API-அடிப்படையிலான இணக்கக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள இந்தியாவை ஊக்குவிக்கின்றதன் மூலம், Tally நிறுவனம் 3 ஆண்டுகளில் 30-40% CAGR ஐ எதிர்பார்க்கிறது
API-அடிப்படையிலான இணக்கக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள இந்தியாவை ஊக்குவிக்கின்றதன் மூலம், Tally நிறுவனம் 3 ஆண்டுகளில் 30-40% CAGR ஐ எதிர்பார்க்கிறது
~முழுமையாக இணைக்கப்பட்ட GST திறன் மூலம், இணைக்கப்பட்ட அனுபவத்தை மறுவரையறை செய்கிறது மற்றும் அனைத்தும் புதிய TallyPrime 5.0 மூலம் உலகளாவிய பன்மொழி ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துகிறது~
சென்னை, செப்டம்பர் 12, 2024: இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமான வேகமாக வளர்ந்து வரும் MSME துறையை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான தொலைநோக்குடன் டேலி சொலுஷன்ஸ் நிறுவனம் அதன் இணைக்கப்பட்ட சேவைகளின் தொகுப்பை மேம்படுத்துகின்ற வகையில் அனைத்தும் புதிய TallyPrime 5.0 இன் உலகளாவிய அறிமுகத்தை இன்று அறிவித்தது. வணிக மேலாண்மை மென்பொருளை வழங்கும் ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டேலி, API-அடிப்படையிலான வரி தாக்கல் செய்வதன் மூலம், இணைக்கப்பட்ட சேவைகளில் ஒரு புதிய முன்வடிவைக் கொண்டுவருகிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் நடுத்தர வெகுஜன பிரிவினருக்கான வணிகச் செயல்முறைகளை மேம்படுத்தும் இந்த நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த அறிமுகம் உள்ளது.
'இணைக்கப்பட்ட ஜிஎஸ்டி' உடனான இந்த சமீபத்திய பதிப்பு, ஜிஎஸ்டி போர்ட்டலுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, அனைத்து ஆன்லைன் ஜிஎஸ்டி செயல்முறைகளுக்கும் ஒரு ஒருங்கிணைந்த இடைமுகமாகச் செயல்படும். இ-இன்வாய்சிங் மற்றும் இ-வே பில் உருவாக்கும் திறன், வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு போன்றவற்றை உள்ளடக்கிய டேலி இன் இணைக்கப்பட்ட அனுபவத்தை மேலும் பலப்படுத்துகிறது. கூடுதலாக, மத்திய கிழக்கு மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் அதிகரித்து வரும் இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், TallyPrime 5.0, ஒலிப்பு ஆதரவுடன் அரபு மற்றும் பங்களா மொழி இடைமுகங்களுக்கு நீட்டிக்கப்படுகின்ற அதிநவீன பன் மொழி திறன்களை சேர்க்கிறது.
இந்த புதிய தீர்வு, ஜிஎஸ்டி போர்ட்டலுக்கான நேரடி இணைப்பு* மூலம் விரைவான தரவு பதிவேற்றம்/பதிவிறக்கம், ஜிஎஸ்டிஆர்1 ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்யும் திறன், பிரத்யேகமாக டேலிக்கான
ஜிஎஸ்டிஆர்-1 மறுசீரமைப்பு மற்றும் ஜிஎஸ்டிஆர்-3B மறுசீரமைப்பு அம்சங்கள், போன்ற கூடுதல் மறுசீரமைப்பு நெகிழ்வுத்தன்மை, ஆபத்து அடையாளம் மற்றும் லெட்ஜர் உருவாக்கத்தில் உள்ளீட்டு வரி வரவு ( ITC ) ஆகியவற்றை செயல்படுத்துகின்ற GST போர்ட்டலுடன் ஒரு நேரடி இணைப்பு* உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களின் ஒரு வரம்பை உள்ளடக்குகிறது. கூடுதலாக இந்த அம்சமானது, ஒரு ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொண்டுவருகின்ற வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய ‘கணக்குப்பதிவு முதல் வரி தாக்கல் செய்வது வரை’ ஆதரிக்கிறது.
இந்த புதிய அறிமுகம் மற்றும் பிற தயாரிப்பு வரிசை முன்முயற்சிகள் மூலம், 30-40% CAGR வளர்ச்சியை எதிர்பார்க்கின்ற அதே வேளையில், அடுத்த 3 ஆண்டுகளில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான அதன் தற்போதைய பயனர் தளத்தை 50% விரிவுபடுத்துவதற்கு டேலி நோக்கம் கொண்டுள்ளது. டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தேஜாஸ் கோயங்கா தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டபோது, “குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வணிகச் செயல்பாடுகளை எளிமையாக்க உதவும் வகையில் எங்களது தொழில்நுட்பத்தை நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். எங்களின் சமீபத்திய வெளியீடு, இந்திய வணிகங்களுக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதை தொந்தரவில்லாத மற்றும் எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிகங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே API-அடிப்படையிலான வரித்தாக்கலைப் பயன்படுத்துகிறது, ஆனால் நாங்கள் அதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த சமீபத்திய வெளியீட்டின் மூலம், அவர்களின் நேரத்தை 60%-70% சேமிக்க அவர்களுக்கு உதவுகின்ற வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அனைத்தையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி தாக்கல் செயல்முறையை ஒருங்கிணைப்பதே எங்கள் குறிக்கோள் ஆகும். இந்த வெளியீடு அவர்களின் சப்ளையர்களின் ஜிஎஸ்டி யின் நிகழ்நேர நிலையை வழங்கும், அவர்களின் உள்ளீட்டு வரி வரவை பாதுகாக்கும்."என்று கூறினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு பயனுள்ள தொழில்நுட்ப தீர்வுகளை நாடுகின்றன, மேலும் TallyPrime 5.0 ஒரு எளிய, பாதுகாப்பான மற்றும் நம்பகமான தீர்வை வழங்குகிறது. இது புதிய அம்சங்களுடன் வணிக நிர்வாகத்தை மேம்படுத்துகிறது மற்றும் e-இன்வாய்ஸ் உருவாக்கம், பயனர் நட்பு டேஷ்போர்டுகள், வாட்ஸ்அப் ஒருங்கிணைப்பு மற்றும் எக்செல் பதிவிறக்கங்கள் போன்ற
ஏற்கனவே உள்ளவற்றில் கட்டமைக்கிறது. இந்த புதிய வெளியீடு, வணிகங்களை அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைப்பதற்கும் மற்றும் பயனர் அனுபவத்தை உயர்த்துவதற்குமான டேலி நிறுவனத்தின் நோக்கத்துடன் இணங்குகிறது. செயலில் உள்ள அனைத்து TSS சந்தாதாரர்களுக்கும் இந்த சமீபத்திய வெளியீடு இலவசமாகக் கிடைக்கிறது.
* டேலிபிரைம் 5.0 GSTR1, GSTR2A, GSTR2B, GSTR3B மற்றும் CMP-08க்கான ஆன்லைன் செயல்பாட்டை அனுமதிக்கிறது
Comments
Post a Comment