அப்போலோ மருத்துவமனை ஒஎம்ஆர்-ல் செய்யப்பட்ட மிகவும் சிக்கலான முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 16 வயது சைக்கிள் வீரர் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மீண்டெழுந்திருக்கிறார்!

 அப்போலோ மருத்துவமனை ஒஎம்ஆர்-ல் செய்யப்பட்ட மிகவும் சிக்கலான முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 16 வயது சைக்கிள் வீரர் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மீண்டெழுந்திருக்கிறார்!





சென்னை, 10 ஏப்ரல் 2025: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்திருக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் ஒஎம்ஆர் [Apollo Hospitals, OMR]-ல் மிகவும் சிக்கலான முழங்கால் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை [knee reconstruction surgery] வெற்றிகரமாகச் செய்யப்பட்டிருக்கிறது. 16 வயதே ஆன சைக்கிள் பந்தய வீரர், சாலை விபத்தில் காயமடைந்தார். இந்த விபத்தில் அவருக்கு முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், பட்டெல்லா எனப்படும் முழங்கால் தொப்பி பகுதியில் [patella (kneecap)] மிகவும் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. காயமடைந்த அந்த 16 வயது சிறுவன், சைக்கிள் பந்தயத்தில் நம்பிக்கையளிக்கும் வீரராக ஜொலிப்பவர். முழங்கால் எலும்பு முறிவால், இனி அவர் நடக்க இயலுமா, சைக்கிள் ஓட்ட முடியுமா என்ற பயம் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. இவரை சென்னையில் இருக்கும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் ஒஎம்ஆர்-க்கு அழைத்து வந்து, முழங்கால் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போலோ மருத்துவமனையின் ஆழ்ந்த நிபுணத்துவமிக்க மருத்துவ நடைமுறைகளும், பல்துறை ஒருங்கிணைந்த சிறப்பு சிகிச்சைகளும் இவரை இப்பொழுது 16-வயதுக்குட்டவர்களுக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்ல வைத்திருக்கின்றன. மிகவும் சிக்கலான முழங்கால் மறுசீரமைப்பு அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதால், ஒடிசாவின் பூரி நகரில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் இவர் மீண்டெழுந்து சாதனைப் படைக்க முடிந்திருக்கிறது.

சைக்கிளிங்கில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இந்த இளம் நோயாளி, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து வருகையில் எதிர்பாராதவகையில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவரது முழங்காலின் பட்டெல்லாவில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் அப்போலோ ஓஎம்ஆர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். இந்தக் விபத்தில் அவருக்கு எலும்பு பல இடங்களில் முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. இதுமட்டுமில்லாமல் திறந்தமாதிரியாக இருந்த காயத்தில் சேறு மற்றும் குப்பைகளும் அதிகம் ஒட்டிக்கொண்டிருந்தன. இது திறந்த காயத்தை மேலும் தொற்றுப் பாதிப்படைய செய்வதாக இருந்தது. ஒருபுறம், எலும்பு முறிவின் சிக்கலான பாதிப்பு, மறுபுறம் தொற்று ஏற்படும் அபாயம். இவை இரண்டையும் கருத்தில் கொண்டு, மூட்டு செயல்பாட்டைப் பாதுகாக்கவும் நீண்டகால கால் இயக்க இல்லாமல் இருப்பதை தடுக்கவும் அவசர அறுவை சிகிச்சை அவசியம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஒஎம்ஆர் -ல் உள்ள அப்போலோ மருத்துவமனை எலும்பியல் அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த [orthopaedic surgery department] டாக்டர். வெங்கடரமணன் சுவாமிநாதன் [Dr. Venkataramanan Swaminathan] தலைமையிலான சிறப்பு பன்னோக்கு சிகிச்சை குழு, பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர். குமரேசன் [Plastic Surgeon Dr. Kumaresan] அந்த 16-வயது சிறுவன் அனுமதிக்கப்பட்ட இரவில் அவசர சிகிச்சையை மேற்கொண்டது. இந்த அறுவை சிகிச்சை குழு, துண்டு துண்டாக முறிந்த பட்டெல்லாவை மிக நுணுக்கமாக மறுசீரமைத்து சரிசெய்தது. நோயாளியின் எலும்பின் தரம் சாதகமாக இருப்பதை பயன்படுத்தி மிக குறைந்தளவே நீக்கம் செய்யப்பட்டது. அதே நேரத்தில், உடல் செயல்பாட்டை மீட்டெடுக்கவும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் மென்மையான பாதிப்படைந்த சதை நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மாற்றும் செய்யப்பட்டன.

அப்போலோ ஓஎம்ஆர் மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் [Dr. Venkataramanan Swaminathan, Senior Consultant Orthopedic Surgeon, Apollo OMR Hospitals] கூறுகையில், "விபத்தில் உண்டான இந்த காயத்தின் தன்மையானது, அதை ஒரு அதிக பதட்டத்தை உருவாக்கும் சூழ்நிலைக்குத் தள்ளியது. சைக்கிளிங் செய்பவர்களுக்கு பட்டெல்லா என்பது மிகவும் முக்கியமானது. மேலும் எலும்பு முறிந்து உடைப்பட்டு, சேறு குப்பை என காயம் மாசுபட்ட நிலையில், உடல்ரீதியாக அவற்றை அதிகம் நீக்காமல், செயல்பாட்டையும் மீட்டெடுப்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது. அந்த சிறுவனின் மன உறுதியும், எங்களது அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தின் துல்லியமும் இணைந்து, அந்த சிறுவனை காயத்திலிருந்து மீண்டெழ செய்திருக்கிறது. இந்த நோயாளிக்கு அளித்த சிகிச்சையானது, பன்னோக்கு சிறப்பு சிகிச்சை முறை மூலம் அதிநவீன அவசர சிகிச்சை மற்றும் எலும்பியல் சிகிச்சையை வழங்குவதில் அப்போலோ மருத்துவமனை கொண்டிருக்கும் நிபுணத்துவத்தையும், அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. மருத்துவ சிகிச்சைகளில் இருக்கும் உயரிய அனுபவம், சரியான நேரத்தில் நோய்களையும், பாதிப்புகளையும் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சையை அளிக்கும் துல்லியத்தன்மை மூலம் நோயாளிகளின் உடல்நலத்தில் சிறந்த பலன்களை அளிப்பதில் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து புதிய வரையறைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது’’ என்றார்.

மருத்துவ ஆலோசகரும் அவசர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பாளருமான டாக்டர் மதுமிதா [Dr.Madhumita, consultant and Incharge, Emergency Department] கூறுகையில், "சாலை விபத்தில் வலது முழங்காலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிக்கலான காயம் ஏற்பட்டதால், அந்த சிறுவன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டார். காயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தொற்று, திசு சேதம், நரம்பு மற்றும் இரத்த நாள காயம் மற்றும் பலவீனமான எலும்பு குணமட்டைவதில் தாமதம் போன்ற சிக்கல்களைத் தடுக்க அவசர அறுவை சிகிச்சை அவசியம். அறுவை சிகிச்சை ஸ்பெஷலிட்ஸ்ட்டின் நிபுணத்துவம், கடுமையான தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் 24/7 இருக்கும் அறுவை சிகிச்சை சேவைகள் மூலம் அறுவை சிகிச்சை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த இளம் சைக்கிள் பந்தய வீரர் ஆச்சர்யப்படுமளவிற்கு குணமடைந்திருக்கிறார். மிகவும் சிக்கலான உடல் காயத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிப்பது என்பது, அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து அளித்து வரும் உயரிய மருத்துவ சிகிச்சைகளின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கிறது. இந்த அர்ப்பணிப்பு ஒவ்வொரு நாளும் எண்ணற்ற நோயாளிகளின் வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது. அவர்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவுகிறது" என்றார்.

 அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சில மாதங்களுக்குள், நோயாளி மீண்டும் சைக்கிளிங்கில் போட்டிப் பயிற்சியைத் தொடங்கினார். மதிப்புமிக்க தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இத்தகைய சிக்கலான, கடுமையான காயத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்புவது என்பது, அவருக்கு அளிக்கப்பட்ட உயரிய மருத்துவ பராமரிப்பின் தரம் மற்றும் மனித உத்வேகத்திற்கு ஒரு சான்றாக இருக்கிறது.


அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில், உலகம் முழுவதும் 12,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 72 மருத்துவமனைகள், சுமார் 5000 மருந்தகங்கள், 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள், 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது. 

ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர், டாக்டர் பிரதாப். .சி. ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.

கடந்த 40 ஆண்டுகளாக, மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது. மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.



Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases