நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போரிட இந்தியாவின் முதல்
நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போரிட இந்தியாவின் முதல்
“லங்-லைஃப்” ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தை அறிமுகம் செய்யும் அப்போலோ கேன்சர் சென்டர்
சென்னை: டிசம்பர் 3, 2024: நுரையீரல் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சையை வழங்குவதில் இந்தியாவில் முதன்மை வகிக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACCs), நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக இந்தியாவின் முதல் லங்-லைஃப் ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் அனைத்து புற்றுநோய் நேர்வுகளிலும் 5.9% பங்கினையும் மற்றும் புற்றுநோயுடன் தொடர்புடைய இறப்புகளில் 8.1% பங்கினையும் கொண்டிருக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதே இந்த புரட்சிகர முன்னெடுப்பு திட்டத்தின் நோக்கமாகும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவது சிறப்பான சிகிச்சை விளைவையும் மற்றும் உயிர்பிழைப்பு விகிதத்தையும் மேம்படுத்த உதவுகிறது. (LINK)
புற்றுநோய் மீதான ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமையால் புற்றுநோய் நேர்வுகள் மற்றும் இறப்பு விகிதம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள GLOBOCAN 2020 மதிப்பீடுகள் புற்றுநோய் காரணமாக ஏற்படும் இறப்பில் முதன்மை காரணமாக 2020-ம் ஆண்டில் 1.8 மில்லியன் இறப்புகளுடன் (18%) நுரையீரல் புற்றுநோய் தொடர்ந்து இருந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.
கீழ்க்கண்டவை போன்ற நுரையீரல் புற்றுநோய்க்கு மிக அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களை இலக்காக கொண்டு லங்-லைஃப் ஸ்க்ரீனிங் செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது: (i) 50 மற்றும் 80 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வயது பிரிவிலுள்ள நபர்கள், (ii) அறிகுறிகள் வெளிப்படாதவர்கள் (நுரையீரல் புற்றுநோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள்), (iii) புகைப்பிடிக்கும் கணிசமான வரலாறு உள்ள நபர்கள் மற்றும் (iv) குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ள நபர்கள்.
குறைவான கதிர்வீச்சுள்ள சிடி ஸ்கேன் வழியாக, செய்யப்படும் முன்னதாகவே ஸ்க்ரீனிங், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவதற்கு உதவும் என்பதால், நோயாளிகளின் உயிர்பிழைப்பு விகிதங்களை கணிசமாக அதிகரிக்கும். இருப்பினும், அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுள் ஏறக்குறைய 80% அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவருடன் ஸ்க்ரீனிங் செயல்முறை குறித்து ஒருபோதும் விவாதித்ததில்லை. நுரையீரல் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் குறித்த தகவலளிப்பையும், விழிப்புணர்வையும் அதிகரிப்பதன் மூலம் ஆரம்பநிலை நோய் கண்டறிதலை ஏதுவாக்குவது மிக முக்கியம். இதன்மூலம் குறிப்பாக அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களின் உயிர்களை காப்பாற்ற முடியும்.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் – ன் குழும புற்றுநோயியல் சர்வதேச செயல்பாடுகள் துறையின் இயக்குனர் திரு. ஹர்ஷத் இத்திட்டம் குறித்து கூறியதாவது: “இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சையை சிறப்பாக முன்னெடுக்கும் அப்போலோ கேன்சர் சென்டரின் பயணத்தில் லங்-லைஃப் ஸ்க்ரீனிங் செயல்திட்டம் என்ற முன்னோடித்துவ முன்னெடுப்பை அறிமுகம் செய்வது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாகும். மக்கள் அவர்களது ஆரோக்கியத்தை முனைப்புடன் பாதுகாக்கவும் மற்றும் சாதிப்பதற்கான சாத்தியங்கள் நிறைந்த வாழ்க்கையை நடத்தவும் ஆதாரவளங்களையும், அறிவையும் அவர்களுக்கு வழங்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு இத்திட்டம் ஒரு நல்ல சாட்சியமாகும். இந்த முன்னெடுப்பின் வழியாக, இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்விற்கான தரஅளவுகோலை உயர்த்துவதற்கான தனது செயல்பாட்டில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் தொடர்ந்து உறுதியாக இருப்பது நேர்த்தியாக வெளிப்படுத்தப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக நாடு முழுவதிலும் உகந்த நடவடிக்கைகளும், ஒத்துழைப்பு செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட இத்திட்டத்தின் அறிமுகம் மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது.”
அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் நுரையீரலியல் சிறப்பு மருத்துவர் டாக்டர். ஸ்ரீதர் ரவிச்சந்திரன் பேசுகையில், “நுரையீரல் புற்றுநோய், உலகளவில் அதிக ஆபத்தான புற்றுநோய்களுள் ஒன்றாக இருக்கிறது; ஆனால், ஆரம்பத்திலேயே இதை கண்டறிவது, பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்து வாழும் வாய்ப்புகளை குறிப்பிடத்தக்க அளவு மேலும் மேம்படுத்துகிறது. எமது லங்-லைஃப் ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தின் மூலம் அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களை தொடக்கத்திலேயே அடையாளம் காண்பது எமது நோக்கமாகும். இத்திட்டமானது, குறைந்த கதிர்வீச்சுள்ள சிடி ஸ்கேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது; கதிர்வீச்சுக்கு வெளிப்படுதலை இது குறைப்பதோடு, நோயறிதலில் துல்லியத்தை மிக அதிகமாக்குகிறது. புகைபிடிக்கும் வரலாறுள்ள நபர்கள், பிறரது புகைபிடித்தலுக்கு வெளிப்படுத்தப்படும் நபர்கள் அல்லது குடும்பத்தில் நுரையீரல் புற்றுநோய் வரலாறு உள்ள நபர்களுக்கு இத்திட்டம் குறிப்பாக அதிகம் பயனளிப்பதாக இருக்கும். சிகிச்சை அளிக்கக்கூடிய கட்டத்தில் நுரையீரல் புற்றுநோயை கண்டறிவதன் மூலம் சிறப்பான சிகிச்சை விளைவுகளை நோயாளிகளுக்கு நாங்கள் வழங்குகிறோம்; அதிக ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை நாங்கள் உருவாக்குகிறோம்.” என்று கூறினார்.
அப்போலோ ஸ்பேஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் – வானகரத்தின் நுரையீரலியல் மருத்துவர் டாக்டர். PB. வந்தனா பேசுகையில், “அப்போலோ கேன்சர் சென்டரின் லங்–லைஃப் ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தின் அறிமுகம், இந்தியாவில் பயமுறுத்தும் வகையில் அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய் பிரச்சனையை கட்டுப்படுத்துவதில் ஒரு மிக முக்கிய நடவடிக்கையாக இருக்கிறது. இந்த விரிவான ஸ்க்ரீனிங் திட்டத்தின் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவது மீது நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இந்த தொடக்க நிலையில் தான் பயனளிக்கும் சிகிச்சை மற்றும் மீண்டும் குணமடைதலுக்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகமாக இருக்கும். மிக நவீன, குறைவான கதிர்வீச்சுள்ள சிடி ஸ்கேன்களை பயன்படுத்தும் இத்திட்டம், நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமையளிக்கும் அதே வேளையில், துல்லியமான நோயறிதல் செய்யப்படுவதையும் உறுதி செய்கிறது. ஒருங்கிணைந்து செயல்படுகின்ற நாங்கள், புற்றுநோய்க்கான சிகிச்சையை மட்டும் வழங்குவதில்லை; உரிய நேரத்தில் இடையீடு நடவடிக்கைகள் மற்றும் தனிநபர்களது தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட முழுமையான சிகிச்சை திட்டத்தின் வழியாக எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றத்தை உருவாக்குகிறோம்.” என்று கூறினார்.
தேனாம்பேட்டையிலுள்ள அப்போலோ கேன்சர் சென்டரின் நுரையீரலியல் நிபுணர் டாக்டர். ஜெபின் ரோஜர் S. பேசுகையில், “நுரையீரல் புற்றுநோய் என்பது, மௌனமாக தாக்கும் ஒரு அச்சுறுத்தலாகும்; வளர்ந்து, முதிர்ச்சியடைந்த பிறகே பெரும்பாலான நேரங்களில் இது கண்டறியப்படுகிறது. லங்-லைஃப் ஸ்க்ரீனிங் திட்டத்தை தொடங்கியிருப்பதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகுமுறையையே அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புரட்சிகரமாக மாற்றி வருகிறது. துல்லியமான நோய் கண்டறிதலை நோயாளியின் மீது கூர்நோக்கம் செலுத்தும் சிகிச்சையுடன் இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது. தொடக்க நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிவதன் மூலம் நோயாளிகளின் உயிர்பிழைப்பு விகிதங்களை இது கணிசமாக மேம்படுத்துகிறது. செயலூக்கமுள்ள சிகிச்சை பராமரிப்பு உயிர்களை காப்பாற்றவும், குணமடைவதற்கு சிறந்த வாய்ப்பை நோயாளிகளுக்கு வழங்குவதையும் எமது முன்னெடுப்பு திட்டம் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையில் நேர்த்திநிலையை மறுவரையறை செய்யும் குறிக்கோளில் எமது பொறுப்புறுதியை இது வலுவாக எடுத்துக்காட்டுகிறது.” என்று கூறினார்.
இந்தியாவில் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங், சிகிச்சைக்கான தரநிலைகளையும் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்கும் தனது செயல்பாட்டில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் தொடர்ந்து அதிக உறுதியுடன் இருக்கிறது. லங்-லைஃப் ஸ்க்ரீனிங் செயல்திட்ட தொடக்கத்தின் மூலம் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிரான போரில் நம் நாடு முழுவதிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கையும், ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்படுவதற்கு உத்வேகம் கிடைக்கும் என்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் நம்புகிறது.
#புற்றுநோயை வெல்வோம்
அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.
உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.
இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment