தேயிலையிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வரை அசாம் மாநிலத்தின் ஹைட்ரோகார்பன் திறனுக்கான புதிய தொலைநோக்கை வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் திறக்கிறார்
தேயிலையிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வரை அசாம் மாநிலத்தின் ஹைட்ரோகார்பன் திறனுக்கான புதிய தொலைநோக்கை வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் திறக்கிறார்
குழும நிறுவனமான கெய்ர்ன் ஆயில் & கேஸ், இப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்வுமற்றும் உற்பத்திக்காக ரூ. 50,000 கோடி முதலீட்டை உறுதிசெய்கிறது
சென்னை, மார்ச் 13, 2025: வேதாந்தா குழும தலைவர் திரு அனில் அகர்வால், அசாமின் நிலத்தடி கருப்பு தங்க இருப்புக்களின் அடிப்படையில் அசாம் மாநிலத்தை ஹூஸ்டனுடன் ஒப்பிட்டார் மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்வில் நுண் தொழில்முனைவோருக்கு ஒரு ஆதரவான சூழலமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அசாமில் ரூ. 50,000 கோடி முதலீடு செய்து, ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் ஆயில் & கேஸ், தற்போது அசாமில் உள்ள அரகான் பேசினில் 7,650 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இதன் செயல்பாட்டில் 15 அகழாராய்வு தொகுதிகள் அடங்கும், இதில் 12 தொகுதிகள் ஓபன் ஏக்கரேஜ் லைசென்சிங் பாலிஸி (OALP) மற்றும் 3 கண்டுபிடிக்கப்பட்ட சிறிய வயல்கள் (DSF) ஆகியவை அடங்கும்.
"அசாம் இன் எதிர்காலத்திற்கான தாரக மந்திரம் எளிதானது: ஆய்வு, ஆய்வு, ஆய்வு. அசாம் வழிகாட்டும்," என்று குவகாத்தியில் நடைபெற்ற மாநிலத்தின் உலகளாவிய முதலீட்டு மாநாடான அட்வான்டேஜ் அசாம் 2.0-இல் அகர்வால் கூறினார். இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநில முதல்வர் டாக்டர் ஹிமாந்த பிஸ்வா சர்மா மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
"அசாம் மிகப்பெரிய ஆசீர்வாதங்களைக் கொண்ட ஒரு பூமி. அதன் வியப்பூட்டும் இயற்கை காட்சிகளான பசுமையான தேயிலைத் தோட்டங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வலிமைமிகு பிரம்மபுத்திரா முதல் அதன் பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன் இருப்புக்கள் வரை, இந்த மாநிலம் செழிப்பால் நிறைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கும்
மேலாக, அசாம் இந்தியாவின் தேயிலை சாகுபடியின் மையமாக இருந்து வருகிறது. இன்று, பாரம்பரிய பெரிய தோட்டங்களுடன் செழித்து வளர்ந்து வருகின்ற சிறிய தேயிலைத் தோட்டங்கள் மூலம் ஒரு புதிய தொழில்முனைவு அலை உருவாகி வருகிறது. உள்ளூர் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளைத் திறக்கின்ற வகையில் சிறிய தேயிலை விவசாயிகளுக்கான குறைக்கப்பட்ட ஒழுங்குமுறை தடைகள் அவர்கள் வணிகம் செய்வதை எளிதாகியுள்ளது. என்று அகர்வால் கூறினார்.
"எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்வுக்கும் இதே மாதிரியான ஒரு மாதிரியைப் பயன்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன். சிறிய தேயிலைத் தோட்டங்கள் அசாமின் தேயிலைத் தொழிலை மாற்றுவதைப் போல, எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்வில் நுண் தொழில்முனைவோருக்கான ஒரு ஆதரவான சூழலமைப்பு இந்தத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். அமெரிக்காவில், அரசாங்கம் கச்சா எண்ணெயை பிரித்தெடுத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப சுயாதீன தொழில்முனைவோர்களை அனுமதிக்கின்ற மென்மையான ஆன்லைன் அனுமதிகளை வழங்குவதன் மூலம் சிறிய அளவிலான துளையிடுதலை எளிதாக்குகிறது. அசாம் ஆய்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இந்த மாதிரியைப் பின்பற்றலாம்" என்று அவர் மேலும் கூறினார்.
அகர்வால், அவர் அசாமைப் பார்க்கும்போது மற்றொரு ஹூஸ்டனைப் பார்பதாகக் கூறினார். "ஹூஸ்டன் தனது பூமிக்கடியில் உள்ள கருப்பு தங்கத்தின் இருப்புக்களால் செழித்து வளர்வது போல, அசாமும் மிகப்பெரிய திறன்களைக் கொண்டுள்ளது. அகழ்வாராய்ச்சியில் இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபடலாம். ஒரு புவியியலாளராக, உலகின் 7வது பெரிய, நவீன துளையிடும் இயந்திரங்களில் ஒன்று அசாமில் பயன்படுத்தப்படுவதைப் பார்த்து நான் மிகுந்த பெருமை அடைகிறேன். நாங்கள் ஏற்கனவே மூன்று இடங்களில் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறோம், மேலும் முதல் முறையாக இந்த தளங்களிலிருந்து எரிவாயுவை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளோம். அவற்றின் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்ற வகையில் இந்த எரிவாயு இப்போது தேயிலைத் தோட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. முன்பு நிலக்கரியை நம்பியிருந்த அவர்கள், இப்போது தூய்மையான மற்றும் மிகவும் பயனுள்ள எரிவாயுவைப் பயன்படுத்துகிறார்கள்."
"உலகம் முழுவதும், அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை, நிலத்தடி வளங்கள் பொருளாதார
வளர்ச்சிக்கு உந்துதல் அளித்து வருகின்றன. மிகப்பெரிய பயன்படுத்தப்படாத திறன்களை வழங்குகின்ற இந்தியாவின் புவியியல் தனித்துவமானது. நமது மாண்புமிகு பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ், 'வணிகம் செய்வதின் எளிமை' மற்றும் சுய-சான்றளிப்பு போன்ற கொள்கைகள் ஒரு மிகவும் வணிக-நட்பு சூழலை உருவாக்கியுள்ளன. அசாமில், முதலமைச்சரின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ், இன்று நாம் காணும் ஆற்றல் மற்றும் உந்துதல் மிகவும் ஊக்கமளிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.
"அசாம் இயற்கை வளங்களில் செழிப்பானது மற்றும் உலகின் ஏழாவது மிகப்பெரிய மெகா பேசினாக மாறும் திறன் கொண்டது. அசாமின் நிலையான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ரூ. 50,000 கோடிக்கும் மேலான முதலீட்டுடன், அசாமில் இருந்து நாங்கள் தினசரி 1,00,000 பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை நாங்கள் உற்பத்தி செய்வோம், இதன் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற அதே வேளையில் அதை ஒரு முக்கிய ஹைட்ரோகார்பன் மையமாக மாற்றுவோம்."
அவர் மேலும் கூறுகையில், "இன்று, அசாமின் பெட்ரோலியத் துறையில் 90% அரசாங்க நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, அதேநேரம் தனியார் நிறுவனங்கள் வெறும் 10% மட்டுமே கணக்கில் உள்ளன, அந்த 10% இல் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறோம். மேலும், சுத்திகரிப்பாலைகள் மற்றும் மசகு எண்ணெய் உற்பத்தி முதல் எரிவாயு அடிப்படையிலான தொழில்கள் வரை, தயாரிப்பு கட்டம் முதல் விற்பனையிடம் வரை பரவலான பங்கேற்பையும் நாங்கள் ஊக்குவிக்கின்றோம். இது ஒரு துணிச்சலான படியாகும், ஆனால் நமது மாண்புமிகு பிரதமரின் தலைமைத்துவத்தில் இருந்து நம்பிக்கை பெறுகிறோம் – அவர் நம்மை ஆபத்துகளை எடுத்துக்கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த கற்றுக்கொடுத்துள்ளார்."என்றார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, வேதாந்தா வின் பங்கு அசாமின் மாற்றத்திற்கும் மற்றும் இந்தியாவின் தொழில்துறை பரிணாமத்திற்கும் ஒரு வினையூக்கியாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற அதே வேளையில் இந்தியா ஒரு உலகளாவிய தலைவராக மாறும் இந்தியாவின் தொலைநோக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றவகையில் அசாமை ஒரு தொழில்துறை மற்றும் பொருளாதார சக்திவாய்ந்த மையமாக உருவாக்கும்.
வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளரான கெய்ர்ன் ஆயில் & கேஸ், குவகாத்தியில் நடைபெற்ற அசாமின் உலகளாவிய முதலீட்டு மாநாடான 'அட்வான்டேஜ் அசாம் 2.0' நிகழ்வின் தொடக்க நாளில், இப்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாய்வு மற்றும் உற்பத்திக்காக 50,000 கோடி ரூபாய் முதலீட்டை உறுதிசெய்துள்ளது. இந்த முதலீடு அசாமில் உலகத்தரமான எண்ணெய் மற்றும் எரிவாயு அகழாய்வு மற்றும் உற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கு உதவும். மேலும், இது அதிக Nand Ghars (நவீனமயமாக்கப்பட்ட ஆங்கன்வாடிகள்) நிறுவுதல், கைத்தறி திறன் மையங்களை விரிவாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான டிஜிட்டல் வகுப்பறைகள் கட்டமைத்தல் மற்றும் விளையாட்டுகளை ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் இப்பகுதியின் இளைஞர்களுக்கு ஒரு பிரகாசமான, மிகவும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உறுதி செய்தல் போன்ற பரந்த அளவிலான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளையும் உள்ளடக்கும்.
__________________________________________________________________________________________
கெய்ர்ன் ஆயில் & கேஸ் நிறுவனம் பற்றி
வேதாந்தா லிமிடெட்டின் ஒரு பகுதியாக இருக்கும் கெய்ர்ன் ஆயில் & கேஸ் நிறுவனம், இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஒரு கால் பங்கை பங்களிக்கின்ற மற்றும் நாட்டிற்கான எரிசக்தி பாதுகாப்பை ஊக்குவிக்கின்ற இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாய்வு மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். ஒரு உலகத் தரம் வாய்ந்த வளத் தளத்துடன், கெய்ர்ன் இந்தியாவில் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள 62 தொகுதிகளில் 1.4 பில்லியன் டாலர் மொத்த 2P (மொத்த நிரூபிக்கப்பட்ட கூடுதல் சாத்தியமான இருப்புக்கள்) மற்றும் 2C (மொத்த கான்டிஜென்ட் இருப்புக்கள்) ஆகியவற்றில் ஆர்வத்தைக் கொண்டுள்ளது. கெய்ர்ன் ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் அசாம் போன்ற பகுதிகளில் உற்பத்தி சொத்துக்களைக் கொண்டுள்ளது, மேலும் கடந்த 30 ஆண்டுகளாக அதிக இலாப சாத்தியங்களுடன் அதன் செயல்பாடுகளில் பல தொழில்நுட்ப புதுமைகளை முன்னெடுத்துள்ளது. நாட்டின் ஹைட்ரோகார்பன் ஆற்றலில் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டுகின்ற வகையில் இந்த நிறுவனம் உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிக்கும் தொலைநோக்கைக் கொண்டுள்ளது. இது மரபுசார் மற்றும்
மரபுசார்பற்ற திட்டங்களை உள்ளடக்கிய அதன் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோ முழுவதும் இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வுத் திட்டங்களில் ஒன்றை செயல்படுத்தி வருகிறது, இதில் Tight Oil & Gas, Deep & Shallow Water, ASP மற்றும் CBM போன்ற வழக்கமான மற்றும் வழக்கமற்ற திட்டங்கள் அடங்கும். சுற்றுச்சூழல் மீள்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய கெய்ர்ன் உறுதிபூண்டுள்ளது மற்றும் அளவில் மாற்றத்தக்க சமூக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் மீத்தேன் அறிக்கையிடல் மற்றும் குறைப்பு முயற்சியான OGMP 2.0 இல் கையெழுத்திட்ட முதல் இந்திய நிறுவனமாக இது மாறியுள்ளது.
வேதாந்தா லிமிடெட் பற்றி:
வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் இன் துணை நிறுவனமான வேதாந்தா லிமிடெட் (“வேதாந்தா”), இந்தியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா, லைபீரியா, UAE, கொரியா, தைவான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பரவியுள்ள, எண்ணெய் மற்றும் எரிவாயு, துத்தநாகம், ஈயம், வெள்ளி, தாமிரம், இரும்புத் தாது, எஃகு, நிக்கல், அலுமினியம், பவர் & கிளாஸ் சப்ஸ்ட்ரேட் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் கொண்ட உலகின் முன்னணி இயற்கை வள நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் மின்னணு மற்றும் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ் ஆகியவற்றிற்குள் இது நுழைகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, வேதாந்தா தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது. ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் ஒரு வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், நிர்வாகமும் நிலையான வளர்ச்சியும் வேதாந்தாவின் மூலோபாயத்தின் மையத்தில் உள்ளன. வேதாந்தா, இயற்கை வளத் துறையில் ESG முன்னோடியாக இருக்க ஒரு விரிவான கட்டமைப்பை அமைத்துள்ளது, 2050 அல்லது அதற்கு முன்னதாகவே கார்பன் உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்க உறுதிபூண்டுள்ளது, மேலும் இந்த மாற்றத்தை விரைவுபடுத்த அடுத்த 10 ஆண்டுகளில் $5 பில்லியன் செலவழிக்க இலக்கு வைத்துள்ளது. திரும்பக் கொடுப்பது வேதாந்தா வின் பாரம்பரியத்தில் உள்ளது, இது உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. வேதாந்தா நிறுவனத்தின் சமூக முன்முயற்சிகளை மேற்பார்வையிடும் நிறுவனமான அனில் அகர்வால் அறக்கட்டளை, பல்வேறு சமூக தாக்கத் திட்டங்களுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5000 கோடி ரூபாய் வழங்க உறுதியளித்துள்ளது மற்றும் அதன் முதன்மைத் திட்டமான
நந்த் கர், இந்தியா முழுவதும் மாதிரி அங்கன்வாடிகளை அமைக்கிறது. S&P உலகளாவிய நிறுவன நிலைத்தன்மை மதிப்பீடு 2024 இல் முதல் 5 நிறுவனங்களில் ஒன்றாக வேதாந்தா லிமிடெட் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை உலக குறியீடு இல் வேதாந்தா லிமிடெட் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒரு பெஸ்ட் பிளேஸ் டு ஒர்க் மற்றும் கின்சென்ட்ரிக் பெஸ்ட் எம்ப்லாயர் 2023 ஆக சான்றளிக்கப்பட்டது. வேதாந்தா லிமிடெட் பாம்பே பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, www.cairnindia.com / www.vedantalimited.com இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
ஊடக வினவல்களுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
வர்ஷா சைனானி
வேதாந்தா குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் குழுமத் தலைவர், தகவல் தொடர்பு, மக்கள் தொடர்பு மற்றும் பிராண்ட்
varsha.chainani@vedanta.co.in
முகுல் சத்வால்
குழுமத் தலைவர் - மக்கள் தொடர்பு மற்றும் ஊடக உறவுகள், வேதாந்தா
mukul.chhatwal@cairnindia.com
+
Comments
Post a Comment