நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது.
நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (NCRI) 5 ஆம் ஆண்டு கருத்தரங்கு சென்னையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வினை, NCRI உடன் இணைந்து, சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை இணைந்து நடத்துகிறது. நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கு, சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சையினை நடைமுறைப்படுத்துவதே NCRI-இன் பிரதான குறிக்கோள் ஆகும். நரம்பியல் சிகிச்சைத் துறையை முன்னேற்றுவதற்கும், நோயாளிகளின் ஆரோக்கியத்தை சிறப்பான முறையில் மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குப் பல்முனை பராமரிப்பு வழங்குவதற்கும், NCRI தொடர்ந்து ஊக்கத்துடன் செயற்பட்டு வருகிறது. நரம்பியல் துறையின் தற்போதைய அறிவியல் முன்னெடுப்புகளை, பிற மருத்துவப் பிரிவு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, சிறந்த மருத்துவ நடைமுறையை வழங்கும் அரும்பணியைச் செய்துவருகிறது NCRI. கல்வி, ஆராய்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு, அவர்களுக்குப் பன்முனை பராமாரிப்பு, புதுமையான மற்றும் பல்துறை மருத்துவர்களை இணைக்கும் விதமான சிகிச்சை முறை முதலியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது NRCI. நியூரோக்ரிட்டிகல் கேர் சொசைட்டி ஆஃப...