ஸ்பேம் தீர்வை அறிமுகப்படுத்தியபின் அதன் நெட்வொர்க்கில் காணப்பட்டப் போக்குகளை பகுப்பாய்வு செய்யும் ஸ்பேம் அறிக்கையை ஏர்டெல் வெளியிட்டுள்ளது

 ஸ்பேம் தீர்வை அறிமுகப்படுத்தியபின் அதன் நெட்வொர்க்கில் காணப்பட்டப் போக்குகளை பகுப்பாய்வு செய்யும் ஸ்பேம் அறிக்கையை ஏர்டெல் வெளியிட்டுள்ளத


சென்னை, டிசம்பர் 09, 2024: ஸ்பேமுக்கு எதிராகப் போராடும் இந்தியாவின் முதல் நெட்வொர்க்கான பாரதி ஏர்டெல் தன் AI யால் இயக்கப்படும் ஸ்பேமுக்கு எதிராகப் போராடும் தீர்வை அறிமுகப்படுத்தி இரண்டரை மாதங்களுக்குள் 8 பில்லியன் (800 கோடி) ஸ்பேம் அழைப்புகள் மற்றும் 0.8 பில்லியன் (80 கோடி) ஸ்பேம் SMSகளைக் கண்டறிந்து அடையாளப்படுத்தியுள்ளது. இந்த மேம்பட்ட வழிமுறையைப் பயன்படுத்தி AI யால் இயங்கும் இந்த நெட்வொர்க் ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் (10 லட்சம்) ஸ்பேம் அழைப்பாளர்களை வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 2.5 மாதங்களில் இத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்கு எதிராக 252 மில்லியன் (25.2 கோடி) தனிப்பட்ட வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளதோடு அவற்றிற்குப் பதிலளிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 12% சரிவு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளது. ஏர்டெல் நெட்வொர்க்கில் உள்ள அனைத்து அழைப்புகளிலும் ஆறு சதவீதம் அழைப்புகள் ஸ்பேம் அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அனைத்து SMS களிலும் 2% ஸ்பேம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சுவையான அம்சம் என்னவென்றால் ஸ்பேம் அழைப்பாளர்களில் 35% பேர் லேண்ட்லைன் தொலைபேசிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் தில்லியில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ஸ்பேம் அழைப்புகளைப் பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக ஸ்பேம் அழைப்புகளைப் பெற்ற இடம் தில்லியாகும். அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் கர்நாடகா இடம் பெறுகின்றன. SMS களைப் பொறுத்தவரையில் அதிகபட்ச எண்ணிக்கை குஜராத்திலும் அதைத் தொடர்ந்து கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசத்திலும் உள்ளது. மும்பை, சென்னை மற்றும் குஜராத்தில் அதிகபட்ச வாடிக்கையாளர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போக்குகளின்படி அனைத்து ஸ்பேம் அழைப்புகளிலும் 76% ஆண் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும் வயதை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவரங்கள் ஸ்பேம் அழைப்புகளைப் பொறுத்தவரையில் நிகழ்வில் வேற்பாடுகளைக் கொண்டுள்ளது. 36-60 வயதிற்குட்பட்ட வாடிக்கையாளர்களில் அனைத்து ஸ்பேம் அழைப்புகளிலும் 48% இடம்பெற்றுள்ளனர். அதே சமயத்தில் 26-35 வயதிற்குட்பட்டவர்கள் 26% ஸ்பேம் அழைப்புகளில் இடம்பெற்று இரண்டாவது இலக்காக உள்ளனர். ஸ்பேம் அழைப்புகளில் ஏறத்தாழ 8% மட்டுமே மூத்த குடிமக்களின் கைபேசிகளில் வந்துள்ளன.

நிறுவனத்தின் இந்தக் கண்டுபிடிப்புகள் ஸ்பேம் செயல்பாடுகள் எந்தெந்த மணிநேரங்களில் நடைபெறுகின்றன என்பதையும் காட்டுகின்றன. ஸ்பேம் அழைப்புகள் காலை 9 மணி முதல் தொடங்கி நாள் செல்லச் செல்ல படிப்படியாக அதிகரிக்கின்றன. ஸ்பேம் செயல்பாட்டின் உச்சம் மதியத்தில் இருந்து மாலை 3 மணி வரை காணப்படுகிறது. அப்போது ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் வாரநாட்கள் மற்றும் வார இறுதியில் ஸ்பேம் அழைப்புகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த அழைப்புகளின் அளவு சுமார் 40% குறைகிறது. குறிப்பாக, 15,000 முதல் 20,000 ரூபாய் வரையிலான விலை வரம்பில் உள்ள சாதனங்கள் அனைத்து ஸ்பேம் அழைப்புகளிலும் தோராயமாக 22% அழைப்புகளைப் பெறுகின்றன.

பல அளவுருக்களை ஆராயும்போது AI யால் இயக்கப்படும் இந்த அமைப்பால் இந்தத் தேவையற்ற ஊடுருவல்களை நிகழ்நேரத்தில் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் அடையாளம் காண முடிந்தது என்பது தெரிய வருகிறது. இந்தச் சிறந்த முன்முயற்சி ஸ்பேம் அச்சுறுத்தலுக்கு விரிவான தீர்வை வழங்கும் இந்தியாவின் முதல் சேவை வழங்குநராக ஏர்டெல் நிறுவனத்தை நிலைநிறுத்தியுள்ளது. ஏர்டெல்லின் பரந்த வாடிக்கையாளர் தளத்தின் தனியுரிமை மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான புதிய தொழில் தரங்களை இந்தத் தீர்வு வழங்கியுள்ளது.

ஆசிரியர்க்கான குறிப்பு

சேவை மற்றும் பரிவர்த்தனை அழைப்புகளுக்காக இந்திய அரசு (GoI) 160 என்ற முன்னொட்டுடன் 10 இலக்க எண்களை ஒதுக்கியுள்ளது. வங்கிகள், மியூச்சுவல் நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குத் தரகர்கள், பிற நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், நிறுவனங்கள், SMEகள், பரிவர்த்தனை மற்றும் சேவை அழைப்புகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய மற்றும் சிறு வணிகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 160 என்ற முன்னொட்டுத் தொடர்களில் இருந்து வாடிக்கையாளர்கள் அழைப்புகளைப் பெறலாம்.

மேலும் தொந்தரவு செய்யாதீர்கள் (DND) என்பதைத் தேர்வு செய்யாத மற்றும் விளம்பர அழைப்புகளைப் பெறுவதற்கு குழுசேர்ந்த வாடிக்கையாளர்கள் 140 என்ற முன்னொட்டுடன் 10 இலக்க எண்ணில் இருந்து அவற்றைப் பெறுவார்கள். 

About Bharti Airtel Limited:

Headquartered in India, Airtel is a global communications solutions provider with over 550 million customers in 15 countries across India and Africa. The company also has its presence in Bangladesh and Sri Lanka though its associate entities. The company ranks amongst the top three mobile operators globally and its networks cover over two billion people. Airtel is India’s largest integrated communications solutions provider and the second largest mobile operator in Africa. Airtel’s retail portfolio includes high speed 4G/5G mobile broadband, Airtel Xstream Fiber that promises speeds up to 1 Gbps with convergence across linear and on-demand entertainment, streaming services spanning music and video, digital payments and financial services. For enterprise customers, Airtel offers a gamut of solutions that includes secure connectivity, cloud and data centre services, cyber security, IoT, Ad Tech and cloud-based communication. For more details visit www.airtel.com

 



Comments

Popular posts from this blog

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

Emcure Pharmaceuticals launches Arth

Trisha Krishnan (Actress)- Biography

Continuing commitment to societal advancement and impact through HOPE

Apollo Cancer Centres Collaborates With Accuray to Launch Indian Sub Continent's First Robotic Stereotactic Radiosurgery Program

காம்பஸ் குரூப் இந்தியா மூலம், FSSAI இன் ஈட் ரைட் கேம்பஸ் சான்றளிப்பை கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெற்றுள்ளது

Boult's Launches Klarity Series

முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் XVII ட்ரான்ச் II சீரிஸ் NCDகளை அறிவித்து ரூ. 250 கோடி நிதி திரட்டுகிறது

தனுஷின் 41 வது பிறந்த நாளில் அவரது குறிப்பிடத்தக்க திரைப்பட வாழ்க்கையை ஏர்டெல் Xஸ்ட்ரீம் பிளேயில் (Airtel Xstream Play) கொண்டாடுங்கள்

MGM Healthcare Performs Historic Back-to-Back Heart and Lung Transplants ~ Dr. KR Balakrishnan and team have performed four heart and one dual lung transplant within 30 hours. Chennai,