தேர்வுகள்தான் நம்முடைய எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. பல வருட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த தனித்துவமான புத்தகத்தின் மூலம், நாங்கள் ஒரு வலுவான, சிறந்த, மகிழ்ச்சியான தேசத்தை வடிவமைக்க முயற்சி செய்கிறோம்.” என்றார்.


இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் உணவுமுறை ஆலோசகர் திருமதி அனிதா ஜதானா [Ms. Anita Jatana, Consultant Dietetics, Indraprastha Apollo Hospitals] பேசுகையில், "ஊட்டச்சத்து பற்றிய தவறான தகவல்கள் பரவலாக இருக்கும் இந்தக் காலத்தில், 'எனது உணவு, எனது ஆரோக்கியம்' என்ற பொருள்படும் மை ஃபுட் மை ஹெல்த்" (My Food, My Health) என்ற இந்தப் புத்தகம், நாம் உணவை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவை ஏற்படுத்த முயல்கிறது. இந்த புத்தகம் பல வருட மருத்துவ அனுபவத்தாலும் அப்போலோ உணவியல் நிபுணர்களின் ஒத்துழைப்பின் விளைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், நோயாளிகளைப் பராமரிப்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை கொண்ட வாசகர்கள் என ஒவ்வொரு நபரும் வாழ்நாள் முழுவதும், நல்வாழ்வுக்கான தகவலறிந்த, நிலையான உணவுத் தேர்வுகளைச் செய்ய உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.


அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த உணவியல், ஊட்டச்சத்து நிபுணர்களின் புகழ்பெற்ற குழுவில் இடம்பெற்றுள்ள டாப்னி டி.கே, பிரியங்கா ரோஹத்கி, ஹரிதா ஷியாம், திருமதி லேகா ஸ்ரீதரன், பபிதா ஜி. ஹசாரிகா, சம்பா மஜும்தார், வர்ஷா கோரே, எஸ். சந்தியா சிங், சுனிதா சாஹூ [Ms. Daphnee DK, Ms. Priyanka Rohatgi, Ms. Haritha Shyam, Ms. Lekha Sreedharan, Ms. Babita G. Hazarika, Ms. Champa Mazumdar, Ms. Varsha Gorey, Ms. Sandhya Singh S., and Ms. Sunita Sahoo] ஆகியோர் இந்தப் புத்தகம் வெளிவரச் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.


வாசகர்களுக்கு ஏற்ற வடிவத்தில் கிடைக்கும், இந்தப் புத்தகம் சிகிச்சைகளின்போது உணவுமுறை உத்திகளை எடுத்துக் கூறுகிறது. உணவு, நல்வாழ்வு ஆகியவை பற்றிய சிறந்த புரிதலை ஏற்படுத்துவதுடன், இவை தொடர்பாக பொதுவாக வலம் வரும் பரவலான கட்டுக்கதைகளை எடுத்துக் காட்டி அவற்றை உடைக்கிறது. பொது மக்கள், சுகாதார சேவை நிறுவனங்கள் ஆகிய இருவரையும் இலக்காகக் கொண்ட இந்த வழிகாட்டி நூல், மருத்துவ நுண்ணறிவுகளையும் அன்றாடம் கடைபிடிக்கக்கூடிய ஆலோசனைகளையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது. இந்தப் புத்தகத்தில் எளிமையான உணவு வழிகாட்டுதல்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள், மன அழுத்தத்தை குறைப்பதற்கான குறிப்புகள், நோய்களில் இருந்து எளிதில் குணம் அடையும் வழிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. அனைவரும் எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுகள் குறித்த சமையல் குறிப்புகள், ஊட்டச்சத்து தொடர்பான தகவல்கள், சரிவிகித உணவு முறைகள் போன்றவை கண்கவரும் புகைப்படங்களுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளன.


"மை ஃபுட் மை ஹெல்த்" (My Food, My Health) என்ற இந்த வெளியீடு, நோய்த் தடுப்பு சுகாதாரத்திலும் நோயாளிகளுக்கு உரிய தகவல்களை தெளிவாக வழங்குவதிலும் அப்போலோ மருத்துவமனையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க சான்றாக அமைந்துள்ளது. இப்புத்தகம் நீண்டகால நல்வாழ்வில் ஊட்டச்சத்தின் முக்கிய பங்கை எடுத்துரைப்பதால், அனைவரும் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக இது இருக்கிறது.


அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர். 


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது