அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘CanWin

 அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறிமுகம் செய்யும் ‘CanWin’ 



ஒரு ஆதரவுக் குழுவான இது – புற்றுநோய்க்கான சிகிச்சைப் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கிறது

இதன் முதல் முயற்சியாக, புற்றுநோயை வென்றவர்களின் 'ஸ்டோரீஸ் ஃப்ரம் தி ஸ்டேஜ்' என்பது தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 25, 2025: புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர் வாழ்பவர்களுக்கான தேசிய மாத நிகழ்வை முன்னிட்டு, ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs) ‘CanWin’ என்ற புற்றுநோய் ஆதரவு குழு தொடங்கப்படுவதை இன்று பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தியது. இது புற்றுநோய் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

“பகிரப்படும் பலம் பலரின் வாழ்க்கைகளை மேம்படுத்தி மாற்றும்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவான CanWin திட்டமானது, புற்றுநோய் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், நோயாளிகள், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும். இது பரிவு, புரிந்துணர்வு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைந்த ஒரு கனிவான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இது, பல நபர்கள் இணைந்திருக்கும் ஒரு குழு மட்டுமல்ல; அதற்கும் மேலானது; பேசுவதற்கும், கேட்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், குணமடைவதற்கும் இதுவொரு பாதுகாப்பான இடமாகும். சமீபத்தில் உங்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை நீங்கள் பராமரித்தாலும், அல்லது புற்று நோயிலிருந்து மீண்டு குணமடைந்து வந்திருந்தாலும், நீங்கள் தனிநபராக தனித்து விடப்படுவதில்லை என்பதை இந்த ஒருங்கிணைப்பு குழு உணர்த்துகிறது. 

CanWin என்ற பெயரானது இரண்டு பலம் வாய்ந்த சிந்தனைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோயில் (Cancer) உள்ள 'கேன்' (Can) என்பது வலிமையையும், சாத்தியக்கூறுகளையும் நினைவூட்டும் ஒரு மென்மையான குறிப்பாகும். மேலும், 'வின்' (Win) என்பது, சென்றடையும் இலக்கை மட்டுமல்லாமல், ஒரு மனப்பான்மையையும் குறிக்கிறது. இது தளர்வடையாமை, கருணை மற்றும் மனஉறுதியுடன் எழுந்து நின்று போராடி வெற்றி காண்பதற்கான ஒரு முடிவை உணர்த்துகிறது. 

புற்றுநோயை வென்றவர்கள், தங்கள் தனிப்பட்ட துணிச்சல், வலிமை மற்றும் வெற்றியின் கதைகளை மேடையில் பலரும் அறியுமாறு பகிர்ந்து கொள்ளும் ஒரு உணர்வுபூர்வமான அமர்வுடன் இந்த முன்முயற்சி திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிஜமான, ஊக்கமளிக்கும் வாழ்க்கை சித்தரிப்புகள் இதேபோன்ற பாதையில் பயணிக்கும் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களை அக்கறையுடன் பராமரிப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு கலங்கரை விளக்காக அமைந்தன.

தனது வாழ்க்கை கதையைப் பகிர்ந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த 10 வயது சிறுமூளையில் தீங்கு விளைவிக்கும் புற்றுக்கட்டி (மெடுல்லோபிளாஸ்டோமா) என்ற புற்றுநோயில் இருந்து மீண்டு குணமடைந்திருக்கும் சிறுவன் லித்தின் “புற்றுநோயைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு சிறுவனாக நான் இருந்தேன்; ஆனால் பிற சிறுவர்களைப்போல நானும் விளையாடவும், பள்ளிக்குச் செல்லவும் விரும்பினேன் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். புற்றுநோயை எதிர்த்து நான் போராட மருத்துவர்கள் எனக்கு உதவினார்கள்; நான் நம்பிக்கையை இழக்க ஒருபோதும் என் குடும்பத்தினர் விடவில்லை. புற்றுநோய்க்காக பல சிகிச்சைகள் எனக்கு செய்யப்பட்டன. ஆனால் இன்று, நான் பலம் வாய்ந்தவனாக உணர்கிறேன். வயதில் நான் சிறியவனாக இருக்கலாம், ஆனால் எனது போராட்டம் மிகப் பெரியது; புற்றுநோயை நான் வென்று சாதித்திருக்கிறேன். இப்போது, நான் விரும்புவதெல்லாம் இயல்பாக வாழ்வதும், சிரிப்பதும், வளர்ச்சியடைவதும் தான்.” என்று கூறினான். 

சென்னையைச் சேர்ந்த உளவியலாளரும் மற்றும் நிணநீர் புற்றுநோயிலிருந்து மீண்டவருமான திருமதி மோனிகா, தனது விதிவிலக்கான உயிர் பிழைத்த பயணத்தைக் குறித்து மனம்திறந்து பகிர்ந்து கொண்டபோது, “எனக்கு ஒரு குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு கட்டி உருவாகியிருப்பதை நான் கண்டறிந்தேன். முதலில் அது காசநோயாக இருக்கலாம் என்று தவறாகக் கருதப்பட்டது. ஆனால் பின்னர் நிணநீர் புற்றுநோய் கட்டி என அது உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப அக்கட்டி உருவான பாதிப்புகள், ஐந்து முறை கீமோதெரபி, ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் 35 சுற்றுகள் கதிர்வீச்சு சிகிச்சைகளை ஒரு சிலுவையைப் போல நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வலியையும், என் குழந்தையின் வளர்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளையும் தவறவிட்ட மன உளைச்சலையும் நான் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நம்பிக்கையுடனும், குடும்பத்தின் ஆதரவோடும், தீவிரமான மனஉறுதியுடனும் ஒரு ஃபீனிக்ஸ் பறவைபோல நான் புத்துயிர் பெற்று மீண்டெழுந்தேன். இன்று, நான் ஒரு சிறப்பான வணிக நிறுவனத்தை நடத்தி வருகிறேன். மேலும் மாற்றம் 360 என்ற அமைப்பில் திறமை மற்றும் நிறுவன மேம்பாடு சிறப்பு நிபுணராகவும், அவப்பெயரை அகற்றவம், மாற்றத்தை தூண்டவும் பணியாற்றுகிறேன்,” என்று அவர் கூறினார்.

பார்வை நரம்பைச் சுற்றியுள்ள சவ்வுகளில் தோன்றும் ஒரு அரிய வகை புற்றுநோயை (மெனின்ஜியோமாவை) எதிர்த்துப் போராடி உயிர் பிழைத்திருக்கும் சிறுவனான ஸ்ரீகர் கூறுகையில், “ஒரு கண்ணில் பார்வையை இழந்தது நான் உலகைப் பார்க்கும் விதத்தை மாற்றியது - ஆனால் என்னையே நான் பார்க்கும், கருதும் விதத்தை அது மாற்றவில்லை. ஒவ்வொரு ஸ்கேனையும், ஒவ்வொரு சிகிச்சையையும் மற்றும் ஒவ்வொரு சவாலையும் நான் நம்பிக்கையுடன் எதிர்கொண்டேன். புரோட்டான் சிகிச்சை எனக்கு நம்பிக்கையை அளித்த நிலையில், என் குடும்பத்தின் பலமும், ஆதரவும் என்னை தொடர்ந்து போராடுமாறு செய்தது. வாழ்க்கை மங்கலாக தோன்றும்போதும், தைரியம் தெளிவைத் தரும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என்று கூறினான். 

"புற்றுநோய் என் வாழ்க்கைப் பாதையை மாற்றியிருக்கலாம்; ஆனால் ஒருபோதும் அதனை வரையறுக்கவில்லை. இருள் சூழ்ந்த வாழ்க்கை திருப்பத்திலும் கூட நான் ஒளியைத் தேடும் முடிவை நான் தேர்ந்தெடுத்தேன். லுகேமியாவுடனான எனது பயணம், மீள்தன்மை என்பது எவராலும் தகர்க்க இயலாதது என்பது மட்டுமல்ல. அது வீழ்ச்சிக்குப் பிறகு எழுவது, நம்பிக்கையுடன் குணமடைவது மற்றும் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையைத் தேர்ந்தெடுப்பது என்ற நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது," என்று லுகேமியா நோயில் இருந்து மீண்டவரும், 'சன்ஷைன் அட் தி பென்ட்' புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர் பிரியங்கா பாக்டி கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட் – ன் குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேசப் பிரிவின் தலைவர் திரு. தினேஷ் மாதவன், "இன்றைய புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மேம்பட்ட சிகிச்சை முறைகள் என்பதற்கும் அப்பாற்பட்டதாகும்; இது உணர்வுரீதியான மீள்திறன் மற்றும் மானுட பிணைப்பு குறித்தும் சமஅளவு முக்கியத்துவம் கொண்டதாகும். CanWin போன்ற முயற்சிகள் புற்றுநோயை வென்றவர்களுக்கு தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளைப் பகிரவும், பிரதிபலிக்கவும், குணமடையவும் ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் அந்த இடைவெளியைக் குறைக்கின்றன. இம்முயற்சிகளில் மருத்துவர்களும், நோயாளிகளைப் பராமரிப்பவர்களும் ஒருமித்த உணர்வுடன் நோயாளிகளோடு இணைந்து நிற்கின்றனர். பரிவான புரிந்துணர்வுடன் வழிநடத்தப்படும்போது, கதைசொல்லல் ஒரு சிகிச்சை கருவியாக மாறுகிறது. பேசுபவர் மற்றும் கேட்பவர் ஆகிய இருவருக்கும் இது திறனதிகாரத்தை வழங்குகிறது. மேலும் முழுமையான சிகிச்சை வழிமுறைகளை நோக்கி நாங்கள் நகரும்போது, அறிவியலும் மனிதநேயமும் கைகோர்த்து செயல்படும் சூழலியல் அமைப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை CanWin திட்டம் வெளிப்படுத்துகிறது," என்று கூறினார்.

“அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் தலைமை செயலாக்க அதிகாரி திரு, கரண் பூரி பேசுகையில், “குணமடைதல் என்பது, சிகிச்சை என்பதையும் கடந்தது என்று அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் நாங்கள் எப்போதும் நம்புகிறோம். CanWin திட்டம் மூலம், துணிச்சலும், தைரியமும் பகிரப்படும், மனதின் குரல்கள் கேட்கப்படும், நேர்மறையான வாழ்க்கை கதைகள் மருத்துவத்திற்கு ஒரு ஆதரவாக மாறும் ஒரு சமூகத்தை நாங்கள் உருவாக்குகிறோம். இது எந்தவொரு பிராண்டையும் சாராத தளமாகும். அதாவது அனைத்து புற்றுநோய் நோயாளிகள், பராமரிப்பாளர்கள், புற்றுநோய் நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகிய அனைவருக்கும் தனது கதவுகளை திறந்து வைத்திருக்கும் ஒரு செயல்தளமாகும். இந்த முயற்சி புற்றுநோய் சிகிச்சையை மனிதநேய செயல்பாடாக ஆக்குவதற்கான ஒரு படிநிலையாகும். இது மருத்துவ நிபுணத்துவத்தை மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான வலிமையையும், தோழமை உணர்வையும் வழங்குகிறது” என்று கூறினார்.

இந்நிகழ்வில், குணமடைதல், ஆதரவு குரலெழுப்புதல் மற்றும் பிணைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக புற்றுநோயை வென்றவர்கள் அவர்களது வாழ்க்கைப் பயணத்தை நேர்த்தியாகப் பகிர்ந்துகொள்ள வழிகாட்டிய தொழில்முறை கதை சொல்பவர்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றனர்.

“கதை சொல்வது, வலிக்கு அர்த்தம் பெற உதவுகிறது. இது மௌனமான போராட்டங்களை பகிரப்படும் ஞானமாக மாற்றுகிறது. புற்றுநோயை வென்ற இவர்கள் வெறும் கதைகளைச் சொல்லவில்லை. அவர்கள் புற்றுநோயுடன் வாழ்வது மற்றும் அதிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பதற்கான ஒரு புதிய கதையை எழுதுகிறார்கள்,” என்று புற்றுநோயை வென்றவர்களுக்கு வழிகாட்டிய தொழில்முறை கதைசொல்லியான திருமதி அம்புஜவள்ளி கூறினார். 

இந்த நிகழ்வில் முன்னணி புற்றுநோய் நிபுணர்களும் பங்கேற்றனர். அவர்கள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகள் மூலம் அனைத்து வயதினரிலும் புற்றுநோயிலிருந்து மீண்டு உயிர்வாழும் விகிதங்கள் கணிசமாக மேம்பட்டுள்ளதாக எடுத்துரைத்தனர். ‘CanWin’ போன்ற முயற்சிகள், சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் நோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் உணர்வு ரீதியான மீட்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாதாந்திர சந்திப்புகள், கதை சொல்லல் சிகிச்சை, உயிர் பிழைத்தவர்கள் முன்னின்று வழிநடத்தும் பயிலரங்குகள், நிபுணர்களின் கேள்வி-பதில் அமர்வுகள் மற்றும் தன்னார்வ சேவைக்கான வாய்ப்புகள் மூலம், ‘CanWin’ என்ற இந்த முன்முயற்சி, பரிவான புரிந்துணர்வு, மீள்தன்மை மற்றும் பகிரப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு துடிப்பான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

#புற்றுநோயை வெல்வோம்

அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/


புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக,  மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.  இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. 


இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 400-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.  



இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பெற்றிருக்கிறது. அனைத்து உள்நாட்டு நோயாளிகளும் மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உதவுவதற்கான எமது பிரத்யேக தொடர்பு எண்ணான 04048964515 மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். 24 X 7 அடிப்படையில் சிகிச்சை சேவையை நாங்கள் வழங்குகிறோம். 


ஊடக விசாரணைகளுக்கு அல்லது மேலதிக தகவல்களுக்கு ‘தொடர்புகொள்க: எம்எஸ்எல் 

 

Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது