புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபியின் பக்க விளைவுகளை குறைக்கும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான
புற்று நோயாளிகளுக்கு கீமோதெரபியின் பக்க விளைவுகளை குறைக்கும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான
இசை சிகிச்சை உத்தி
~ கீமோதெரபி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மனஅழுத்தம், கலக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுவதற்கு ஒரு தனித்துவமான மனது – உடல் இடையீட்டு சிகிச்சை ~
சென்னை: பிப்ரவரி 28, 2025: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC), DigiNxtHlt சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – ன் ஒத்துழைப்போடு “எக்கோ கேர்” புராடக்ட் தொகுப்பின் கீழ், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் தெற்காசியாவின் முதல் இசை சிகிச்சை முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த முன்னோடித்துவமான MUSICC ஆய்வு (புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பிற்கு இசை சிகிச்சை முறை) என்பது, கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும், தனிப்பயனாக்கப்பட்ட இசை ஒலி வடிவங்களை (soundscapes) திறம்பட பயன்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வைக் குறிக்கிறது.
இந்த புரட்சிகரமான MUSICC ஆய்வு திட்டமானது, பத்மபூஷன் மற்றும் சங்கீத கலாநிதி விருதுபெற்ற பிரபல வாய்ப்பாட்டு கலைஞர் திருமதி. சுதா ரகுநாதன், அப்போலோ ஆஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணைத் தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி, எக்கோ கேர், DigiNxtHlt சொல்யூஷன்ஸ் பி லிமிடெட் – ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயலாக்க அலுவலர் Ms. சுஜாதா விஸ்வேஷ்வரா மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மருத்துவ புற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர். சுஜித் குமார் முல்லப்பள்ளி ஆகியோர் முன்னிலையில், அறிமுகம் செய்தார்.
இந்த தொடக்கவிழா நிகழ்வில் பத்மபூஷன் திருமதி. சுதா ரகுநாதன் பேசுகையில், “இசைக்கும், குணமடைதலுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை வலியுறுத்தினார். அவர் பேசுகையில், மனதின் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு சக்தி வாய்ந்த வழிமுறையாக, மன நிம்மதியை மக்கள் கண்டறியும் கருவியாக இசை எப்போதும் இருந்து வருகிறது, மனதை வருடிக் கொடுக்கின்ற, குணமாக்குகின்ற மற்றும் உற்சாகம் அடையச் செய்கின்ற ஆற்றலை இசை கொண்டிருக்கிறது. புற்று நோயாளிகளுக்கு இசை சிகிச்சை முறையை வழங்குகின்ற இந்த முன்னெடுப்பு திட்ட தொடக்க நிகழ்வில் பங்கேற்பதை நான் கௌரவமாக கருதுகிறேன். தி மியூசிக் ஸ்டடி என்பது, புற்று நோயாளிகளுக்கு அவர்களது நோயை குணமாக்கும் பயணத்தில் உதவுவதற்கு மருத்துவ அறிவியலுடன் இசையை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாகும். நோயாளிகளுக்கான முழுமையான சிகிச்சை பராமரிப்பிற்காக இத்தகைய புதுமையான செயல்முறையை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் ஏற்று செயல்படுத்துவதை காண்பது மனநிறைவளிக்கிறது.” என்று அவர் கூறினார்.
மியூசிக் ஸ்டடி என்பது, நோயாளிகளின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கு ஒரு நவீன செயற்கை நுண்ணறிவு பொறியினால் பரிந்துரைக்கப்படுகின்ற தனிப்பயனாக்கப்பட்ட அலைவரிசை பண்பேற்றப்பட்ட ஒலி வடிவங்களைப் பயன்படுத்துகின்ற ஒரு தனித்துவமான முன்னெடுப்பாகும். APCC – ஐ சேர்ந்த டாக்டர். சுஜித் குமார் முல்லப்பள்ளி மற்றும் அவரது குழுவினரால் நடத்தப்படும் ஒரு தொலைநோக்கு முன்னோட்ட ஆய்வு, புற்றுநோய்க்கான டே கேர் சூழலில் செயற்கை நுண்ணறிவால் ஏதுவாக்கப்பட்ட இசை சிகிச்சையின் தாக்கத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. கீமோதெரபி அமர்வுகளின்போது 50-க்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதை அதன் முடிவுகள் வெளிப்படுத்தின. புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பில் ஒரு துணை சிகிச்சை முறையாக இசை கொண்டிருக்கும் சாத்தியத்திறனை இது எடுத்துக் காட்டியிருக்கிறது.
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட அதிர்வெண் ஒலி வடிவங்களை வழங்குவது மீது கூர்நோக்கம் கெணர்டதாக இருப்பதால், இந்த சிகிச்சை முறை தனித்துவமானது; முதன் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இது இருக்கிறது. இந்த ஒலி வடிவங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பல நரம்பணு வலைப்பின்னல்கள் மீது செயற்கை நுண்ணறிவு பொறியால் பரிந்துரைக்கப்படுகின்றன. சுய கற்றல் திறனை கொண்ட இது, நோயாளிகளின் பயன்பாடு மற்றும் இடைவினை செயல்பாடுகளிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ளும்.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய சென்னை, அப்போல்லோ புரோட்டான் கேன்சர் சென்டர் - ன் மருத்துவ புற்றுநோயியல் துறை நிபுணர் டாக்டர். சுஜித் குமார் முல்லப்பள்ளி, இச்சிகிச்சை முறையின் தாக்கம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது: “புற்றுநோய் சிகிச்சை என்பது, நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மனத்துயரையும், களைப்பையும் உருவாக்கக்கூடியது. மியூசிக் ஸ்டடி வழியாக அவர்களது மனஅழுத்தம், கலக்கத்தை குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் இசை சிகிச்சையின் சாத்தியத்திறனை ஆராய்வதே எமது நோக்கமாக இருந்தது. சிறப்பான ஒட்டுமொத்த சிகிச்சை அனுபவத்தையும் மற்றும் இந்த இசையின் உபயோகத்தால் மனக்கலக்கம் குறைந்திருப்பதையும் எமது ஆய்வு வெளிப்படுத்தியது. இவ்வாறாக உலகெங்கிலும் வழக்கமாக வழங்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை செயல்முறையில் இசை போன்ற மருந்துகள் அல்லாத பிற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது என்ற இலக்கை நோக்கி எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக இது இருக்கிறது.”
அப்போலோ நன்னெறிக் குழு மற்றும் சிடிஆர்ஐ (மருத்துவ ஆய்வுகள் பதிவகம்), ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்று நடத்தப்பட்ட இந்த ஆய்வு, HADS (மருத்துவமனை கலக்கம் மற்றும் மனச்சோர்வு அளவுகோல்) மற்றும் FACT G-7 மதிப்பாய்வுகளால் அளவிடப்பட்டவாறு மனக்கலக்கம் மற்றும் மனச்சோர்வு அளவுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதை எண்பித்திருக்கிறது.
அப்போலோ ஆஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணை தலைவர் டாக்டர். ப்ரீத்தா ரெட்டி பேசியபோது, “அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் மருத்துவ முன்னேற்றங்களின் எல்லைகளை மட்டும் நாங்கள் முன்னோக்கி நகர்த்துவதில்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை பராமரிப்பை வழங்கும் வழிமுறையையும் நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி, சீராக்கி வருகிறோம். மியூசிக் ஸ்டடி என்பது, முழுமையான குணமாக்கல் என்ற குறிக்கோள் மீதான எமது அர்ப்பணிப்பிற்கு சாட்சியமாக இருக்கிறது. புற்றுநோய் சிகிச்சையைப் பெறுகின்ற நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இசை என்ற உலகளாவிய மொழியுடன் செயற்கை நுண்ணறிவின் துல்லியத்தை ஒருங்கிணைப்பது எமது நோக்கமாகும்.” என்று குறிப்பிட்டார்.
மிக நவீன புற்றுநோய் சிகிச்சையில் முதன்மை மையமாகத் திகழும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர், நவீன தொழில்நுட்பத்தை கனிவான பராமரிப்புடன் ஒருங்கிணைப்பதை தொடர்ந்து செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் எக்கோ கேர் அமைப்பானது, நோயாளிகளின் இடைவினை செயல்பாடுகளிலிருந்து தொடர்ந்து கற்றுக் கொள்கின்ற பன்முக வகையின நரம்பணு வலையமைப்புகளை பயன்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட இசை பரிந்துரைகளை செய்வதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான புற்றுநோய் சிகிச்சையோடு இசையை நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பு, கீமோதெரபி நோயாளிகள் மத்தியில் மனக்கலக்கத்தையும், மனஅழுத்தத்தையும் மற்றும் வலி உணர்வையும் குறைப்பதற்கு உதவ ஒரு தனிச்சிறப்பான மனது – உடல் இடையீட்டு சிகிச்சை உத்தியை வழங்குகிறது.
எக்கோ கேர், DigiNxtHlt சொல்யூஷன்ஸ் பி லிமிடெட் – ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயலாக்க அலுவலர் Ms. சுஜாதா விஸ்வேஷ்வரா கூறியதாவது: “செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உடல்நல பராமரிப்பின் ஒருங்கிணைந்த கலவை, நோயாளிகளின் சிகிச்சை பராமரிப்பை புரட்சிகரமாக்கி வருகிறது. நவீன பகுப்பாய்வுகளும், இயந்திர கற்றலும், தனிப்பயனாக்கப்பட்ட குணப்படுத்தும் அனுபவங்களை எப்படி உருவாக்க முடியும் என்பதற்கு எக்கோ கேர் – ன் செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் ஒலி வடிவங்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் டாக்டர். சுஜித் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமீபத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எக்கோ கேர், தொழில்நுட்பமானது. சிகிச்சைக்கும், உணர்வு சார்ந்த நலவாழ்விற்கும் ஆதரவளித்து, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு அதிரடி மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இடையீட்டு முயற்சிகள், ஒருங்கிணைக்கப்பட்ட குணமாக்கல் செயல்முறையில் ஒரு புதிய தரநிலையை நிறுவும் மற்றும் புற்றுநோய் சிகிச்சையை அதிக மனிதாபிமானம் கொண்டதாகவும், திறன்மிக்கதாகவும் ஆக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
எக்கோர் கேர் என்பது, செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் சுகாதார தீர்வாகும். தனிப்பயனாக்கப்பட்ட ஒலி வடிவ இசை சிகிச்சையை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நோயாளியின் நிலைமைகளை மதிப்பாய்வு செய்ய பன்முக வகையின நரம்பணு வலையமைப்புகளை இது பயன்படுத்துகிறது மற்றும் பிரத்யேகமாக உருவாக்கப்படும் சிகிச்சைக்கான இசையை பரிந்துரைக்கிறது. தொடர்ச்சியான சுய - கற்றல் வழியாக தன்னை இது மாற்றிக் கொள்வதால், ஒவ்வொரு நோயாளியின் தேவைகளுக்கேற்ப இசை சிகிச்சை அனுபவம் கிடைப்பதை இது உறுதி செய்கிறது. மனித மூளையில் உள்ள ஒரு பல்வகையின நரம்பணு யலையமைப்புகளைப் போல மிகப்பெரிய குவாண்டம் டேட்டா கட்டமைப்புகளின் தொகுப்பாக இது இருக்கிறது.
வழக்கமான இசை சிகிச்சை முறையைப் போல் அல்லாமல், நரம்பியல் இசை நிபுணர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்களின் வழிகாட்டலின் கீழ் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் வழங்கப்படும் எக்கோ லேப்ஸ் என்பதாக, எக்கோ கேர் சவுண்டுஸ்கேப் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் சிகிச்சை பலன்களைப் பெறுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இது, தேவையில் பேரில் கிடைக்கப்பெறுகிறது மற்றும் நோயாளிகளின் உடல்நிலையின் அடிப்படையில் அவர்களின் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்காக தனிப்பட்ட நோயாளிகளுக்காக குறிப்பாக வழங்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இசை சிகிச்சை செயல்திட்டத்தில் வெற்றிகர அமலாக்கமானது, நோயாளிகளின் சிகிச்சை விளைவுகளையும், அனுபவத்தையும் நிலை நிறுத்துவதற்கு நவீன சிகிச்சை வழிமுறைகளை புத்தாக்கமான ஆதரவு தீர்வுகளோடு ஒருங்கிணைத்து, புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் முன்னோடி என்ற அதன் அந்தஸ்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
#புற்றுநோயை வெற்றி காண்பது
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC), சென்னை, இந்தியா குறித்து:
அப்போலோ புரோட்டான் சென்டர் என்பது, மிக நவீன புற்றுநோய் சிகிச்சை மையமாகும். இது, தெற்காசியா மற்றும் மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் முதல் புரோட்டான் தெரபி சென்டர் என்ற பெருமைக்குரியது. JCI அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாகவும் இது திகழ்கிறது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான APCC – ன் அணுகுமுறையின் அடித்தளமாக இருப்பவர்கள் அதன் வலுவான பல்வேறு துறைகளைச் சார்ந்த செயல்தளம் மற்றும் ஒரு புற்றுநோய் மேலாண்மை குழுவாக (CMT) உருவாக ஒன்றிணையும் அதிக திறன்மிக்க மருத்துவ நிபுணர்கள். ஒவ்வொரு CMT – யும், அவர்களது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சை விளைவுகளை வழங்குவது மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் முதல் மற்றும் ஒரே அமைவிடத்திற்குரிய – ரோபோட்டிக் புற்றுநோயியல் செயல்திட்டம் என்ற இதன் சமீபத்திய அறிமுகம் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் திறனை இன்னும் சிறப்பாக மேம்படுத்தியிருக்கிறது.
Comments
Post a Comment