காஸ்ட்ரால் இந்தியா கேதார் லேலே-ஐ நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது
காஸ்ட்ரால் இந்தியா கேதார் லேலே-ஐ நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது
கேஸ்ட்ராலில் நிர்வாக இயக்குனராக இருந்து தற்போது குளோபல் CMO-ஆக பதவியேற்கும் சந்தீப் சங்வானின் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்
சென்னை: முன்னனி லூப்ரிகன்ட் உற்பத்தி நிறுவனமான காஸ்ட்ரால் இந்தியா லிமிடெட் ஆனது கேதார் லேலேயை 1 நவம்பர் 2024 முதல் தனது புதிய நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளதை அறிவித்துள்ளது.
கேதார் இரண்டு தசாப்தங்களாக சிறப்பான முறையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெடில் (HUL) பணிபுரிந்த பின் தற்போது காஸ்ட்ரால் இந்தியாவில் இணைந்துள்ளார். HUL-ல் அவர் கடைசியாக செயல்பாட்டு இயக்குனராக பணியாற்றிய போது தெற்கு ஆசியாவின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் அபிவிருத்திக்கு பொறுப்பேற்றிருந்தார். உயர்-செயல்திறன் அணிகளுக்கு தலைமை வகிப்பதிலும், வளர்ச்சியை உந்துசெலுத்துவதிலும் ஆக்கப்புத்தாக்கத்தை பேணுவதிலும் ஆழ்ந்த திறன் பெற்றிருக்கும் அவர் காஸ்ட்ரால் இந்தியாவின் எதிர்காலத்தை பரிணாம வளர்ச்சியடையும் ஆட்டோமோட்டிவ் மற்றும் லூப்ரிகன்ட்ஸ் தொழில்துறையில் உந்துசெலுத்துவதில் முக்கிய பங்காற்றவிருக்கிறார்.
இந்த நியமனத்தை பற்றி கருத்து கூறுகையில் காஸ்ட்ரால் இந்தியா லிமிடெட்-ன் சேர்மன் ராகேஷ் மகிஜா, "நாங்கள் கேதாரை காஸ்ட்ரால் இந்தியாவுக்கு வரவேற்பதில் மிகவும் உவகையடைகிறோம். வளர்ச்சியை உந்துசெலுத்துவதிலும் சிக்கலான சந்தைகளில் பெரிய அணிகளை தலைமை தாங்குவதிலும் அவரது பரந்த அனுபவம் காஸ்ட்ரால் இந்தியாவிற்கு தலைமை வகிப்பதற்கு சிறந்த தேர்வாக அமைய உதவுகிறது. இந்த சந்தர்பத்தில் நான் கடந்த ஒருசில வருடங்களில் சிறப்பான தலைமையை வழங்கியதற்கு சந்தீப்பிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சந்தையில் எங்களது நிலையை வலுவாக்குவதில் அவருடைய பங்களிப்புகள் மதிப்பற்றதாக இருந்தன மற்றும் அவரது புதிய சர்வதேச பதவியில் அவருக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்," என்று விளக்கினார்.
தனது கருத்துக்களை பகிருகையில் காஸ்ட்ரால் இந்தியா லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் கேதார் லேலே கூறுகையில், "லூப்ரிகன்ட்ஸ் தொழில்துறையில் காஸ்ட்ரால் பரந்தளவில் போற்றப்படும் ஒரு பிரான்ட் மற்றும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்காக காஸ்ட்ரால் இந்தியாவிற்கு தலைமையேற்பது பற்றி நான் மிகவும் உவகையடைகிறேன். எனது முதல் முக்கியத்துவம் எதுவென்றால் எங்கள் ப்ராடக்ட் பட்டியலை திறனுறு அறிமுக மாடல்கள் மூலம் தொடர்ந்து விரிவாக்கி வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதே. நாங்கள் தொடர்ந்து எங்கள் நம்பகத்தன்மை வாய்ந்த பிரான்டையும், ஆக்கப்புத்தாக்க ப்ராடக்ட் பட்டியலையும் மிக நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்தியாவின் தானியங்கி துறையில் முன்னனியில் இருப்பதை உறுதிபடுத்துவோம். பல்வேறு பிரிவுகள் மற்றும் புவியியல் பகுதிகளில் பணியாற்றிய எனது அனுபவம், ஆனது ஆக்கப்புத்தாக்க மனநிலை மற்றும் காஸ்ட்ராலின் பெரிய வளர்ச்சி திட்டங்களுடன் இணக்கம் கொள்ளுகின்ற செயல்பாட்டு சிறப்புக்கான ஒழுங்கு ஆகியவற்றை விதைக்கும் அதே வேளையில் வெற்றி குழுக்களை கட்டமைப்பதற்கு என்னை நன்றாக தயார்படுத்தியுள்ளது," என்று கூறினார்.
தொய்வற்ற தலைமை மாற்றத்தை உறுதிபடுத்த விலகும் நிர்வாக இயக்குனரான சந்தீப் சங்வானுடன் 1 செப்டம்பர் 2024 அன்று முதல் கேதார் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த பதவி ஒப்படைப்பு காலம் ஆனது கேதாருக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிய யுக்திபூர்வ நுண்ணறிவுகளை பெறவும் முக்கியஸ்தர்களுடன் வலுவான உறவுகளை பேணவும் அனுமதித்துள்ளது.
இந்த தலைமை பரிமாற்றத்தின் ஒரு அங்கமாக லன்டனின் காஸ்ட்ரால் தலைமையகத்தில் உலகளாவிய முதன்மை மார்கெட்டிங் அதிகாரியாக சந்தீப் 1 நவம்பர் 2024 முதல் பதவியேற்பார்.
இந்தியாவில் கேதார் தலைமை பீடத்தில் இருந்தவாறே காஸ்ட்ரால் ஆனது இந்திய துணைகண்டத்தில் தொடர் வெற்றிக்கு நல்ல நிலையை பெற்றுள்ளது. நிறுவனம் தனது சந்தை தலைமையிடத்தை நீடிக்க செய்வதற்கு உறுதிகொண்டுள்ளது மற்றும் ஆக்கப்புத்தாக்கத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவும் தனது முக்கியஸ்தர்களுக்காக வெகுமதியளிக்கும் சுற்றுசூழலை பேணவும் முனைப்புடன் உள்ளது.
About Castrol India Limited:
Castrol India Limited, part of the bp group, is a leading lubricant company with a 115-year presence in India. Known for its innovation and high-performance products, Castrol offers trusted brands like Castrol CRB, Castrol GTX, Castrol Activ, Castrol MAGNATEC, Castrol EDGE, and Castrol POWER1. Serving various sectors including automotive, mining, machinery, and wind energy, Castrol India operates three blending plants and a wide distribution network, reaching over 150,000 retail outlets nationwide. Globally, Castrol has been driving technological advancements for 125 years. For more information, visit www.castrol.co.in.
Comments
Post a Comment