சிறப்பு கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் முதலீடு செய்யுமாறு இந்திய நிறுவனங்களை வலியுறுத்தினார் குடியரசுத் துணைத் தலைவர் ஸ்ரீ ஜக்தீப் தன்கர்
சிறப்பு கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் முதலீடு செய்யுமாறு இந்திய நிறுவனங்களை வலியுறுத்தினார் குடியரசுத் துணைத் தலைவர் ஸ்ரீ ஜக்தீப் தன்கர்
இந்துஜா கல்லூரியை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டத்தை அறிவித்தார் ஹிந்துஜா அறக்கட்டளை தலைவர் அசோக் ஹிந்துஜா
2030 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் மாணவர்களுக்கு கல்வியளிப்பதை நோக்கமாக் கொண்டுள்ளது இந்துஜா அறக்கட்டளை
மார்ச் 3, 2025: கல்வியில் 75 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க பயணத்தைக் குறிக்கும் வகையில், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான ஒரு எளிய தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்டு, இப்போது கல்லூரி வரையிலும் வளர்ந்து விட்ட ஹிந்துஜா கல்வி குழுமமானது இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அதன் உறுதியினை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியது. அதன்படி, 6000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன், இந்துஜா கல்லூரி இப்போது ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஹிந்துஜா அறக்கட்டளையின் முன்முயற்சிகளாக ‘பள்ளிக்குச் செல்லும் பாதை மற்றும் வாழ்வாதாரத்திற்கான பாதை’ போன்றவற்றின் மூலம் இந்தியா முழுவதும் 7,00,000 க்கும் மேற்பட்ட மாணவர்களை வளர்த்து வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் லட்சியத் திட்டங்களுடன், ஹிந்துஜா அறக்கட்டளை, மாற்றத்திற்கான ஒரு ஊக்கியாக கல்வியை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது, மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விக்ஸித் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு முக்கிய பங்களிப்பாளராக உள்ளது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வில், இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணனும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில், கல்வி மற்றும் பிற திறன்சார் சாதனைகளுக்காக சிறந்து விளங்கும் மாணவர்களை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் பாராட்டினார்.
இந்துஜா கல்லூரியின் 75 ஆண்டு கல்வியை நினைவுகூரும் வகையில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஸ்ரீ ஜகதீப் தன்கர் பேசுகையில் “சனாதன் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கல்வியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஏனெனில் அது அனைவரையும் உள்ளடக்கியதாக நிற்கிறது, மேலும் அதில் நன்கு வேரூன்றி இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். சிறப்பு நிறுவனங்களை உருவாக்க கல்வியில் முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட் இந்தியாவையும் அவர் வலியுறுத்தினார். பரோபகார முயற்சிகள் பண்டமாக்கல் மற்றும் வணிகமயமாக்கல் தத்துவத்தால் இயக்கப்படக்கூடாது. நமது சுகாதாரம் மற்றும் கல்வி முறைகள் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. சமத்துவத்தை கொண்டு வரும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றும் பொறிமுறையே கல்வி என்றும் அவர் கூறினார். ” இந்துஜா கல்லூரி ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறுவதோடு மட்டும் நின்றுவிடாது, உலகளாவிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக மாறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த மைல்கல் சாதனைப் பற்றி இந்துஜா அறக்கட்டளையின் தலைவர் திரு. அசோக் இந்துஜா பேசுகையில் "நிறுவனம் ஒரு திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது, இது தொழில்துறை-கல்வி இடைவெளிகளைக் குறைப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. அதுவும், ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறுவதற்கும் மாணவர் திறனை பல மடங்கு விரிவுபடுத்துவதற்கும் நீண்டகாலத் திட்டங்களுடன் என்பது கூடுதல் தகவல். தவிர, காலநிலை நிதி மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி மேலாண்மையில் சிறப்புப் படிப்புகளுடன் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் மற்றும் செல்வ மேலாண்மை ஆகியவற்றில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த கல்லூரி திட்டமிட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
கல்வியில் சனாதனக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று திரு. அசோக் ஹிந்துஜா வலியுறுத்தினார். இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர், "சனாதன் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது" என்றும் கூறினார்.
இந்துஜா அறக்கட்டளையின் தலைவர் திரு. பால் ஆபிரகாம் கூறுகையில், "இந்துஜா கல்லூரி, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன, பல மாடி வசதியை உருவாக்க மறுவடிவமை பெற இருக்கிறது. இந்த லட்சியத் திட்டம் 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வாய்ப்புகளில் டிஜிட்டல் தொடர்பு மற்றும் நிரலாக்கத்திற்கான மேம்பட்ட திறன்களை உருவாக்க, புதிய வசதி கல்லூரியின் இயற்பியல் திறனை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்.
இந்துஜா கல்லூரி 30க்கும் மேற்பட்ட கல்வித் திட்டங்களை வழங்குகிறது மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் NAAC A+ அங்கீகாரத்தைப் பெற்றது. 2022 ஆம் ஆண்டில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்ட இந்தக் கல்லூரி, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களுடன் மாணவர்களை சித்தப்படுத்துவதற்காக தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் இணைந்துள்ளது.
கல்லூரியின் தொலைநோக்குப் பார்வை தெளிவாக உள்ளது: "எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு மட்டுமல்லாமல், முன்னேற்றம் பெறவும் அதிகாரம் அளிப்பது” என்பதாகும்.
Comments
Post a Comment